வியாழன், செப்டம்பர் 08, 2022

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன? 

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன? 

(தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் - 04)

        மு.சிவகுருநாதன்


 

            பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புவியியல் பகுதியில் ‘தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்’ என்ற பாடத்தினூடாக கீழக்கண்ட வினா எழுப்பப்படுகிறது. முன்பு  ‘கண்டறிக’ என்ற தலைப்பில் கொடுத்திருந்தனர். தற்போது அதை மட்டும் நீக்கிவிட்டு இரண்டு கேள்விகளை மட்டும் வைத்துள்ளனர்.  அக்கேள்விகள் கீழே: 

“1. அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

  2. தமிழகத்தை குறைந்த, மிதமான மற்றும் அதிக மழைபெறும் மாவட்டங்களாகப் பிரிக்கவும்.”  (பக்.221)

      ‘அக்னி நட்சத்திரச்’ சொல்லாடல் பாடநூலில் எதற்கு? கண்டறிய இதிலென்ன அறிவியலிருக்கிறது? இந்த பஞ்சாங்க விகாரங்களை அறிவியல் ஏற்றுக் கொள்வதில்லை. இனி பஞ்சாங்கத்தின் வழி புவியியல் பாடங்கள் எழுதப்படும் என்று ஐயுற வேண்டியுள்ளது.

       இந்த இரண்டு வினாக்களையும் பாருங்கள்! இப்படி ஒரு கேள்வி; அப்படி ஒரு கேள்வி. இதுவே இந்துத்துவச் செயல்பாடு. அறிவியலையும் மத நம்பிக்கைகளையும் இணைக்கும் பாசிசச் சொல்லாடல்கள்!

      மண்டல வானிலை ஆய்வு மைய (சென்னை) அலுவலர்கள் பலமுறை ஊடகங்களில் கத்தரி வெயில், அக்னி நடசத்திரம் குறித்து  விளக்கமளித்திருக்கிறார்கள். ஆனால் புவியியல் பாடம் அக்னி நட்சத்திரத்தை அறிந்துகொள்ளச் சொல்கிறது; என்ன என்று கேட்கிறது. எனவே நாம் புராணக்கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும். இனி சூரியன், சந்திரன் உள்ளிட்ட ஒன்பது ஜாதகக் கோள்களை அறிய வேண்டுமா?

        பல்கலைக்கழகங்களில் கலை, அறிவியல் பாடங்களை நீக்கிவிட்டு ஜோதிடம், யோகா போன்றவற்றைக் கற்றுகொடுக்கக் கல்வித்திட்டம் உருவாக்கியுள்ளனர் மத்தியில் ஆளும் வலதுசாரி இந்துத்துவக் கட்சினர்.  அதை உடனே நமது தமிழ்ப் பல்கலைக்கழகம் நிறைவேற்றிக் காட்டுகிறது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பாடமாக உள்ள சோதிடம் இனி பள்ளிகளிலும் பாடமாக்கப்படுமா?  இனி அறிவியல், புவியியல், கலைப்பாடங்கள் எதுவும் புராணங்களை மட்டுமே அடிப்படையாக எழுதப்படுமா?

(தொடரும்…)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக