திங்கள், ஜனவரி 02, 2017

புத்தாண்டுச் சவால்கள்.

புத்தாண்டு எதிர்கொள்ளும் சவால்கள்.


மு.சிவகுருநாதன்


      பண மதிப்பு நீக்க நடவடிக்கைகள் மூலம் மக்களின் கவனம் முழுவதையும் திசை திருப்பிவிட்டு தனது மக்கள் விரோத, காவிமய, கார்ப்பரேட் ஆதரவு வேலைகளைச் சந்தடிச் சாக்கில் வெகுவிரைவாகச் செய்து வருகிறது மத்திய அரசு.


ஒருசிலவற்றை மட்டும் இங்கு பட்டியலிடுவோம்.


ஊழல்.


தேசபக்திச் சொல்லாடல்கள்.


மதவெறி வன்செயல்கள்.


எல்லையில் வெறிக்கூச்சல்.


காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீதான வன்கொடுமைகள்.


அப்சா போன்ற அடக்குமுறைச் சட்டங்களின் கொடுங்கோன்மை.


சிறுபான்மையினர் விரோதப் போக்கு.

விவசாய விரோதக் கொள்கைகள்.


கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகள்.


தனியார் மயம்.


அரசு வங்கிகள் போன்றவற்றின் மக்கள் விரோதப் போக்கு.


விலைவாசி உயர்வு.


பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு.


குடிசைத் தொழில்கள் நசிவு.


சிறு, குறுந்தொழிகள் புறக்கணிப்பு.


சாதியம், மதவாதம். காவிமய கல்விக் கொள்கைகள்.


கல்வி உரிமைப் பறிப்பு.


ஐந்தாம் வகுப்பில் பெயிலாக்கும் மநு தர்ம அதிகாரம்.


இன்னும், இன்னும்
பட்டியல் நீளுகின்றது.


மாநில அரசோ பி.ஜே.பி.யின் பிநாமி அரசாக மாறியிருக்கிறது.


மாநில உரிமைகளை எதனையும் எதன் பொருட்டும் கைகழுவத் தயாராக இருக்கிறது.


பருவமழை பொய்த்துவிட்டது.


இந்நிலையில் சமூக ஆர்வலர்கள்,
ஜனநாயக சக்திகள்,
மனித உரிமை ஆர்வலர்கள்,
சமூக நல்லிணக்கம் விரும்புவோர்


என பலருக்கும் முன்னெப்பதை விடவும் கடுமையான பணிகள் காத்துக்கிடக்கின்றன.


இந்தப் புத்தாண்டு வெறும் கொண்டாட்டங்களுடன் கடந்துபோகும் ஒன்றாக இருக்க முடியாது; இருக்கவும் கூடாது. அவற்றைக் கடந்து சிந்திக்கவும் செயல்படவும் தேவையிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக