சனி, பிப்ரவரி 13, 2016

அம்மா பன்றி பாராட்டுத் திட்டம்


அம்மா பன்றி பாராட்டுத் திட்டம்



வழக்கறிஞர் பொ.இரத்தினம்



அமைப்பாளர்

பகத்சிங் மக்கள் சங்கம்



தொடர்புக்கு: 94434 58118




            தமிழகத்தில் ஊழல் மலிந்த ஜெ.ஜெயலலிதா, ‘மஞ்சள் துண்டு’ மு.கருணாநிதி ஆகியோர் தொடர்ந்து ஆண்டு கோடிக்கணக்கில் கொள்ளையடித்துள்ளனர். தமிழ்நாட்டில் எந்தத் துறையை எடுத்தாலும் 40% ‘கமிஷனுக்காகவே’ திட்டங்கள் தீட்டப்படுகின்றன. இந்த ‘கமிஷன்களால்’ அ.இ.அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு தரப்பும் பெரும் பணக்காரர்களாக உலா வருகின்றன. இரு தரப்புக்கும் எதிரான ஊழல் வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கின்றன. ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. திருவாரூரிலிருந்து ரயிலில் டிக்கெட் இன்றி சென்னை வந்த மு.கருணாநிதியின் குடும்பம் இன்று ஆசியாவில் பெரும் பணக்கார குடும்பங்களில் ஒன்றாக உள்ளது.



         வை.கோபால்சாமி, விஜயகாந்த் போன்றோரை நம்பி இடதுசாரிகள் சோரம் போகின்றனர். மார்க்சியக் கொள்கைகளுக்கு எதிராக அழித்தொழிப்பு வேலைகளில் அன்று இறங்கினார்கள். இன்று மார்க்சியப் பாதையிலிருந்து விலகி இவர்களும் சீரழிவுப் பாதையில் செல்லத் தொடங்கிவிட்டனர். அதற்காக கூட்டணி அரசியலை நியாயப்படுத்தவும் இவர்கள் தயங்கவில்லை.




         அம்பேத்கர், பெரியார், நேதாஜி, பகத்சிங் போன்றோர் நமது நாட்டிற்கு செய்த அளப்பரிய தியாகங்கள் மறக்கடிக்கப்படுகின்றன. இவற்றை மக்களிடம் எடுத்துக்கூறவும் சாதியத்தை ஒழித்து சமூகக் கட்டமைப்பை மாற்றவும் புதிய அமைப்பு அவசியமானதாக இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ‘சமத்துவப் போராளிகள்’ என்றொரு அமைப்பை தொடங்கி அதன் கொடி, கொள்கைகளை விளக்கி துண்டறிக்கை வெளியிட்டோம்.



       புத்த இயக்கப் பார்வையில் சாதிய சமூகத்தை மாற்றி காரல் மார்க்ஸ், பிரடெரிக் ஏங்கெல்ஸ் ஆகியோர் கண்டறிந்த பொதுவுடைமை தத்துவம் அடைப்படையில் கட்டமைப்பது, தலித் விடுதலை, தேசிய இனங்களின் உரிமை, சிறுபான்மையினர் நலன், பெண் சமத்துவம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இவ்வமைப்பு கட்டப்பட்டது. இதே கொள்கைகள், கொடி ஆகியற்றுடன் ‘பகத்சிங் மக்கள் சங்கம்‘ என்ற பெயர் மாற்றத்துடன் சேலத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.



       நாக்பூர் தலித் மக்களின் ‘சமூக சமத்துவப்படை’ என்னும் அமைப்பு, அவர்களது போராட்ட வாழ்க்கை போன்ற தன்மை இங்கும் கட்டப்படவேண்டும். புத்தரின் போர்க்குணம், பகத்சிங் மற்றும் நேதாஜியின் தியாகம், அம்பேத்கரின் அறிவாற்றல் இணைந்த இயக்கமாக இதை வளர்த்தெடுக்க வேண்டும்.



        சீரழிவு அரசியலை அம்பலப்படுத்த ‘பகத்சிங் மக்கள் சங்கம்’ உருவாக்கிச் செயல்படுத்தும் இந்திய சீரமைப்புத் திட்டங்களில் ஒன்றாக அம்மா பன்றி பாராட்டுத் திட்டத்தை அறிவிக்கிறது. நாடாளுமன்றம் பன்றித் தொழுவம் என்று சிறப்பாக கணித்துச் சொன்னார் லெனின். அவரது கணிப்பு உண்மையாகியுள்ளது. அது என்ன அம்மா பன்றி? அம்மா பன்றி 10 குட்டிகள் போடும். பொறுப்பாக குட்டிகளை வளர்க்கும்; அனுபவம் மிக்கது. குட்டிப்பன்றிகள் பலன்தர சில மாதங்கள் ஆகலாம். வயதான அம்மா பன்றி உடனடியாகப் பலன் தரும். எனவே அம்மா பன்றியை பாராட்ட முடிவு செய்துள்ளோம்.



         அரசியலில் சமூக விரோதிகள் கூட்டணி அமைப்பதைத் தடுப்பது, புதிய மக்கள் குடியரசு உருவாவதற்கான சூழலை ஏற்படுத்துவது, தனித்தனியே இயங்கும் சிறு சிறு குழுக்களை ஒருங்கிணைப்பது ஆகிய பணிகளை நாங்கள் முன்னெடுக்கிறோம். சமூக விரோதிகள் மற்றும் துரோகிகளை அம்பலப்படுத்தும் சமூகப் போராளிகளை ஊக்குவிக்கும் செயல்களை மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்ல இருக்கிறோம்.



         சமூகச் சீரழிவைச் சகிக்க முடியாத சில ஆயிரம் இளைஞர்கள் நேர்மையான அதிகாரி சகாயத்தை முன்னுறுத்தி வீதிக்கு வந்தனர். அப்போது அமைதியாக இருந்த சகாயம் பின்னர் இளைஞர்கள் சமூகப் பணியாற்ற வேண்டும், அதற்கு தான் வழிகாட்டத் தயார் என்று அறிக்கை விடுத்தார். ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாக இயங்கிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் ஒன்றுபடுத்தப்படவேண்டும். அவர்களிடையே சமூகத்துரோகிகள், சீரழிவு சக்திகளை வெளிப்படையாக சொல்ல தயக்கமிருக்கிறது. சமூக விரோதிகளையும் சமூகச் சீரழிவு சக்திகளையும் அம்பலப்படுத்தும் பணியை நாம் செய்யத் தயாராக இருக்கிறோம்.



        நல்லவர்களில் சிலர் சீரழிவு அரசியல் கட்சிகளில் இருக்கிறார்கள். இவர்கள் தயங்கித் தயங்கி பதுங்குகிறார்கள். காலம் கடந்துகொண்டிருக்கிறது, சீரழிவு சக்திகளை வலுப்படுத்த துணை புரியாதீர்கள் என்று இவர்களுக்கு வேண்டுகோள் விடுப்போம்.



       இத்தகைய சமூகச் சீரழிவை ஊடகங்கள் கண்டும் காணாமல் இருக்கின்றன. நாட்டின் விடுதலைப் போராட்டக் காலத்தில் இம்மாதிரியான நிலையைக் கண்டு, மக்கள் மத்தியில் எதிர்ப்பு உருவாக வேண்டும் என்பதற்காக பஞ்சாப் மாகாண சட்டசபையில் பகத்சிங் குண்டு வீசுகிறார். இன்றுபோல் ஊடகங்கள் இல்லாத சூழலில் மிகப் பொறுப்புடன் செய்யப்பட்ட கவன ஈர்ப்பு நடவடிக்கை இது. காந்தியார் பகத்சிங் விஷயத்தில் குப்புற விழுந்தார். அவர் நினைத்திருந்தால் பகத்சிங்கையும் அவரது தோழர்களையும் தூக்குமேடையிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும்.



       மு.கருணாநிதி கடும் உழைப்பாளி. எனவேதான் அண்ணாவிற்குப் பிறகு பலரை ஓரங்கட்டி கட்சியிலும் ஆட்சியிலும் முதன்மை பெற முடிந்தது. இரண்டு தலைமுறைகளாக தமிழ்நாட்டில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற கோட்பாடுகளை தலைகீழாகப் புரட்டிப்போட்ட தமிழ்ச் சமூக சீரழிவின் முன்னோடி இவர்.



        மு.கருணாநிதி ஒருமுறைகூட சட்டமன்றத் தேர்தலில் தோற்றதில்லை. லெனின் சொன்ன பன்றித்தொழுவம் கருத்திற்கு இது முற்றாக பொருந்தி வரக்கூடியது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் உதயகுமார் என்ற மாணவனது பிணத்தை இது எங்கள் பையனுடையதல்ல என்று அவர்களது உறவினர்களை விட்டு சொல்லவைத்து டாக்டர் பட்டம் பெற்றுக் கொண்டவர் இவர்.



        இலங்கைத் தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள் அனைவருக்கும் நாமம் சாத்தி ஏமாற்றிய கும்பல் இது. இந்திய அளவில்கூட இப்படி ஒருவரை காண்பது அரிது. இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை கால ‘மிசா’ கொடுமைகள் மு.க. ஸ்டாலின் மீது நிகழ்த்தப்பட்டதற்கு 100% நியாயமுள்ள பின்னணி உள்ளது. முரசொலி மாறன் காலில் அடிபட்டார். மேயர் சிட்டிபாபு மரணமடைந்தார். இவற்றையெல்லாம் மிகச் சாதுர்யமாக தனது வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டவர்.



        நாஞ்சில் மனோகரன் ‘கருவின் குற்றம் என கவிதை வடித்தார். விபச்சார விடுதிக்குச் சென்று கொடுத்த பணத்தை மிரட்டி திரும்பப் பெற்ற கதையை கண்ணதாசன் தனது ‘வனவாசத்தில்’ வெளிப்படுத்துகிறார். இத்தகைய பின்னணிகளைக் கொண்டே பாராட்டுக்கு மு.கருணாநிதியைத் தேர்வு செய்துள்ளோம்.



        பி.வி.ஆச்சார்யா 5 முறை கர்நாடக அரசு தலைமை வழக்கறிஞராக பணியாற்றியவர். பார் கவுன்சில் தலைவராகவும், இந்திய சட்ட ஆணைய உறுப்பினராகவும் இருந்தவர். ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் நேர்மையாக, திறம்பட பணியாற்றியவர். இதன் காரணமாக அ.தி.மு.க. வினரின் மிரட்டல்கள், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளானார். இந்த வழக்கை நீர்த்துப்போகச் செய்ய மத்திய, மாநில அரசுகள், பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகிய கட்சியினர் செய்த முயற்சிகளைத் தடுக்கப் போராடியவர்.



          எனவே திருமிகு பி.வி.ஆச்சார்யா அவர்களை பாராட்ட முடிவு செய்துள்ளோம். இவரைப் போன்ற சமூகப் போராளிகளை, மக்கள் நண்பர்களை இனம் கண்டு, பாராட்டி மக்கள் மன்றத்தில் அறிமுகம் செய்யும் வேலையைத் தொடர்ந்து செய்வோம்.



         இந்நிகழ்வுகளை நடத்த ஈரோடு மாநகரைத் தேர்வு செய்துள்ளோம். இதற்கு பின்னணி உண்டு. தமிழக அரசியலின் விடிவெள்ளியாக வந்த தந்தை பெரியார் பிறந்து வளர்ந்த மண் இது. தனது வாழ்நாள் இறுதிவரையில் இந்தச் சீரழிவு அரசியலைச் சாடியும் சமூக இயக்கம் நடத்திய பெரியார் பிறந்த மண்ணிலிருந்து சமூகச் சீரழிவிற்கு எதிரான இயக்கத்தை முன்னெடுப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.



மாவட்ட வாரியாக எந்த சீரழிவு சக்திகளுக்கு அளிப்பது தொடர்பாக முன்னாள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், கல்வியாளர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்து முடிவெடுக்கும். யார் யாருக்கு பாராட்டு அளிக்க்ப்படும் என்பதை ஊடகங்கள் மூலம் அறிவிப்பு வெளியாகும். இத்திட்டத்திற்கான பெயரில் எந்த மாற்றத்திற்கும் இடமில்லை. இந்த ‘அம்மா பன்றிப் பரிசளிப்புத் திட்டத்தை’ மேம்படுத்தி, விரிவுபடுத்த உங்களது ஆலோசனைகள் வேண்டப்படுகிறது. இது குறித்த விவாதத்திற்கு நாங்கள் தயாராக இருகிறோம்.





சமூக மாற்றத்திற்கான மக்கள் இயக்கத்தைக் கட்டமைப்போம்!



பரவிக் கிடக்கும் குழுக்களை ஒருங்கிணைப்போம்!



ஆதிக்கமற்ற சமூகச் சூழலை உருவாக்குவோம்!





அரங்கக்கூட்டம்



இடம்:



ஈரோடு


(அரங்கம் பின்னர் அறிவிக்கப்படும்)



நாள்:



ஏப்ரல் 03, 2016 (ஞாயிறு)



முற்பகல்:



அம்மா பன்றி பாராட்டுத் திட்டம்



பாராட்டு பெறுவோர்:



முத்துவேல் கருணாநிதி

ஊழல், சீரழிவு அரசியலின் முன்னோடி



பிற்பகல்



மக்கள் நண்பர்களுக்குப் பாராட்டு விழா



பாராட்டு பெறுவோர்:



சிறப்பு அரசு வழக்கறிஞர்

பி.வி.ஆச்சார்யா



மற்றும் அவரைப் போன்ற சமூகப் போராளிகள்.










(பகத்சிங் மக்கள் சங்கத்தின்  அமைப்பாளர்,  மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம்   அவர்கள்   வெளியிட்ட    இந்த அறிக்கை   இங்கு   நன்றியுடன்  வெளியிடப்படுகிறது.)


நன்றி:  மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம்   அவர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக