வெள்ளி, ஜனவரி 20, 2017

அம்பேத்கர் சட்ட உதவி சங்கம் தொடக்க விழாஅம்பேத்கர் சட்ட உதவி சங்கம் தொடக்க விழா,
பகத்சிங் மக்கள் சங்கம் அறிமுக விழாநாள்: 29.01.2017 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.


இடம்: டாக்டர் விஜயராகவாச்சாரியார் நினைவு நூலகக் கட்டிடம் (மாடிப்பகுதி)
செரி ரோடு, 

சேலம்.


(இது அமைப்பு விளக்கத் துண்டறிக்கை. பங்கற்பாளர்கள் பட்டியல் நிகழ்ச்சி நிரலுடன் பின்னர் வெளியாகும்.)      இந்திய அரசியல் சட்டத்தை மீறிச்செயல்படுகிற அரசுகளும், நிர்வாகங்களும் கூடிக்கொண்டுள்ளன. எங்கு பார்த்தாலும் ஊழலும் பணமோசடிகளும் கொடிகட்டிப் பறக்கின்றன. மனித உரிமைப் பாதுகாப்பிற்கான சட்டங்கள், நீதிமன்றங்கள், ஆணையங்கள் அனுபவமுள்ளவர்களைக் கொண்டு செயல்பட்டாலும் நீதி கிடைக்காத சூழல் தலைவிரித்தாடுகிறது. இளைஞர்களிடம் சமூகச் சீரழுவுகளைக் கண்டும் அதற்கான காரணிகளை வேரறுக்க வேண்டும் என்ற அக்கறை பின்னோக்கித்தான் செல்கிறது. 


     இந்தச் சூழல் நல்லவர்களை விரக்திக்குத் தள்ளுகிறது. கொடியவர்களை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துவதாக அமைகிறது. ஆனாலும் அங்கும் இங்குமாக சில பணிகள் ஆக்கப்பூர்வமான வகையில் நடக்கவும் செய்கின்றன. 

 
     எனவேதான் சமூக அக்கறை கொண்ட வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பெண்ணுரிமைச் செயல்பாட்டாளர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், பேராசிரியர்கள் பகத்சிங் மக்கள் சங்கத்தை ஆதரிக்கின்றனர். 


   இச்சங்கம் மதுரையில் புத்தாண்டு தினமான ஜனவரி 01 -ல்  தொடக்கப்பட்டது. மாறுபட்ட தளங்களில் செயல்படும் போராளிகள் கூடி விவாதித்தனர். செயல்திட்டத்தை விரிவு செய்ய தொடர்ந்து தமிழகத்தில் பல பகுதிகளில் இந்த நிகழ்ச்சியைப் பரவலாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 
    அதன் விளைவே 29.01.2017 –ல் சேலத்தில் நிகழ்ச்சி. அத்தோடு அம்பேத்கர் சட்ட உதவி சங்கம் என்ற அமைப்பையும் அன்று தொடக்கி வைக்க உள்ளோம். இந்த சங்கம் மற்ற மாவட்டங்களிலும் செயல்படவேண்டும் என்ற நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளது. 

 
    காவல்துறை போன்ற அதிகார வலுமிக்க அமைப்பு உட்பட அரசின் நிர்வாகம் அரசியல் சட்டத்தைப் பொருட்படுத்தாமல் தன்போக்கில் செயல்படும் அந்நிய அதிகார மையங்களாக இருக்கின்றன. அரசாங்கம் என்ற நிர்வாகம் இல்லாத சூழலைத்தான் நாள்தோறும் பார்க்க முடிகின்றது.

    சட்டங்களை தெரிந்துகொள்ள வாய்ப்பைக் கொடுக்கும் சட்டக் கல்லூரி நிலையங்கள் செலவுமிக்க வியாபார நிலையங்களாக உள்ளன. அடுத்த மாநிலங்களில் பெரும் செலவில் சட்டப்படிப்பு விறபனைக்குக் கிடைக்கும் நிலையில் உள்ளது. இங்கு மாலைநேர சட்டக் கல்லூரிகளை மூடிவிட்டு இந்தச் சட்டக்கல்விக் கொள்ளைக்கு வழியாக்கி விட்டனர்.

     எனவே மக்களிடம் சட்ட விழிப்புணர்வை வளர்க்கவும், செயல்படவும் அம்பேத்கர் சட்ட உதவி சங்கம் என்ற அமைப்பைத் துவங்குகிறோம். இதனைச் சாதிக்கும்படியான செயல்திட்டங்களை உருவாக்கவேண்டும். இன்றைய சீரழிந்த அரசியல் மற்றும் சமூகச் சூழலில் இந்தப் பணி மிகமிக முக்கியத்துவம் பெறுகின்றது. ஆர்வமும் அக்கறையும் உள்ளவர்கள் நிறைய உள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்து எல்லாப் பகுதிகளிலும் செயல்பட வழிவகை செய்யவேண்டும். இதுவே நமக்குக் கிடைக்கின்ற அனுபவப் பாடங்களாகும். 


    நீதிபதி வீ.ஆர்.கிருஷ்ணய்யர், பி.என்.பகவதி ஆகியோர் இந்தியத் தலைமை நீதிபதிகளாகச் செயல்பட்ட காலத்தில் சட்ட உதவி இயக்கத்தை அடையாளப்படுத்தினார்கள். அதனை வலுமிக்கதாக வளர்த்தெடுக்க பலவகை முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் சந்தர்ப்பவாதிகள் அந்த இயக்கம் வலுப்பெறாமல் முடக்குவதி வெற்றி பெற்றனர். 


    ஆகவே இதனை மக்கள் சார்ந்த இயக்கமாக பரவலாக்க வேண்டும் என்ற அக்கறையோடுதான் செயல்படுகிறோம். நீதித்துறையின் ஒரு பகுதியினரது பிற்போக்கான போக்குகள் சட்ட ஆட்சிக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கின்றன. படிநிலைச் சாதி நிறுவனம் மிகச் சீரழிந்த கொடுமைகள் செய்தாலும் நீதி நிறுவனங்கள் வேடிக்கைப் பார்க்கும் கசப்பான அனுபவங்கள் பலரை திகைக்க வைக்கின்றன, நம்பிக்கைகளைச் சீரழிக்கின்றன. ஆனாலும் இன்றைய சமூகத் தேவை இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல ஊக்கப்படுத்துகின்றது. 

  
    எனவேதான் மாமனிதர் அம்பேத்கரின் ஊக்கத்துடன், உற்சாகத்தையும் கொடுக்கும் வழிகாட்டலை உள்வாங்கவேண்டும். ‘கற்பி, ஒன்று சேர், போராடு’ என்பதும் “நம்மிடம் நேர்மை இருக்கின்றது. நம்மிடம் முழுமைபெற்ற நியாயம் இருக்கின்றது. நமது மாண்பினை மீட்டெடுக்க நாம் ஏன் தயங்கவேண்டும்?”, என ஒடுக்கப்பட்ட மக்களின் படைத்தளபதியாக வாழ்ந்து காட்டினார்.எனவே நாமும் சமூக இயக்கம் நடத்துவோம்!

சமூக நீதி மறுக்கும் தளங்களை நொறுக்குவோம்!

அரசியல் சட்ட நோக்கங்களுக்காக செயல்படுத்துவோம்!

அரசியல் சீரழிவுகளை கலையெடுப்போம்!

ஆதிக்கமற்ற சமூகக் கட்டமைப்பை உருவாக்குவோம்!


தவறாமல் வாங்க!

நண்பர்களோடு வாங்க!!

நேரத்துக்கு வாங்க!!!

அமைப்புக்குழு

பொ. இரத்தினம், வழக்கறிஞர், 94434 58118

. மாணிக்கம், சமூகபோராளி, 98427 71751

மு. ஜாகீர் அஹமத், வழக்கறிஞர், 99439 99001

. யுவராஜ், வழக்கறிஞர், 94826 65265

பெங்களூர் ஆரோக்கியராஜ், சித்த மருத்துவர், 94816 49708அம்பேத்கர் சட்ட உதவி சங்கம் &
பகத்சிங் மக்கள் சங்கம்

223, கன்னங்குறிச்சி மெயின் சாலை,

அஸ்தம்பட்டி,

சேலம் – 636 007.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக