திங்கள், செப்டம்பர் 26, 2022

கல் மரம்!

 

கல் மரம்!

மு.சிவகுருநாதன்

 

          மரங்கள் கல்லாக மாறுமா?  சுமார் 2 கோடி ஆண்டுகளுக்கு முன்னதாக மண்ணில் புதையுண்ட மரங்களின் தொல் படிமங்கள்  விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் திருவக்கரையில் நூற்றுக்கணக்கில் கிடைத்துள்ளன.

      இந்தக் கல் மரங்கள் பட்டையில்லாத தாவரப்  (Psilophyton) பேரினத்தைச் சேர்ந்தவையாகும்.  இவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கில்,   இந்திய  தேசியப்  புவியியல் துறை 1951 இல்  ஒரு பூங்காவை அமைத்தது.  சங்கராபரணி ஆற்றங்கரையில் இப்பூங்கா  உள்ளது.

 

        இப்பூங்காவிலிருந்து ஒரு கல் மரத்தைப் பெற்று  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் வைத்துள்ளனர்.  சி.நடராசன்  இ.ஆ.ப. ஆட்சியராக இருந்தபோது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கு.இராமசாமி அவர்களால் 25/10/2013 அன்று திறந்து வைக்கப்பட்டது.

           25/09/2022 ஞாயிறன்று மாலை  கவிநிலா, கயல்நிலாவுடன் சென்று அக்கல்மரத்தைக் கண்டு படமெடுத்துத் திரும்பினோம். 



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக