36 – வது
சென்னைப்
புத்தகச்சந்தை – ஓர் பார்வை -மு.சிவகுருநாதன்
இவ்வாண்டு சென்னைப் புத்தகச்சந்தை புதிய இடத்தில் ஜனவரி 11 முதல் 23 முடிய நந்தனம் YMCA வளாகத்தில் நடந்து முடிந்துள்ளது. இக்கண்காட்சியில் ஜனவரி 18, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் சுற்ற வாய்ப்பு கிடைத்தது. வழக்கம்போல புத்தகக்கட்டுகளுடன்
வீடு திரும்பினேன். புதிய இடத்தில் புத்தகச்சந்தை நடப்பது குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. வழக்கமான பல்வேறு குறைபாடுகளுடந்தான் நிகழ்வுகள் அரங்கேறின என்றாலும் வேறு வழியின்றி அதை நுகர்ந்து திரும்பவேண்டியுள்ளது.
எந்த இடமானாலும் புழுதிப்புயலில் சிக்கவேண்டியுள்ளது. தொடக்க காலத்தில் புத்தகச் சந்தைக்குள் புழுதிப்புயல் ஏற்பட்ட பின்னர் தரையில் கார்பெட் விரிக்கப்பட்டது. இன்று கண்காட்சிக்கு நடந்துவருபவர்கள், கார்கள் எழுப்பும் புழுதியில் நனைய வேண்டியுள்ளது. இதற்கு ஏதாவது செய்தால் நன்றாக இருக்கும்.
வழக்கபோல்
வாசலில் மேடைபோட்டு வாய் வியாபாரிகள் கூச்சல்போட்டு வருகின்றனர். இது புத்தக விற்பனையை எப்படி உயர்த்தும் என்பது என்னைப் போன்றவர்களுக்கு புரிபடவே இல்லை. இதனால் கூட்டம் கூடும், புத்தகம் விற்கும் என்று அமைப்பாளர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இது நடக்கிறதா என்பதை அவர்கள்தான் விளக்கவேண்டும். இப்படி கூடும் கூட்டம் பெருமளவு புத்தகம் வாங்கும் என்று சொல்வதிற்கில்லை.
சிறிய
பதிப்பகங்கள் விற்பனை குறைவு என்கின்றன. வழக்கம்போல் சில குறிப்பிட்ட பெரும் பதிப்பகங்கள் அதிக விற்பனையை அள்ளுகின்றன. ஒட்டு மொத்த விற்பனை ஆண்டுக்காண்டு அதிகரிக்கிறது. ஆனால் இவையனைத்தும் 600 க்கும் மேற்பட்ட கடைகளில் 100 க்கும் கடைகளுக்கு மட்டும் இந்த பணம் செல்கிறது. இது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஒத்துக்கொள்ளத்தான் பலரால் இயலுவதில்லை.
பெரும்
லாபம் பார்க்கும் பெரிய வணிகப் பதிப்பகங்கள் வெளியிடும் நூற்களின் தரம் கேள்விக்குரியது. விளம்பரம், ஊடகங்களின் முன்மொழிதல் போன்றவற்றால் மோசமான நூற்களுக்கு பெருத்த வரவேற்பு கிடைக்கிறது. நல்ல நூற்களுக்கு இந்த மாதிரியான வாய்ப்பு இருப்பதில்லை. சென்ற ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெரும்போது தினமணி சென்னைப் பதிப்பில் சில நல்ல நூற்களை அறிமுகம் செய்தார்கள். இவ்வாண்டு அதுகூட நடக்கவில்லை.
ஓர்
தொலைக்காட்சி விவாத்த்தில் பங்குகொண்ட பலரால் ஒரு குறிப்பிட்ட வார இதழில் வெளியானவைகளே சிறந்தனவாக சிலாகிக்கப்பட்டன. நமது வாசிப்பனுபவம் இந்த எல்லையைத் தாண்டி விரிவடையாது வருந்தற்குரியது. இதுபோன்றவைகளை மிகவும் அறிவுப்பூர்வமானதாக நம்பிக்கொண்டு,இந்தவகையான media booster ஆல் சிலர் ஏமாறுகின்றனர். இதனால் மீண்டும் மீண்டும் பெரும் வணிக நிறுவனங்களே ஆதாயம் பெறுகின்றன.
நூல் தயாரிப்புச் செலவு அதிகரித்துவிட்டது என்பதை ஒத்துக்கொண்டாக வேண்டும் என்றாலும் ஒரே அளவு, தரமுள்ள புத்தகங்களுக்கு பதிப்பகங்கள் வேறுபட்ட விலை நிர்ணயம் செய்வதை நாம் எப்படி புரிந்துகொள்வது? இங்கு அறமதிப்பீடுகளுக்கு இடமில்லை. வாய்கிழிய அறம் பேசுபவர்களும் இங்கு வியாபாரிகள்தான் என்பதை நிருபிக்கின்றனர்.
புத்தகத்
தேடல் உள்ளவர்கள் பொறுமையாகத் தேடினால் நல்ல சில நூற்கள் கிடைக்க வாய்ப்புண்டு. மயிலை.சீனி.வேங்கடசாமியின் ஒன்றிரண்டு நூல்கள் (உ.ம். களப்பிரர் வரலாறு – விடியல், புத்தர்
வரலாறு – எதிர் வெளியீடு) மட்டுமே சில பதிப்பகங்கள்
தொடர்ந்து வெளியிடுகின்றன. அவர் எழுதிய இதர பல நூற்கள் எனக்கு இதுவரையில் கிடைக்காமல் இருந்தது. எனது தேடலில் வசந்தா பதிப்பகம் கடையில் மயிலை.சீனி.வேங்கடசாமி பல்வேறு நூற்களைக் கண்டெடுத்தேன். இப்புத்தகங்கள் கிட்டத்தட்ட பழைய புத்தகங்கள் போலத்தான். இந்நூற்களைப் பற்றி பிறகு தனியே எழுத விருப்பம்.
மயிலையாரின் நூற்கள் அரசுடைமையாக்கப்பட்டிருப்பினும் ஏனோ அவருடைய நூற்களை பதிப்பிக்க முன்வரவில்லை. இதைப்போல எண்ணற்ற பொக்கிஷங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் எப்போது, யார் வெளிக்கொண்டுவருவார்கள் என எதிர்பார்த்துக் காத்திருக்கவேண்டியதுதான். அந்தவகையில் பரத கண்ட புராதனம் - வேதங்கள்,
இதிகாசங்கள், புராணங்கள் பற்றிய விமர்சனம் – டாக்டர் கால்டுவெல் எழுதிய தமிழ்
நூல் (பதிப்பு: பொ.வெல்சாமி) பொ.வெல்சாமியின்
முயற்சியால் நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (NCBH) – ஆல் வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய முயற்சிகள் மிகுந்த பாராட்டிற்குரியவை என்பதில் அய்யமில்லை.
படைப்பாக்கத்தைவிட மொழிபெயர்ப்பு அதிகளவில்
வருவதாக கருதுகிறேன். மொழிபெயர்ப்பின் தரம், தேர்வு, அரசியல் பொன்றவற்றில் சில விமர்சனங்கள் இருப்பினும் பல நன்முயற்சிகள் பாராட்டப்படவேண்டியது. குழந்தை இலக்கியத்திற்கு பாரதி புத்தகாலயம் உள்ளிட்ட சில நிறுவனங்களின் பணி மெச்சத்தகுந்தது. கவிஞர் யூமா.வாசுகி நிறைய குழந்தை இலக்கியங்களை மொழிபெயர்க்கிறார். அளப்பரிய இப்பணிகள் தொடரவேண்டும். அவர் குதிரைவீரன் பயணம் வெளியிட்ட சாத்தானும் சிறுமியும் என்ற நூலை அளித்தார். கவிதைகள் யூமா.வாசுகி மொழிபெயர்ப்பிலும் மணிவண்ணனின் ஓவியங்களில் நூல் அருமையாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
சிறு பத்தரிக்கை வாசகர்களாகிய எங்களைப்
போன்றவர்களுக்கு
தீனிபோட இன்றைய காலகட்டத்திலும் இதழ்கள் வந்துகொண்டுள்ளன. யூமா. வாசுகி குதிரை வீரன் பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளார். கல்குதிரை, மந்திரச்சிமிழ், அடவி, தொனி, புது எழுத்து, மாற்றுவெளி, படப்பெட்டி, மணல் வீடு, நிழல், வெள்ளக்குதிரை, வலசை, தமிழினி, புதுப்புனல், காட்சிப்பிழை போன்ற பல இதழ்கள் விட்டுவிட்டாவது வெளிவருவது மகிழ்ச்சியாக உள்ளது. தளம், குறளி, மண்புழு,
சிற்றேடு
ஆகிய புதிய இதழ்கள் வெளிவருவதும் மன நிறைவை அளிக்கும் விஷயம். நண்பர் கவிஞர் நக்கீரன் மண்புழு முதல் இதழை வழங்கினார். ஆழி பப்ளிஷர்ஸ் செ.ச.செந்தில்நாதன், கவிஞர் விஷ்ணுபுரம் சரவணன் ஆகியோர் தமிழ் ஆழி வண்ண மாதச் செய்தி இதழை அளித்தனர். இவர்களது உழைப்பில் குருகு தமிழ் ஆழி இலக்கியக் காலாண்டிதழ் வெளிவரப்போவதாகவும் அறிந்தபோது மகிழ்வாக இருந்தது.
புத்தகங்களை வாங்கவும் அதை வீடு கொண்டுபோய் சேர்க்கவும் தோழர் புலம் லோகநாதன் பேருதவி புரிந்தார். நூலாக்கம், அச்சுப்பணி என்று அலைந்துகொண்டிருந்த அவரது பொன்னான நேரத்தை அபகரித்துக் கொண்டது மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது. வேறு வழியில்லை. தோழர் பொறுத்துகொள்வார் என்ற நம்பிக்கையுண்டு.
பழைய,
புதிய புத்தகங்கள் என சிலவற்றை வாங்கினேன். அவற்றின் பட்டியலைக் கீழே தருகிறேன்.
அலைகள் வெளியீட்டகம்
01.மாவோ
தேர்ந்தெடுக்கப்பட்டப்
படைப்புகள் 9
தொகுதிகள்
02.மாவோ
வாழ்க்கை வரலாறு – ஃபிலிப் ஷார்ட்
03.வாழ்வும் போராட்டமும்
– டாக்டர் ராம்மனோகர் லோகியா
04.இந்தியாவைப் பற்றி...
– காரல் மார்க்ஸ்
05.1942 ஆகஸ்டு புரட்சி மறைக்கப்பட்ட உண்மைகள் – சு.துரைசாமி
06.மார்க்சும் சூழலியலும் – ஜான் பெல்லமி ஃபாஸ்டர்
07.சாட்சி சொல்ல ஒரு மரம் – எஸ்.வி.ராஜதுரை
08.இருத்தலியமும் மார்க்ஸியமும் – எஸ்.வி.ராஜதுரை
09.ஒரு ஃப்ராய்டியன் பார்வையில் தமிழ் நாட்டுப்புற வழக்காறுகள்
– தி.கு.இரவிச்சந்திரன்
10.தொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – தி.கு.இரவிச்சந்திரன்
11.தத்துவத்தின் வறுமை – கார்ல் மார்க்ஸ்
12.இந்தியப் போர்
(பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்ட நூல்) – நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
பாரதி புத்தகாலயம்
13.இந்தியவின் பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
(இந்தியத் தேசியத் தலைமையின் பொருளாதாரக் கொள்கைகள்
1880-1905) மொ – ச.சுப்பாராவ்
14.புரட்சியில் பகுத்தறிவு மார்க்சிய த்த்துவமும் நவீன அறிவியலும்
– ப.கு.ராஜன்
15.அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு – மனித அறிவுத்தேடலின் கதை – பில் பிரைசன் (மொ) ப்ரவாஹன்
16.கணிதமேதை ராமானுஜன் – ரகமி (தொகுப்பும் குறிப்பும்: த.வி.வெங்கடேஸ்வரன்)
17.கிரகணங்களின் நிழல் விளையாட்டு – த.வி.வெங்கடேஸ்வரன்
18.இசுலாமின் வரலாற்றுப் பாத்திரம் – எம்.என்.ராய் (தமிழில்: வெ.கோவிந்தசாமி)
19.அணு ஆற்றல் – அறிவியல்,
தொழில்நுட்பம், அரசியல் – ப.கு.ராஜன்
20.பெண் ஏன் அடிமையானாள்? - தந்தை பெரியார்
21.புத்தர் தர்மமும் சங்கமும் – அருணன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (NCBH)
22.ரிக் வேத கால ஆரியர்கள் – ராகுல சாங்கிருத்தியாயன்
23.பெளத்தம் – ஒரு மார்க்சிய
அறிமுகம் – மார்க்சீய ஒளிக் கட்டுரைகள்-1 (பதிப்பு: வெ. கோவிந்தசாமி)
24.பரத கண்ட புராதனம் - வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள்
பற்றிய விமர்சனம் – டாக்டர்
கால்டுவெல் எழுதிய தமிழ் நூல் (பதிப்பு: பொ.வெல்சாமி
25.அனார்யா – நாதியற்றவன்
– சரண்குமார் லிம்பாலே (தமிழில்: எஸ்.பாலச்சந்திரன்)
26.குலாத்தி – தந்தையற்றவன்
– கிஷோர் சாந்தாபாய் காலே (தமிழில்: வெ.கோவிந்தசாமி)
சந்தியா பதிப்பகம்
27.எனது பயணங்களும் மீள் நினைவுகளும் தொகுதி-2 – வில்லியம் ஸ்லீமென் (மொ) பேரா.சிவ.முருகேசன்
28.ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம் – பிலிப் மெடோஸ் டெய்லா (தமிழில்) – போப்பு
29.ஓர் இந்திய கிராமத்தின் கதை – தோட்டக்காடு
ராமகிருஷ்ண பிள்ளை (பதிப்பு: ரெங்கையா முருகன்,
தமிழில்: ச.சரவணன்)
காலச்சுவடு பதிப்பகம்
30.குமரி நிலநீட்சி – சி.கி.ஜெயகரன்
31.சின்ன விஷயங்களின் கடவுள் – அருந்த்தி ராய்
(தமிழில்: ஜி.குப்புசாமி)
எதிர் வெளியீடு
32.என் பெயர் பட்டேல் பை – யான் மார்ட்டெல்
(தமிழில்: பொன்.சின்னத்தம்பி
முருகேசன்)
33.சார்லஸ் டார்வின் சுயசரிதை (மொ-
சுரேஷ்)
34.தமிழிசை வேர்கள் – நா.மம்மது
35.நுகர்வெனும் பெரும்பசி – சுற்றுச் சூழலியல்
கடந்த வரலாறும் எதிர்காலக் கனவுகளும் – ராமச்சந்திர குஹா
(தமிழில்: போப்பு)
36.சிறைபட்ட கற்பனை – சிறையிலிருந்து கடிதங்கள்
– வரவர ராவ் (ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு:
க.பூரணச்சந்திரன்)
37.திருடப்பட்ட தேசம் – நக்கீரன்
38.புத்தரின் வரலாறு – மயிலை.சீனி.வேங்கடசாமி
அடையாளம்
39.த – நாவல் – கோணங்கி
40.முஸல்பனி – நாவல் – தமிழவன்
41.தமிழகப் பழங்குடிகள் – பக்தவத்சல பாரதி
(மரபையும் மாற்ரத்தையும் நோக்கிய இனவரைவியல் பார்வை)
42.அரபுப்புரட்சி – யமுனா ராஜேந்திரன்
முகம்
43.தீண்டாதான் – முல்க்ராஜ் ஆனந்த்
(மொ. கே.கணேஷ்)
நாதன் பதிப்பகம்
44.தமிழிசை வரலாறு – நா.மம்மது
புலம்
45.மகிழ்ச்சியான இளவரசன் – ஆஸ்கார் வைல்டு
– உலகப் புகழ்பெற்ற சிறார் கதைகள் (தமிழில்:
யூமா.வாசுகி)
கொம்பு
47.என் பெயர் ஜிப்சி – நக்கீரன் (கவிதைகள்)
தடாகம்
48.அதோ அந்த பறவைபோல... (பறவையியல் ஒரு அறிமுகம்)
– ச.முகமது அலி
49.சிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும் – ஆதி வள்ளியப்பன்
பூவுலகின் நண்பர்கள்
50.விதைகள்
51.மழைக்காடுகளின் மரணம் (அழிவின் வாசலைப்பற்றி
ஒரு நேரடி சாட்சியம்) – நக்கீரன்
52.எது சிறந்த உணவு
53.பறவையியல் அறிஞர் சாலிம் அலி – ச.முகமது அலி
Books For Children
54.டாம் மாமாவின் குடிசை (உலகப் புகழ்பெற்ற
நாவலின் சுருக்கமான வடிவம்) – பி.ஏ.வாரியார் (தமிழில்: அம்பிகா நடராஜன்)
55.விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள் (மருத்துவத்துறை
அற்புதங்கள்) – இரா.நடராசன்
56.மந்திரமரம் (தாம்போய் குழந்தைக்கதைகள்)
– ச.முருகபூபதி
புது எழுத்து
57.இன்மை-அனுபூதி-இலக்கியம்
– மா.அரங்கநாதன் – நேர்காணல்:
எஸ்.சண்முகம்
தமிழினி
58.அருந்த்தியர் வாழும் வரலாறு – மாற்கு
கருத்து=பட்டறை
59.பாப்லோ நெரூடா – நினைவுக்குறிப்புகள்
– தமிழில்: சா.தேவதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக