எனது முதல் வகுப்பு ஆசிரியருக்கு அஞ்சலி! - மு. சிவகுருநாதன்
http://musivagurunathan.blogspot.in/2012/06/80.html
எனது முதல் வகுப்பு ஆசிரியர் திருமிகு செ. வீராச்சாமி அவர்கள்
நேற்று (15.03.2015) காலமானார். அன்னாருக்கு 83 வயது. மூன்றாண்டுகளுக்கு
முன்பு 80 வயது நிறைவு விழாவைக் கொண்டாடினார். அன்று அந்த மகிழ்ச்சியில்
கலந்துகொண்டு திரும்பினேன். அது குறித்து எனது வலைப்பூவில் கட்டுரை ஒன்றும்
எழுதினேன்.
இன்று (16.03.2015) அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு கனத்த
மனத்துடன் திரும்பினேன். இன்று மாலை 3 மணிக்கு அன்னாரது உடல் அடக்கம்
செய்யப்பட்டது. நிறைவாக வாழ்ந்தவர் அவர். அவருக்கு இறுதி அஞ்சலிகள்.
அவர் தனது இரு கண்களையும் தானமளித்துள்ளார். அவரது பணிகளுக்கும்
சேவைகளுக்கும் நன்றிகள். எனது முந்தைய வலைப்பூ கட்டுரையின் இணைப்பு இதோ...
http://musivagurunathan.blogspot.in/2012/06/80.html
1 கருத்து:
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா
கருத்துரையிடுக