புதன், அக்டோபர் 24, 2018

காவிமயமாகிறதா கல்வித்துறை?

காவிமயமாகிறதா கல்வித்துறை?


மு.சிவகுருநாதன்


        திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவின்படி அம்மாவட்டத்திலுள்ள நடுநிலைப்பள்ளி சமூக அறிவியல் மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி 22.10.2018 அன்று நடந்துள்ளது. 





        ஆர்.எஸ்.எஸ். கிளை அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்விற்கு கல்வித்துறை அனுமதியளித்தது முறைகேடானாது. கல்வி அலுவலர்கள் அனுமதி மற்றும் முன்னிலையில் காவிப் பரப்புரை நடத்த அனுமதித்ததும் கண்டிக்கத்தக்கது.

     ஆசிரியர்கள் இயக்கங்கள், அமைப்புகள் இச்செயலைக் கண்டித்துள்ளன. நமது அரசியல் சட்டம் வலியுறுத்தும் மதச்சார்ப்பற்ற கல்வியை அமல் செய்வது அரசு மற்றும் அலுவலர்களின் கடமை. இதிலிருந்து அவர்கள் தவறக்கூடாது.



           இம்மாதிரியான மதவாதப் பரப்புரைகள் தேர்வுக்கு தயாரிப்பது என்ற பெயரால் கல்விக்குள் நுழைந்துவிட்டதை நான் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளேன். இது மிகவும் அபாயகரமான போக்கு. இதை தொடக்க நிலையிலேயே தடுக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக