சனி, மே 14, 2011

தேர்தல் முடிவுகள்-2011







           தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடியே வெளியாகி உள்ளது.இனியாவது மு.கருணாநிதி திருந்தினால் நல்லது.ஆனால் காலம் கடந்துவிட்டது.மு.கருணாநிதியின் குடும்ப அழிவை இனி யாராலும் தடுக்கமுடியாது.ஜெ.ஜெயலலிதா யாருக்காவது நன்றி சொல்ல நினைத்தால் மு.கருணாநிதிக்கு மட்டும் சொன்னால் போதுமானது.
 
         அ.இ.அ.தி.மு.க. ஆளும் கட்சி;தேமு.தி.க. எதிர்க்கட்சியாக வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது.மு.கருணாநிதியின் தி.மு.க.விற்கு எதிர்க்கட்சியாககூட முடியாது போல் தெரிகிறது.இந்த வாய்ப்பைக்கூட மு.கருணாநிதிக்கு வழங்கத் தயாராக இல்லை.

          மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.அ.இ.அ.தி.மு.க.வெற்றியா
ல் அல்ல.தி.மு.க.மற்றும் மு.கருணாநிதி குடும்பத்தின் தோல்வியால். ஜெ.ஜெயலலிதா எனும் தீய சக்தியை வெற்றி பெற வைத்ததில் மு.கருணாநிதியின் பங்கு கணிசமானது.
   
       தே.மு.தி.க.எதிர்க்கட்சி ;விஜயகாந்த் எதிர்க்கட்சித்தலைவர்.தி.மு.க.எதிர்க்கட்சியாகக்கூட இருக்க மக்கள் விரும்பவில்லை.ஊழலில் ஜெ.ஜெயலிதாவை விஞ்சியதுதான்  மு.கருணாநிதியின் ஒரே சாதனை!  மு.கருணாநிதியும் அவரது குடும்பமும் திருந்துமா? மு.கருணாநிதியின் குடும்பம் அவ்வளவு சீக்கிரம் திருந்திவிடும் என்று நம்ப முடியவில்லை.ஊழல் வழக்கில் மாட்டிக்கொண்டவர்கள் முதலில் மீள்வதே சிரமம்.பிறகு திருந்த நேரமேது? 
  
      நாளை(14 .05 .2011 ) கனிமொழிக்கு திகார் சிறைக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது.என்னவாயிற்று மு.கருணாநிதிக்கு? இதுவரை தோல்வியை ஒப்புக்கொண்டு ஊடகங்களிடம் பேசவில்லை.கனிமொழி கைதுக்கு பிறகுதான் பேசுவாரோ? அதிகாரம் மனிதர்களை மிகவும் மாற்றிவிடுகிறது.
       எங்களுக்கு தோல்வி துண்டு மாதிரி!என்றெல்லாம் வசனம் பேசும் வாய்ப்பை மு.கருணாநிதி ஏன் நழுவவிட்டார்? எல்லாம் குடும்பப்பாசம்!


1 கருத்து:

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.

கருத்துரையிடுக