பகத்சிங் மக்கள் சங்கம்
அறிமுக விழா மற்றும் கொடியேற்று விழா
நாள்: 01.01.2017 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10:30 மணி
இடம்: சோ.கோ. அறக்கட்டளை – நீதிபதி கிருஷ்ணய்யர் அரங்கம்
அப்போலோ மருத்துமனை அருகில், க.க. நகர், மதுரை.
அறிமுக விழா மற்றும் கொடியேற்று விழா
நாள்: 01.01.2017 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10:30 மணி
இடம்: சோ.கோ. அறக்கட்டளை – நீதிபதி கிருஷ்ணய்யர் அரங்கம்
அப்போலோ மருத்துமனை அருகில், க.க. நகர், மதுரை.
இந்த சங்கம் இந்திய அவலங்களையும், அரசியல் சீரழிவுகளையும் துடைத்தெறிய மக்களோடு இணைந்து இயக்கம் நடத்த உருவாக்கப்பட்டது. அரசியல் சட்டத்தின் நோக்கங்களை மையப்படுத்தி இயக்கம் நடத்தப்படும். ஊழலை அம்பலப்படுத்தவும், ஊழல்வாதிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யவும் சங்கம் நடவடிக்கை எடுக்கும். பொதுவாழ்வில் ஒழுக்கக் கேடானவர்கள் பங்கேற்பதைத் தடுக்க, விரட்டியடிப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும். சாதி மதமற்ற சமத்துவ சமூகத்தை கட்டமைக்க இதுவரை மாமனிதர்கள் விட்டுச்சென்ற அனுவபங்களை உள்வாங்கிச் செயல்படும். சங்கக்கொடி சிகப்பு நிறத்தில் நடுவில் அசோக சக்கரம் போன்ற சக்கரத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் பலர் சொத்துகளை இழந்தனர். உயர் படிப்பு படித்தவர்கள் எளிய வாழ்க்கை வாழ்ந்து போராளிகளாகத் தியாகம் செய்து விடுதலை இயக்கத்தை வலுவாக்கினர். சினிமாவில் கதாநாயகன்களை எழுதிக் கொடுத்த வசனங்கள், பாடல்களுக்கு உதடசைத்து, ஒரே நடிகன் தனி மனிதனாக பெரிய கும்பலுடன் மோதி, அடித்து விரட்டிச் சாதனை புரியும் பொய்த்தனமான போலி கதாநாயகர்களை உருவாக்கிவிட்டனர். கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தினர். தமிழ் சமூகத்தில்தான் இந்த சினிமா வேடதாரிகள் அரசியல் செய்ய முடிகிறது.
தமிழ் சினிமா நிறுவனங்களில் பெண்களுக்கு மிகப்பலச் சோதனைகள் தொடர்கின்றன. சமீபத்தில் ஒரு இயக்குநர் பெண்கள் ஆடைக்குறைப்புச் செய்து கவர்ச்சியாக நடிக்க வேண்டுமென்று தனது விபச்சாரப் புத்தியை வெளிப்படுத்தியிருந்தார். பின்னர் கடும் எதிர்ப்பைக் கண்டுச் சரணடைந்தார். இது போதாது. கேடுகெட்ட பிறவிகள் நிறைய இருக்கின்றன. அவர்களை இந்த நிறுவனங்களிடமிருந்து அந்நியப்படுத்த வேண்டும்.
ஆனால் தமிழ் சினிமாவில் தோன்றும் பெண்களில் சிலர் அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்றத் துடிக்கிறார்கள். அவர்களால் சமூகம் சார்ந்த தியாக உணர்வோடு சமத்துவ சமூகத்தைக் கட்டமைக்கும் பார்வையைப் பெற முடிவதில்லை. வெறும் கவர்ச்சியை மூலதனமாக்கி கள்ளத்தனமான நடவடிக்கைகளால் இவர்கள் அரசியலை நாசமாக்குகிறார்கள். இதனை வேரோடு பிடுங்கி எறியவேண்டும். ஒழுக்கமே புத்த நெறி, புத்த நெறியே ஒழுக்கம் என்றார் மாமனிதர் அம்பேத்கர். எனவே இதனையும் கவனத்தில் கொள்வோம்.
தோழர் பகத்சிங் விடுதலைப் போராட்டத்தின் அடையாளம் என்பதாலும் மக்களின் தேடலுக்குத் துணை செய்யும் இந்தப் போராளியின் பெயரை முன்னிலைப் படுத்துகிறோம். சதியும் சூழ்ச்சியும் அரசியல் தளத்தில் தொற்றுநோய்போல் பரவிக் கிடக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்துகிற அரசியல் அமைப்பு முறையில் நாளுக்குநாள் துரோகங்களும், மோசடிகளும், சமூக விரோத நடவடிக்கைகளும் அதிகரித்து வருகின்றன. கிட்டத்தட்ட நாடாளுமன்ற அரசியல் அமைப்பு முறை காலாவதியாகிவிட்ட நிலையில் உள்ளது. இதைப்போன்றே படிநிலைச் சாதியக் கட்டுமானமும் பலவித முரண்பாடுகளை எதிர்கொள்ள முடியாமல் புதிய காட்டுமிராண்டிச் செயல்பாடுகளால் தனது இருப்பைத் தற்காத்துக்கொள்ளத் திணறுகிறது. இவற்றை அடிப்படையிலேயே மாற்றிக் கட்டமைக்கத் தேவையான பணிகள் விரைந்து முன்னெடுக்கப் படவேண்டும். மக்களிடையே விடுதலை உணர்வை வளர்க்கத் திட்டமிட்ட வழிமுறைகளில் இயக்கம் நடத்தப்பட வேண்டியது அடைப்படைத் தேவையாகிறது.
எனவே, சமூகத்தைப் பீடித்துள்ள சாதியம், வர்க்கம், மூடநம்பிக்கைகள் போன்றவற்றை ஒழித்துக் கட்டவேண்டும். தனிமனித சுதந்திரம், சமத்துவம் மற்றும் ஒழுக்க நெறிகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட பவுத்த சங்கத்தின் இயக்க நடவடிக்கைகளை உள்வாங்க வேண்டும். பவுத்த மதம் புத்தர் இறந்து சுமார் 400 ஆண்டுகள் கழித்துப் பார்ப்பனர்களால் தோற்றுவிக்கப்பட்டது. இது புத்தர் எதிர்பார்த்திராத சதியின் விளைவுதான். புத்தரை அவரது சங்க நடவடிக்கைகளோடு மட்டுமே அடையாளப்படுத்த வேண்டும். கடவுள், மதம் மற்றும் சாதியக் கட்டுமானம் போன்றவற்றை புத்தர் அடியோடு மறுத்தார் என்பதை மக்கள் மயமாக்க வேண்டும்.
தளர்வில்லா மக்கள் இயக்கம், விடியலை நோக்கிய பங்களிப்புச் செய்யவேண்டும் என்ற அக்கறையின் வெளிப்பாடே இந்த அமைப்பு.
சங்கத்தின் நிர்வாக அமைப்பை வரும் நாள்களில் விரிவுபடுத்தி ஆக்கப்பூர்வமான செயல்களை முன்னெடுப்போம்.
தவறாமல் வாங்க!
நண்பர்களோடு வாங்க!!
நேரத்துக்கு வாங்க!!!
அமைப்புக்குழு
பொ. இரத்தினம், வழக்கறிஞர், 94434 58118
ஒ. மாணிக்கம், சமூகபோராளி, 98427 71751
மு. ஜாகீர் அஹமத், வழக்கறிஞர், 99439 99001
க. யுவராஜ், வழக்கறிஞர், 94826 65265
பெங்களூர் ஆரோக்கியராஜ், சித்த மருத்துவர், 94816 49708
பகத்சிங் மக்கள் சங்கம்
223, கன்னங்குறிச்சி மெயின் சாலை,
அஸ்தம்பட்டி,
சேலம் – 636 007.
நண்பர்களோடு வாங்க!!
நேரத்துக்கு வாங்க!!!
அமைப்புக்குழு
பொ. இரத்தினம், வழக்கறிஞர், 94434 58118
ஒ. மாணிக்கம், சமூகபோராளி, 98427 71751
மு. ஜாகீர் அஹமத், வழக்கறிஞர், 99439 99001
க. யுவராஜ், வழக்கறிஞர், 94826 65265
பெங்களூர் ஆரோக்கியராஜ், சித்த மருத்துவர், 94816 49708
பகத்சிங் மக்கள் சங்கம்
223, கன்னங்குறிச்சி மெயின் சாலை,
அஸ்தம்பட்டி,
சேலம் – 636 007.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக