திங்கள், பிப்ரவரி 15, 2010

மனித உரிமை ஆர்வலர் குழு விசாரணை


மனித உரிமை ஆர்வலர் குழு விசாரணை





சென்னை, பிப்.27: ஐகோர்ட் மோதல் சம்பவம் குறித்து மனித உரிமை ஆர்வலர்களைக் கொண்ட உண்மை அறியும் குழுவினர் இன்று உயர் நீதிமன்றத்தில் நேரில் விசாரணை நடத்தினர்.

இம்மாதம் 19-ம் தேதி உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பான உண்மைகளை கண்டறியும் விசாரணையில் பாப்பையா, ராமசாமி, வி.எஸ். கிருஷ்ணா, மார்க்ஸ், சிவக்குமார், சுகுமாரன், ராஜேந்திரன், சிவகுருநாதன், கோச்சடை ஆகிய 9 மனித உரிமை ஆர்வலர்களை கொண்ட குழு ஈடுபட்டுள்ளது.

இக்குழுவினர் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள், காயமடைந்த வக்கீல்கள், பொதுமக்கள், போலீசார் என பல்வேறு தரப்பினரிடமும் நேரில் விசாரணை நடத்தினர்.

மோதலின் போது சேதம் அடைந்த நீதிமன்ற கட்டிடங்களையும் இக்குழுவினர் பார்வையிட்டனர். இந்த குழுவின் அறிக்கை நாளை செய்தியாளர்கள் முன்பு வெளியிடப்படும் என்று இதில் இடம் பெற்றுள்ள மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.

இக் குழுவில் இடம் பெற்றுள்ள 9 மனித உரிமை ஆர்வலர்களும், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, புதுவை ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக