செவ்வாய், பிப்ரவரி 02, 2010

உண்மை அறியும் குழு கோரிக்கை என்எல்சி தலைவர் மீது சி.பி.ஐ.விசாரணை

உண்மை அறியும் குழு கோரிக்கை என்எல்சி தலைவர் மீது சி.பி.ஐ.விசாரணை

கடலூர்: உண்மை அறியும் குழுவின் மதுரை வழக்கறிஞர் ரத்தினம், மக்கள் கல்வி இயக்கம் பேராசிரியர் திண்டிவனம் கல்யாணி, மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் பேராசிரியர் சென்னை மார்க்ஸ், மக்கள் உரிமை கூட்டமைப்பு புதுச்சேரி சுகுமாறன், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் திருவாரூர் சிவகுருநாதன் ஆகியோர் நேற்று கடலூரில் நிருபர்களிடம் கூறியதாவது;
என்.எல்.சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி பல முறைகேடுகள் செய்துள்ளதாக புகார்கள் உள்ளன. இது குறித்த தகவல்களை பரப்பினார்கள் என ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவர் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கையை வாபஸ்பெற வேண்டும். அவர்களுக்கு பணி நீக்க காலத்திற்கு முழு ஊதியம் அளிக்க வேண்டும். நியாயமற்ற முறையில் இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரி யான துரைக்கண்ணு, பரமசிவம் ஆகியோரது இடமாற்ற ஆணைகள் ரத்து செய்யப்பட வேண்டும். பரமசிவத்திற்கு இயல்பாக வரவேண்டிய பதவி உயர்வு உடனடியாக அளிக்கப்பட வேண்டும். ஊழியர்களை பயமுறுத்தும் வகையில் நிர்வாகம் வெளியிட்டள்ள அறிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். ஊழியர்களை கண்காணிக்க தனியார் உளவுத்துறையை பணியமர்த்தப்போவ தாக ஆணையை வெளியிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிகள் ஒருவரிடமே குவிக்கப்படுவது ஊழல்களுக்கு வழிவகுக்கிறது. இப்பதவிகள் பிரிக்கப்பட்டு தனித்தனி அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Courtecy: Dinakaran 25.12.2009

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக