புதன், செப்டம்பர் 11, 2019

NCERT பாடநூல்களில் தலித்கள் மற்றும் இஸ்லாமியர்கள் குறித்த மேட்டிமைப் பார்வைகள்

NCERT பாடநூல்களில் தலித்கள் மற்றும் இஸ்லாமியர்கள் குறித்த மேட்டிமைப் பார்வைகள்


(முதல் பகுதி)


மு.சிவகுருநாதன்



           NCERT பாடநூல்களைப் பயன்படுத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நடைபெற்ற சமூக அறிவியல் தேர்வொன்றின் வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இவை படிப்போரை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையிலும் பலரது மனதைப் புண்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. அந்த வினாக்களில் சிலவற்றைக் கீழே காணலாம்.


12. What does caste based discrimination lead to?


(A) Prevents dailts from undertaking certain economic activities.

(B) Denies dalits the respect and dignity given to others.

(C) Both '1' and '2'.

(D) None of them.


13. Identify the person who is considered the 'father of Indian Constitution' and also the leader of the Dalits.


(A) Pandit Jawarlal Nehru

(B) Rani Lakshmibai of Jhansi

(C) Dr. B.R.Ambedkar

(D) Mahatma Gandhiji


15. Which social class did Dr. Bhimrao Ambedkar belong to?


(A) Rich

(B) Poor

(C) Dalit

(D) Economy


16. The government refers to Dalits as .................


(A) Scheduled castes

(B) Economy class

(C) Business class

(D) Priest


17. What do you mean by 'Dalit'?


(A) Foreigners

(B) Untouchables

(C) Middle class

(D) Upper class


18. What is the common stereotypes about Muslims?


(A) Muslims donot send their girls to schools.

(B) They are pure vegetarian.

(C) They donor sleep at all the time of Raza.

(D) All of them. 




இவற்றின் தோரயமான தமிழ் வடிவம் பின்வருமாறு:


12. சாதி அடிப்படையிலான பாகுபாடு எதற்கு வழிவகுக்கிறது?

(அ) சில பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தடுக்கிறது.
(ஆ) மற்றவர்களுக்கு வழங்கப்படும் மரியாதை மற்றும் கவுரவம் தலித்துகளுக்கு மறுக்கப்படுகிறது.
(இ) '1' மற்றும் '2' இரண்டும்.
(ஈ) அவை எதுவும் இல்லை.

13. 'இந்திய அரசியலமைப்பின் தந்தை' என்றும் தலித்துகளின் தலைவராகவும் கருதப்படுபவரை அடையாளம் காண்க.

(அ) பண்டிட் ஜவர்லால் நேரு
(ஆ) ஜான்சியின் ராணி லட்சுமிபாய்
(இ) டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்
(ஈ) மகாத்மா காந்திஜி

15. டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் எந்த சமூக வகுப்பைச் சேர்ந்தவர்?

(அ) பணக்காரர்
(ஆ) ஏழை
(இ) தலித்
(ஈ) பொருளாதார வகுப்பு

16. அரசு தலித்துகளை இவ்வாறு சொல்கிறது.

(அ) பட்டியல் சாதிகள்
(ஆ) பொருளாதார வகுப்பு
(இ) தொழில் வகுப்பு
(ஈ) பூசாரி

17. 'தலித்' என்றால் என்ன?

(அ) வெளிநாட்டினர்
(ஆ) தீண்டத்தகாதவர்கள்
(இ) நடுத்தர வர்க்கத்தினர்
(ஈ) உயர் வகுப்பினர்

18. முஸ்லிம்களைப் பற்றிய பொதுவான முன்முடிவுகள் (stereotypes) யாது?

(அ) முஸ்லிம்கள் தங்கள் சிறுமிகளை பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை.
(ஆ) அவர்கள் தூய சைவ உணவுகளை உண்பவர்கள்.
(இ) அவர்கள் தொழுகையின்போது இரவு முழுவதும் உறங்குவதில்லை.
(ஈ) அவை அனைத்தும்.


         வழக்கம்போல கேந்திரிய வித்யாலயா நிர்வாகம் இவ்வினாத்தாளை நாங்கள் தயாரிக்கவில்லை என்றும், சென்னை மண்டலத்திலுள்ள 49 பள்ளிகளில் இவ்வினாத்தாள் பயன்படுத்தப்படவில்லை, சமூக வலைத்தளங்களில் வெளிவருபவை போலியானவை என்றும் மறுத்துள்ளது. பிறகு யார் தயாரித்திருக்க முடியும்? கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் வெளியாள்கள் உள்ளே நுழைந்து தேர்வுகள் நடத்த வாய்ப்பிருக்கிறதோ என்னவோ! யார் கண்டது?

        காலாண்டு அல்லது பருவத்தேர்வு என்பதாக இல்லாமல் சிறு மாதத்தேர்வாகக் கூட இது இருக்கலாம். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயன்படுத்தப்படும் NCERT பாடநூலிலிருந்துதான் இவ்வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. எனவே வினாத்தாளை மறுத்தால் போதாது; NCERT பாடநூல்களை நாங்கள் பயன்படுத்துவதில்லை என்று வேண்டுமானால் மறுக்கலாம். வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை. பிப்ரவரி 2006 இல் இப்பாடநூல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மறுபதிப்புகளை மட்டுமே கண்டுள்ளது; திருத்தப்பட்டதற்கான விவரங்கள் இல்லை. இந்தப் பாடநூல்களை மாதிரியாகக் கொண்டு தமிழக அரசின் (SCERT) பாடநூல்கள் தயாரிக்கப்பட்டிருப்பது ஆகக்கொடுமை. எல்லாம் ‘நீட்’ மயம்! புதிய கல்விக்கொள்கை அமலானால் இவை தமிழிலும் கிடைக்குமாம்! எனவே தமிழக அரசிற்கு செலவு மிச்சமாகும்!

      இவ்வினாத்தாளின் ஒரு பக்கம் மட்டுமே சமூக வலைத்தளங்களில் கிடைக்கிறது. இதை வெளிப்படுத்திய ஆட்கள் முழு வினாத்தாளையும் படமெடுத்து வெளியிட்டிருக்கலாம். இதில் ஏன் கஞ்சத்தனம்? நமது கருத்து என்னவென்றால் வினாத்தாள் போலியாகவே இருந்துவிட்டுப் போகட்டும். இந்த வினாத்தாளுக்குரிய பாடநூலில் இடம்பெற்றுள்ள நச்சுக் கருத்துகளைத் திரும்பப்பெறுவதும் மீண்டும் இதுபோல் நடக்காமல் கண்காணிப்பதும் NCERT, கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசு நிறுவனங்களின் கடமையும் பொறுப்புமாகும்.

         NCERT சமூக அறிவியல் (Social Studies) பாடநூல்கள் மூன்று தொகுதியாக உள்ளது. ஆறாம் வகுப்பில் அவை கீழ்க்கண்டவாறு உள்ளன.

வரலாறு: History – Our Past (11 chapter) பதிப்பு: பிப்.2006

புவியியல்: The Earth Our Habitat (8 chapter) பதிப்பு: பிப்.2006

அரசியல் அறிவியல்: Social and Political Life (9 chapter) (தமிழகத்தில் குடிமையியல்) பதிப்பு: பிப்.2006

      இதில் ‘Social and Political Life’ எனும் பாடநூலின் ‘Diversity and Discrimination’ என்ற இரண்டாவது அலகிலனடிப்படையில்தான் மேற்கண்ட வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. அப்பாடத்தில் இறுதியில் இவ்வினாக்கள் இல்லையெனினும் அப்பாடத்தில் சொல்லப்பட்ட கருத்துகள் அடிப்படையில் இவ்வினாக்கள் கேட்கப்பட்டுள்ளதை யாரும் மறுக்க இயலாது. அப்பாடத்தைப் படித்தால் இது விளங்கும்.

    தமிழகப் பாடநூல்களைப் போல NCERT பாடநூல்களில் பாடத்தின் பின்பகுதியில் பல்வேறு வகையான பயிற்சி வினாக்கள் இருக்காது. ஆசிரியரோ அல்லது வினாத்தாள் எடுப்பவர்கள்தான் வினாக்களைப் பாடப்பகுதிகளிலிருந்து உருவாக்குகின்றனர்.

      பாடம் எந்த தொனியில் உருவாக்கப்பட்டிருப்பினும் ஆசிரியர்கள் அவற்றைப் புரிந்துகொள்வதன் அடிப்படையிலேயே இது நடக்கிறது. பாலின வேறுபாட்டைக் களையவேண்டும் என வலியுறுத்தும் பாடங்கள் கூட பெண்கள் செவிலியர், ஆசிரியர் போன்ற பணிகளை மட்டுமே செய்யமுடியும் என்று வகுப்பறைகளில் மாற்றப்படுவதை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.

       அதைப்போன்றே இங்கு பாகுபாட்டை களையவேண்டும் என்று சுட்டப்படும் எடுத்துக்காட்டுகள் மீண்டும் பாகுபாட்டை உற்பத்தி செய்வதாகவும், அதற்குக் காரணமான மத நிறுவனங்களைப் பாதுகாப்பதாகவும் அமைந்துள்ளன. பல்லாண்டுகளாக எவ்வித கேள்விகளும் இன்றி இவை அப்படியே ஒப்பிப்பதாக இருப்பது வேதனை. மேலும் இவை உச்சபட்ச தரம் என போற்றப்படுவதும் இங்கு கவனிக்கத்தக்கது.


     “Some people may experience both kinds of dis-crimination. They are poor and they belong to groups whose culture is not valued. Tribals, some religious groups and even particular regions, are discriminated against for one or more of these reasons. In the following section we will look at how a famous Indian was discriminated against. This will help us understand the ways in which caste was used to discriminate against large numbers of people. (page:18)


    பாகுபாடுகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன? அதன் அடிப்பட்டைகள் என்ன? என்பதைப் பாடநூல் கண்டுகொள்வதில்லை. எந்தக் கலாச்சாரம் மதிப்புடையது அல்லது மதிப்பற்றது என்பதற்கு ஏதேனும் தர அளவுகோல்களை நிர்ணயிக்க முடியுமா? பொருளியல் பாகுபாட்டை குழந்தைகள் உணரமுடியும்; புரிந்துகொள்ளவும் முடியும். சமூகப் பாகுபாடான சாதிமுறையைப் பற்றி எதுவும் பேசாமல் உயர்சாதி (upper caste), கீழ்சாதி (lower caste) என்று சொல்வது கொடூரமானது. உயர்த்தப்பட்ட சாதி, தாழ்த்தப்பட்ட சாதி என்கிற சொல்லாடல்களை தமிழகப் பாடநூல்கள்கூட பயன்படுத்தாத வேதனையான நிலைதான் உள்ளது. பாடநூல் எழுதுபவர்களின் ஆதிக்க உணர்வுகளுக்கு இதுவோர் எடுத்துக்காட்டு.

     உயர்சாதி, கீழ்சாதி என்ற சொற்களை அடிக்கடிப் பயன்படுத்துவதோடு, அடித்தள சாதிகளை மட்டும் குறிப்பிட்டுவிட்டு, உயர்த்தப்பட்ட சாதிகள் எவை அவை ஏன் உயர்த்தப்பட்டன என்பதையும் மிகச் சாதுர்யமாக மறைத்துவிடுகின்றன.


   “On being discriminated against People are engaged in different kinds of work like teaching, carpentry, pottery, weaving, fishing, farming etc. to earn a livelihood. However, certain kinds of work are valued more than others. Activities like cleaning, washing, cutting hair, picking garbage are seen as tasks that are of less value and people who do this work are seen as dirty or impure.

    This belief is an important aspect of the caste system. In the caste system, communities / groups of people were placed in a sort of ladder where each caste was either above or below the other. Those who placed themselves at the top of this ladder called themselves upper caste and saw themselves as superior. The groups who were placed at the bottom of the ladder were seen as unworthy and called "untouchables".

  Caste rules were set which did not allow the so-called "untouchables" to take on work, other than what they were meant to do. For example, some groups were forced to pick garbage and remove dead animals from the village. But they were not allowed to enter the homes of the upper castes or take water from the village well, or even enter temples. Their children could not sit next to children of other castes in school. Thus upper castes acted in ways, which did not give the so-called "untouchables" the same rights as they enjoyed”.


     மேற்கண்ட பத்திகளில் உருவாக்கப்படும் கதையாடல்களின் வழி சுத்தம் X அசுத்தம், மதிப்புடைய தொழில்கள் X மதிப்பற்ற தொழில்கள், உயர்சாதியினர் தீண்டத்தகாதோர் என்கிற முரணெதிர்வுகள் கட்டமைக்கப்படுகின்றன. இதன் வழியே இப்பாகுபாடுகள் இயல்பானதாக தோற்றமளிக்கின்றன. மேலும் இதன் வழியே பிறப்பின் அடிப்படையில் உருவாகும் வருண அமைப்பு கேள்விக்கிடமின்றி நிலைநிறுத்தப்படுகிறது. இவற்றிலிருந்து மதம் காரணமல்ல என்பது வலியுறுத்தப்படுகிறது. அவர்கள் செய்யும் தொழில், அசுத்தம் ஆகியவற்றால் இவர்கள் கீழ்சாதிகளாக ஆயினர் என்கிற கற்பிதம் வலிந்து உருவாக்கப்படுகிறது.


“Dr Bhimrao Ambedkar, one of the greatest leaders of India, shares his first experience of caste-based discrimination, which took place in 1901 when he was just nine years old”.


     அண்ணல் அம்பேத்கரை ஓரிடத்தில் இந்தியத் தலைவர் என்று குறிப்பிட்டாலும் பிறிதோரிடத்தில் ‘தலித்களின் தலைவர்’ என்று சொல்கின்றனர். எனவே கீழ்க்கண்ட வினா அமைக்கப்படுகிறது.

      காந்தி, நேரு, நேதாஜி, ராஜாஜி, சத்தியமூர்த்தி போன்றோர் இந்தியத் தலைவர்களாகவும் தேசியத் தலைவர்களாகவும் இருக்கும்போது அம்பேத்கர் தலித் தலைவராகவும் பெரியார் தமிழகத் தலைவராகவும் ஆவதேன்?


     “Dr Bhim Rao Ambedkar (1891-1956) is considered the father of the Indian Constitution and is also the best known leader of the Dalits”.

       எட்டாம் வகுப்பிலும் இதே நிலைதான். “There were other jobs too. The army, for instance, offered opportunities. A number of Mahar people, who were regarded as untouchable, found jobs in the Mahar Regiment. The father of B.R. Ambedkar, the leader of the Dalit movement, taught at an army school”. (VIII, page: 101)

13. Identify the person who is considered the 'father of Indian Constitution' and also the leader of the Dalits.

(A) Pandit Jawarlal Nehru

(B) Rani Lakshmibai of Jhansi

(C) Dr. B.R.Ambedkar

(D) Mahatma Gandhiji


      கீழ்க்கண்ட பத்தி என்ன சொல்கிறது என்று கவனியுங்கள். இதிலிருந்து அம்பேத்கரின் சாதி என்ன? என்ற கேள்வி உருவாகிறது.

      “Dr Ambedkar fought for the rights of the Dalit community. He was born into the Mahar caste, which was considered untouchable. The Mahars were poor, owned no land and children born to them also had to do the work their parents did. They lived in spaces outside the main village and were not allowed into the village”.

15. Which social class did Dr. Bhimrao Ambedkar belong to?

(A) Rich

(B) Poor

(C) Dalit

(D) Economy


     “When India became a nation in 1947 our leaders too were concerned about the different kinds of inequalities that existed. Those who wrote the Constitution of India, a document that laid out the rules by which the nation would function, were aware of the ways in which (page:21) discrimination had been practised in our society and how people had struggled against this. Many leaders of these struggles such as Dr Ambedkar had also fought for the rights of the Dalits”. (VI, page:22)

     “This was done not by one person but by a group of around 300 people who became members of the Constituent Assembly in 1946 and who met periodically for the next three years to write India’s Constitution”. (VIII, Indian Constitution, page: 10)

      “Between December 1946 and November 1949, Constituent Assembly drafted a Constitution for independent India”. (VIII, Indian Constitution, page: 05)

       மேற்கண்ட வரிகளுக்குள்ள முரண்பாட்டை விளங்கிக் கொள்ள சிரமப்படத் தேவையில்லை. அரசியலமைப்பு உருவாக்கத்தில் அம்பேத்கரின் உழைப்பை மறுத்தல், ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான வன்மம் என்பதாக நீள்கிறது பாடநூல். பகிஷ்கரித் ஹிதகரணி சபா, சுதந்திர தொழிலாளர் கட்சி, பட்டியலின சாதிக் கூட்டமைப்பு, குடியரசுக் கட்சி என பல்வேறு வடிவம் கொள்ளும் அம்பேத்கரின் அரசியல் தலித்கள், அடித்தட்டு மக்கள், பிற்படுத்தப்பட்டோர், தொழிலாளர்கள், பெண்கள், மத, மொழிச் சிறுபான்மையினர் என எண்ணிக்கையில் பெரும்பகுதியாக உள்ள சமூகங்களுக்கானதாக இருந்தது. அரசியல் சட்ட உருவாக்கத்தில் இதன் தாக்கம் வெளிப்பட்டது.


     “Dalit is a term that people belonging to so-called lower castes use to address themselves. They prefer this word to 'untouchable'. Dalit means those who have been 'broken'. This word according to Dalits shows how social prejudices and discrimination have 'broken' the Dalit people. The government refers to this group of people as Scheduled Castes (SC)”. (page:19)

         தீண்டாமை பற்றி புதிய கருத்தாக்கங்கள் பரப்பப்படுகின்றன. பிராமணர்கள் தங்களை தீண்டப்படாதவர்களாக அந்நியப்படுத்துக்கொண்டனர் (பார்க்க: சந்நியாசமும் தீண்டாமையும் – ராமாநுஜம், புலம் வெளியீடு), என்பதைப்போல தலித்கள் தங்களைத் தாங்களே தீண்டத்தகாதவர்களாக ஆக்கிக்கொண்டனர் என்றுகூட சொல்வார்கள் போலும்!

      ‘தலித்’ எனும் மராத்திச் சொல்லுக்கு ‘உடைபட்ட’ என்பது மட்டுமல்ல; ‘நசுக்கப்பட்ட’, ‘ஒடுக்கப்பட்ட’ என்பதுகூட பொருளாகும். ஒடுக்கப்பட்ட (suppressed) என்ற பொருள் வந்துவிடக்கூடாது என்ற கவனம் பாடம் எழுதியவர்களுக்கு இருந்திருக்கிறது. மகாத்மா ஜோதிபா புலே அறிமுகப்படுத்திய இச்சொல்லின் பொருளைத் திரிக்கும் வேலையிது. எட்டாம் வகுப்பிலும் இதுவே உள்ளது.

     “The term Dalit, which means ‘broken’ is used deliberately and actively by groups to highlight the centuries of discrimination they have experienced within the caste system”. (Political Science, Chapter 8, Confronting Marginalisation, page: 95)

16. The government refers to Dalits as .................

(A) Scheduled castes

(B) Economy class

(C) Business class

(D) Priest


17. What do you mean by 'Dalit'?

(A) Foreigners

(B) Untouchables

(C) Middle class

(D) Upper class


     “As pointed out earlier, many Dalits organised themselves to gain entry into temples”. இன்று தலித் குடியரசுத் தலைவரானாலும் கோயிலுக்குள் நுழைய முடியாத நிலைதானே உள்ளது. குறிப்பிட்ட எல்லைக்குள் நின்று வழிபடுதல் என்பதைத்தான் ஆலய நுழைவு என்பது குறிக்கின்றது. கருவறையில் நுழைதல், அர்ச்சகராகப் பணிபுரிதல் போன்றவை தலித்களுக்கு மட்டுமல்ல; இதர பிற்பட்டோருக்கும் இன்றும் மறுக்கப்பட்டே வருகிறது.

    “A common stereotype about some Muslims is that they are not interested in educating girls and therefore do not send girls to school. However, studies have now shown that poverty amongst Muslims is an important reason why Muslim girls do not attend school or drop out from school after a few years.

     Wherever effort has been made to reach education to the poor, there the Muslim community has shown an interest in sending their girls to school.

     For example in the state of Kerala the distance between the school and the home is not much. There is a good government bus service that helps teachers reach schools in rural areas and over sixty per cent of the teachers are women. These factors have helped children from poorer families, including Muslim girls, attend school in much larger numbers.

     In other states, where such efforts have not been made children from poorer families whether Muslim, tribal or so - called lower castes find it difficult to attend school. Therefore, poverty, not religion, is the cause for non-attendance of Muslim girls in school”. (page:18)

    இஸ்லாமியர்கள், தலித்கள் மீதான முன்முடிவுகள், தப்பெண்ணங்கள் ஆகியவற்றை எடுத்துகாட்டுவதாக நினைத்துக்கொண்டு புதிய தப்பெண்ணங்களை குழந்தைகளை மனதில் நிலைநிறுத்த முயல்வது கொடுமை. பெண்களைப் பள்ளிக்கு அனுப்பாமலிருப்பதற்கு இஸ்லாம் மதம் காரணமல்ல; அவர்களின் வறுமைதான் என்ற சச்சார் குழு பரிந்துரைகளை எடுத்துக்காட்டுகிறது. இதன் மறுதலையாக சாதிப்பாகுபாட்டிற்கு இந்து மதம் காரணமல்ல; தூய்மை, அசுத்தம் போன்றவைதான் காரணம் என மறைமுகமாகச் சொல்ல வருகின்றனர்.

     கேரளாவை மட்டும் சொல்பவர்கள் தமிழகத்தில் பெண்கல்விக்கு எடுத்துவரும் நடவடிக்கைகளை அறியாமலிருப்பது தெரிகிறது.

      இந்த ஒரு பாடநூல் மட்டுமல்ல; NCERT இன் பல பாடநூல்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களையும் தலைவர்களையும் இழிவு செய்வதையும் நோக்கமாகக் கொண்டவை. உதாரணமாக, எட்டாம் வகுப்பு வரலாற்றுப் பாடநூலிலிருந்து சில பகுதிகள்,

     “the practice of untouchability has been abolished by the Indian Constitution. However, manual scavengers in different parts of the country, the Bhangis in Gujarat, Pakhis in Andhra Pradesh and the Sikkaliars in Tamil Nadu, continue to be considered untouchable. They often live in separate settlements on the outskirts of the village and are denied access to the temple, public water facilities etc”. (page: 101, History VIII, Chapter 8, Women, Caste and Reform)

    “Leatherworkers have been traditionally held in contempt since they work with dead animals which are seen as dirty and polluting”. (page: 101)

      “Madigas were an important untouchable caste of present-day Andhra Pradesh. They were experts at cleaning hides, tanning them for use, and sewing sandals”. (page: 101)

    “One of the most vocal amongst the “low-caste” leaders was Jyotirao Phule”. (page: 103)
  
     “E.V. Ramaswamy Naicker, or Periyar, as he was called, came from a middle-class family”. (page: 105)

     மகாத்மா ஜோதிபா புலேவை ‘கீழ்சாதித் தலைவர்’ என்பதும், தந்தை பெரியாரை ‘ஈ.வெ.ராமசுவாமி நாயக்கர்’ என்று சாதிப்பெயருடன் எழுவதும் என இவர்களது அத்துமீறல்கள் தொடர்கின்றன. மேலும் இது குறித்து அடுத்த பகுதியில் காண்போம்.

(தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக