திங்கள், ஜனவரி 26, 2015

38 வது சென்னை புத்தகக்காட்சி: சில பார்வைகள் - மு.சிவகுருநாதன்

38 வது  சென்னை  புத்தகக்காட்சி: சில பார்வைகள்     -  மு.சிவகுருநாதன்


    ஜனவரி 09 முதல் 21 முடிய இவ்வாண்டின் (2015) சென்னைப் புத்தகக்காட்சி நடந்து முடிந்திருக்கிறது. வழக்கமான குறைபாடுகள் இவ்வாண்டும் தொடர்ந்தது. எது எப்படியிருப்பினும் இதைத் தவிர்க்க வாய்ப்பில்லை. ஜனவரி 18 ஞாயிறு மற்றும் 19 திங்கள் ஆகிய இருநாட்கள் சென்னை  புத்தகக்காட்சியில் இனிமையாக பொழுது போனது. தோழர்கள் புலம் ஏ.லோகநாதன், பா.ஜீவமணி உதவியிடன் நிறைய புத்தகங்களை வாங்கிக் குவித்தேன்.






   700 கடைகள், 100 க்கு மேற்பட்டோருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று சொன்னார்கள். ஆனால் வழக்கம்போல் 6, 8 கடைகள் இணைத்து பெரிய அரங்கு அமைத்திருந்தனர் சில பணக்காரப் பதிப்பாளர்கள். வேந்தர் தொலைக்காட்சி விவாதத்தின்போது எழுத்தாளர் கெளதம சித்தார்த்தன் இந்நிலையை எடுத்துக் கூறினார். அதற்கு விளக்கமளித்த பாபாசி பொறுப்பாளர் அவர்கள் 4000 புத்தகங்கள் வெளியிடுபவர்கள், 4 நூல் வைத்திருப்பவர்களுக்கும் அதற்கும் வித்தியாசம் இருக்கத்தான் செய்யும் என்றார். இனி குறு, பெரு பதிப்பகங்களுக்குத் தனித்தனி காட்சி நடத்துவது குறித்து சிந்திக்கலாம்.

  வழக்கம்போல 8 கடைகளை வைத்து வியாபாரம் செய்யும் ‘கிழக்குப் பதிப்பகம்’ போன்றவை ‘விருட்சம்’ போன்ற சிறு பதிப்பகக் கடைகளில் தங்களது நூல்களையே கொட்டி வைத்திருக்கும் அவலம் நடந்தேறுகிறது. இது இங்கு ஓர் வியாபாரத் தந்திரமாகச் செயல்படுகிறது. ‘விருட்சம்’ கடைக்கு பார்வையாளர்கள் வருகைக் குறைவு என்று ஓர் இதழ் குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.  

   ராமாநுஜம், கெளதம சித்தார்த்தன், நக்கீரன், சிராஜ், யவனிகா ஶ்ரீராம்,  போன்ற பல நண்பர்களைச் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சியடைந்தேன். அ.மார்க்ஸ் ஊரில் இல்லாததால் சந்திக்க இயலவில்லை. கடந்த ஆண்டுகளைப் போலில்லாமல் இவ்வாண்டு அ.மார்க்சின் நூற்கள் உயிர்மை பதிப்பகம் மூல வெளியாகி இருக்கின்றன.

     தோழர் பா.ஜீவமணியுடன்  அரங்கில் சுற்றிக்கொண்டிருக்குபோது கருப்புபிரதிகள் கடையில் வழக்குரைஞர் பொ.இரத்தினம் அவர்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்தேன். கோட்சேவுக்கு சிலை அமைக்கும் பிரச்சினை, பெருமாள்முருகனின் மாதொருபாகன் பிரச்சினை பொன்றவற்றைப் பற்றி விரிவாகப் பேசினார். ‘காந்தியைக் கொன்றவர்கள்’ என்றொரு நூலை எதிர் வெளியீட்டில் வெளியீடிருக்கிறது. அதைப் படித்ததாகச் சொன்னார். அதைப்போல ஒரு நூல் கருப்புப் பிரதிகளில் விற்பனைக்கு இருந்தது. அதை வழக்குரைஞருக்கு அளித்தேன். கோட்சேவுக்கு சிலை அமைப்பது குறித்த பிரச்சினையில் ஓர் வினாத்தொகுப்பு தயாரித்துள்ளதாகவும் அதை அச்சிட்டு சில இடங்களில் பொதுமக்களிடம் கருத்து கணிப்பு நடத்தவிருப்பதாக அவர் தெரிவித்தார்.  

   க்ரியா அரங்கில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் சுயசரிதை மொழிபெயர்ப்பு கிடைத்தது. இந்நூல் ஆங்கிலத்தில் வெளியாகி 50 ஆண்டுகளுக்குப் பிறகு அவ்வை இல்லம் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகாவது வெளியிட்டார்களே என்று மகிழ்ச்சியடையலாம். நம்மால் வேறென்ன செய்யமுடியும்?

  அரங்கில் நாள்தோறும் வெளியீட்டு விழாக்கள் மிக எளிமையான முறையில் அரங்கேறின. எதிர் வெளியீட்டில் கெளதம சித்தார்த்தனின் நூற்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தன. புலம் அரங்கில் சேகர் பந்தோபாத்யாயாவின் நாம சூத்திரர்கள் இயக்கம்  குறுநூலை அப்பணசாமி மொழிபெயர்ப்பில் அணு சக்திக்கெதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் வெளியிட்டார். அந்நிகழ்வில் கலந்துகொண்டேன்.









    புத்தகங்கள் வாங்குவது அதைப் பார்சலில் அனுப்புவது வரை தோழர் லோகநாதனுக்கு பெருத்த சிரமத்தை கொடுக்கவேண்டியதாகிவிட்டது. அவருக்கு நன்றி சொன்னால் மட்டும் போதாது. இம்முறை தோழர் செ.மணிமாறனுக்காகவும் அவருடைய விருப்பத்தின்பேரில் சில புத்தகங்கள் வாங்கி வந்தேன்.  

  இக்கண்காட்சியில் வாங்கிய சில புதிய நூல்களின் பட்டியலை கீழேத் தருகிறேன்.

எதிர் வெளியீடு

01. வேர்கள் – அலெக்ஸ் ஹேலி (தமிழில்) பொன். சிவத்தம்பி முருகேசன்
02. இயற்கை வழியில் வேளாண்மை – பசுமைத் தத்துவத்தின் கோட்பாடு மற்றும் செயல்முறைகள் – மசானபு ஃபுகோகா  (தமிழில்) கயல்விழி
03. காந்தியைக் கொன்றவர்கள் – மனோகர் மல்கோங்கர்  (தமிழில்) க.பூர்ணசந்திரன்
04. காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் – ஸ்டீஃபன் ஹாக்கிங் - (தமிழில்) நல்ங்கிள்ளி
05. ஸ்டீபன் ஹாக்கிங் – வாழ்வும் பணியும் – கிட்டி ஃபெர்கூசன் (தமிழில்) பேரா.ச.வின்சென்ட்
06. அரேபிய இரவுகளும் பகல்களும் – நாகிப் மாஃபஸ் (தமிழில்)  சா.தேவதாஸ்
07. பேரரசன் அசோகன் – மறக்கப்பட்ட மாமன்னனின் வரலாறு – சார்லஸ் ஆலன்  (தமிழில்)  தருமி
08. காடுகளுக்காக ஒரு போராட்டம் – சிக்கோ மென்டிஸ்  (தமிழில்) பேரா.ச.வின்சென்ட்
09. பழவேற்காடு முதல் நிரோடி வரை – தமிழகக் கடற்கரை – சுனாமிக்குப்பின் 10 ஆண்டுகள் – வறீதையா கான்ஸ்தந்தின்
10. கனவினைப் பின் தொடர்ந்து… - வரலாற்றின் கதைகள் – த.வே. பத்மா  (தமிழில்) ஜே.ஷாஜஹான்
11. வான்காரி மாத்தாய் (தமிழில்) பேரா.ச.வின்சென்ட்

கருப்புப் பிரதிகள்

12. முப்பது நிறச் சொல் – நிலம்-கதை-வடிவம் – ஷோபா சக்தி
13. கண்டி வீரன் சிறுகதைகள் – ஷோபா சக்தி

புலம்

14. தீப்பற்றிய பாதங்கள் – தலித் இயக்கம், கலாச்சார நினைவுகள், அரசியல் வன்முறை பற்றிய கட்டுரைகள் – டி.ஆர்.நாகராஜ் – ஆங்கிலத் தொகுப்பு: பிருத்வி தத்தா சந்தர ஷோபி  (தமிழில்) ராமாநுஜம்
15. நாம சூத்திரர்கள் இயக்கம் – சேகர் பந்தோபாத்யாயா (தமிழில்) அப்பணசாமி

அவ்வை இல்லம்

16. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை - (தமிழில்)  எஸ்.ராஜலட்சுமி

பொன்னுலகம் பதிப்பகம்

17. எரியும் பனிக்காடு (Red Tea) – பி.எச். டேனியல் (தமிழில்) இரா.முருகவேள்
18. மிளிர்கல் – நாவல் – இரா.முருகவேள்

கிழக்கு பதிப்பகம்

19. புதிய எக்ஸைல் – சாரு நிவேதிதா

விடியல்

20. அயோத்தி – இருண்ட இரவு – பாபர் மசூதிக்குள் இராமன் தோன்றிய இரகசிய வரலாறு – கிருஷ்ண ஜா மற்றும் திரேந்திர கே.ஜா (தமிழில்) கே.சுப்பிரமணியன்
21. தவிர்க்கப்பட்டவர்கள் – இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள் – பாஷா சிங்   (தமிழில்) விஜய சாய்

அடையாளம்

22. இரட்டைச் சொற்கள் – உலகத் தரத்தில் தமிழ் சிறுகதைகள் – தமிழவன்
23. திராவிட மானுடவியல் – பக்தவத்சல பாரதி
24. நிலவொளி எனும் இரகசிய துணை – கட்டுரை கட்டுரை போலச் சிலவும் – எம்.டி.முத்துகுமாரசாமி
25. கோட்பாட்டு விமர்சன யுகம் – விமர்சன கோட்பாட்டு யுகம் – கலை, தத்துவம் பற்றிய பின்நவீனத்துவச் சொல்லாடல்கள் – நோயல் ஜோசப் இருதயராஜ்
26. காடோடி – நாவல் – நக்கீரன்

க்ரியா

27. அஞ்ஞாடி – நாவல் – பூமணி

அலைகள்

28. ஜவகர்லால் நேரு சுயசரிதை (தமிழில்)  வ.ரா.
29. அவர்கள் அபாயத்தில் வாழ்ந்தார்கள் – ஒரு புரட்சிக்காரரின் நினைவலைகள் - மன்மதநாத் குப்தா (தமிழில்) சி.இலக்குவன்

காலச்சுவடு

30. இஸ்தான்புல் – ஒரு நகரத்தின் நினைவுகள் – ஓரான் பாமூக் - (தமிழில்) ஜி.குப்புசாமி
31. திருடன் மணியன் பிள்ளை – ஜி.ஆர்.இந்துகோபன்  (தமிழில்) குளச்சல் மு.யூசுப்

பாரதி புத்தகாலயம்

32. பாட்டியின் குரல்வளையைக் காப்பாற்றி வைத்திருக்கிறேன் – கோணங்கி நேர்காணல் – சந்திப்பு: கீரனூர் ஜாகீர் ராஜா
33. மதனிமார்கள் கதை – கோணங்கியின் முதல் சிறுகதைத் தொகுப்பு – கோணங்கி
34. கொல்லனின் ஆறு பெண்மக்கள் - கோணங்கியின் இரண்டாவது  சிறுகதைத் தொகுப்பு – கோணங்கி
35. தமிழர் வளர்த்த தத்துவங்கள் – தேவ. பேரின்பன்
36. மோடி அரசாங்கம் – வகுப்புவாததின் புதிய அலை – சீத்தாராம் யெச்சூரி -  (தமிழில்) – ச.வீரமணி
37. இயக்கவியல் பொருள் முதல்வாதம் – மாரிஸ் கான்போர்த் (தமிழில்) மிலிட்டரி பொன்னுசாமி
38. காலனியம் – பிபன் சந்திரா - (தமிழில்) அசோகன் முத்துசாமி
39. இந்திய நாத்திகம் – தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (தமிழில்) சாமி

நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ்

40. மனித சமுதாயம் – ராகுல் சாங்கிருத்யாயன் - (தமிழில்) – ஏ.ஜி.எத்திராஜூலு
41. ஊர்சுற்றிப் புராணம் - ராகுல் சாங்கிருத்யாயன் - (தமிழில்) – ஏ.ஜி.எத்திராஜூலு


உயிர்மை

42. கரையும் நினைவுகள் – அ.மார்க்ஸ்
43. இந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்
44. சோவியத்துக்குப் பிந்தைய உலகம் – அ.மார்க்ஸ்
45. இது மோடியின் காலம் – அ.மார்க்ஸ்
46. இராமன் கடந்த தொலைவு – அ.மார்க்ஸ்
47. சஞ்சாரம் – எஸ்.ராமகிருஷ்ணன்

சில இதழ்கள்

48. அகம் புறம் இதழ் 1 (ஜனவரி-மார்ச் 2015)
49. இடது இதழ் 3  (நவம்பர் 2014-ஜனவரி 2015)
50. அகநாழிகை இதழ் 7 (மார்ச் 2014)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக