வியாழன், நவம்பர் 14, 2019

உயர் சிந்தனையா உயர் குழப்பமா?


உயர் சிந்தனையா  உயர் குழப்பமா?
(மொழிபெயர்ப்பு, வினா அமைப்புக் குளறுபடிகள்…)

மு.சிவகுருநாதன்
  
  (2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 46) 
          எளிமையான வினாக்களைப் பாடநூலில் கேட்டால் அது இழிவானதாக்கும்! எளிமை இழிவு, மோசம் என்கிற வாய்பாட்டை உருவாக்கியுள்ளனர். இருக்கின்ற வினாக்கள் அனைத்தும் Low Order Thinking (LOT), Middle Order Thinking (MOT) என இருப்பதால் உயர் சிந்தனை வினாக்களைக் (Higher Order Thinking - HOT) கேட்டு போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை உற்பத்தி செய்வதே இலக்காகச் சொல்லப்படுகிறது. வினாவை கடினமாக இருப்பது மாணவர்களுக்கு மட்டுமல்ல; அதை உருவாக்க ஆசிரியர்களுக்கும் கடும் உழைப்பு தேவை. இங்கு மாற்றி மாற்றிப் போடுவதும் அபத்தமாக வினா கேட்பதும் உயர் சிந்தனை (HOT) என்பதான புரிந்து கொள்ளலும் உயர் சிந்தனைப் பாவனையும் இருப்பது பாடநூல்களில் பளிச்சிடுகிறது. கூடவே இதன் மொழியாக்கச் சிறப்பையும் நீங்கள் கண்டு களிக்கலாம்!

இருபத்தொன்று:

பாரசீகத் தூதுவர் (பயணி)  சிற்பக் கலைஞரான உருமாற்றம்!
அஷ்டதிக்கஜங்களிலிருந்து  தெனாலிராமகிருஷ்ணா நீக்கம்!

       ஏழாம் வகுப்பு இரண்டாம் பருவ வரலாற்றில் ‘விஜயநகர், பாமினி அரசுகள்’   என்றொரு பாடம். இப்பாடத்தில் இடம் பெறும் ‘பொருத்துக’ வினாவில் பாரசீகத் தூதுவர் அல்லது பயணி அப்துர் ரசாக் பாரசீக சிற்பக் கலைஞரான உருமாறியுள்ளார்! 

   தெனாலிராமகிருஷ்ணாவுக்கு அவர் எழுதிய ‘பாண்டுரங்க மகாமத்தியம்’ என்ற நூல் உள்ளது. அஷ்டதிக்கஜம் (ஒருமை) கிருஷ்ண தேவராயாவுக்கு  ‘அஷ்டதிக்கஜம்’ என்பதைப் பொருத்த வேண்டும். எனவே தெனாலிராமகிருஷ்ணா அஷ்டதிக்கஜங்களிலிருந்து நீக்கப்பட்டது தெளிவாகிறது! இங்கு ஆங்கிலத்திற்கேற்ப ‘கிருஷ்ண தேவராயா, விஜயநகரா, பிரதாபருத்ரா’ என்று எழுதுவதையும் கண்டு ரசியுங்கள்!

தமிழ் வழியில்,

“III. பொருத்துக

விஜயநகரா             ஒடிசாவின் ஆட்சியாளர்
பிரதாபருத்ரா           அஷ்டதிக்கஜம்
கிருஷ்ண தேவராயா    பாண்டுரங்க மகாமத்தியம்
அப்துர் ரசாக்            வெற்றியின் நகரம்
தெனாலிராமகிருஷ்ணா  பாரசீக சிற்ப கலைஞர்”.   (பக்.125)

ஆங்கில வழியில்,

“III. Match the following

1. Vijayanagara - Ruler of Odisha
2. Prataparudra - Astadiggajas
3. Krishna Devaraya - Pandurangamahatyam
4. Abdur Razzaq - City of victory
5. Tenali Ramakrishna - Persian emissary”.   (Page: 106)

இருபத்திரண்டு:

பொருத்தமான விடைகளை எங்கேத் தேடுவது?

       மேலே குறிப்பிட்ட பாடத்தில் மற்றொரு வினா. கொடுக்கப்பட்ட நான்கு விடைகளும் பொருத்தமானவை அல்ல. ஆறிலிருந்து பத்து முடிய அனைத்து வகுப்புகளிலும் இதே நிலைதான். “I, II , மற்றும் IV சரி”, என்பதுதான் பொருத்தமான விடை. இதை நான்கிலும் காணவில்லை. உரிய விடை இல்லாமலிருப்பதும், தவறான விடைகளைத் தருவதும் உயர் சிந்தனை என்று நினைத்துக் கொண்டால் நம்மால் என்ன செய்ய முடியும்?

  பாடநூல் கீழ்க்கண்டவாறு சொல்கிறது.

      “பாமினி அரசை நிறுவிய அலாவுதீன் ஹசன் ஷா, அலாவுதீன் கில்ஜியின் படைத்  தளபதிகளில் ஒருவரான ஜாபர்கான் என்பவரின் முயற்சியால் மூல்தானில் கல்வி கற்றார். அவர் அரசரான பின்னர் தமது மகன்கள் கல்வி கற்பதற்காக ஒரு பள்ளியை நிறுவுவதில் சிறப்பு கவனம் செலுத்தினார். அவருடைய மகன் முதலாம் முகமது கல்வி கற்பதை  ஆதரித்தவராவார். பிரபுக்கள் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் போர்வீரர்களுக்கான  கலைகளில் பயிற்சி பெறுவதற்காகப் பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்தினார்”. (பக்.123)

 
தமிழ் வழியில்,

“4. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. 

பொருத்தமான விடையை ( ) டிக் இட்டு  காட்டவும்

I. பச்சைக்கலந்த நீலவண்ணத்தைக்  கொண்ட விலையுயர்ந்த கற்களால்
ஆன அரியணை பாரசீக அரசர்களின் அரசவையை அலங்கரித்தன என 
பிர்தௌசி தன்னுடைய ஷா நாமா எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

II. விஜயநகர, பாமினிஅரசர்களுக்கிடையே  மோதல்கள் ஏற்படுவதற்குக் கிருஷ்ணா- துங்கபத்ரா நதிகளுக்கு இடைப்பட்ட  செழிப்பான பகுதி மற்றும் கிருஷ்ணா - கோதாவரி நதிகளுக்கு இடைப்பட்ட  கழிமுகப் பகுதியே காரணமாக  அமைந்தன.

III. முதலாம் முகமது முல்தானில் கல்வி பயின்றார்.

IV. முகமது கவான் மூன்றாம் முகமதுவின் கீழ் தனித்தன்மை மிக்க பிரதமஅமைச்சராக பணியாற்றினார்.

அ) I மற்றும் II சரி
ஆ) I, II மற்றும் III சரி
இ) II, III , மற்றும் IV சரி
ஈ) III , மற்றும் IV சரி”.     (பக்.126)

ஆங்கில வழியில்,

“4. Consider the following statements and find  out which is/are correct
I. Turquoise throne is one of the bejewelled royal  seats of Persian kings described in Firdausi’s  Shah Nama.
II. The fertile regions between the rivers Krishna  and Tungabhadra and Krishna–Godavari  delta were the zones of conflict among the  rulers of Vijayanagar, and Bahmani. 
III. Muhammad I was educated at Multan.
IV. Mahmud Gawan served with great  distinction as the Prime Minister under  Muhammad III.
a). i), ii), are correct
b). i), ii), iii) are correct
c). ii), iii), iv) are correct
d). iii), iv), are correct”.  (Page:106)

இருபத்து மூன்று:

அக்பர் கல்விப் புரவலரா, பாதுகாவலரா?

   அக்பர் கல்விக்கு  அதாவது கற்றலுக்கு (learning) உதவி புரிந்தார் என்பதை புரவலர் (patron) என்பதானே சரியாக இருக்க முடியும் பாதுகாவலன் என்று சொல்வது சரியா? வினாக்கள் கீழ்க்கண்டவாறு கேட்கப்பட்டுள்ளது.

2. அக்பர் கற்றலின் பாதுகாவலன் மதிப்பிடுக.   (பக்.144)

2. Estimate Akbar as a patron of learning. (Page:121)

ஆங்கில வழியில்,  ‘Contributions to culture’,

     “Akbar was a great patron of learning. His  personal library had more than four thousand  manuscripts. He patronised scholars of all  beliefs and all shades of opinions. He extended  his benevolence to authors such as Abul Fazl,  Abul Faizi and Abdur Rahim Khan-i-Khanan,  the great storyteller Birbal, competent officials  like Raja Todar Mal, Raja Bhagwan Das and  Raja Man Singh. The great composer and  musician Tansen and artist Daswant adorned  Akbar’s court as well”. (Page:113)


இருபத்து நான்கு:


ஆனைமலையும்  குரங்கு அருவியும்  கோயம்புத்தூர் மாவட்டத்தில்தானே உள்ளன?

     ஏழாம் வகுப்பு இரண்டாம் பருவ சமூக அறிவியல் புவியியல் பகுதியில் 'சுற்றுலா' என்ற பாடத்தில் கேட்கப்பட்டுள்ள பொருத்துக வினா கீழே தரப்படுகிறது.


பொருத்துக.


ஆனைமலை வாழிடம்     மேற்கு வங்காளம்

குரங்கு அருவி            கோவா

டார்ஜிலிங்                கோயம்புத்தூர்

இயற்கையின் சொர்க்கம்   உயர் விளிம்பு

அகுதா கடற்கரை          ஜவ்வாது       (பக்.189)


Match the following
  1.  Anamalai hills     West Bengal
  2. Monkey falls     Goa
  3. Darjeeling       Coimbatore
  4. Nature’s Haven Top slip
  5. Aguda Beach   Javadi (Page:159)

      ஆனைமலை வாழிடமும் குரங்கு அருவியும் (ஆழியாறுகோயமுத்தூர் மாவட்டத்தில்தான் உள்ளன. எனவே இரண்டிற்கும் 'கோயமுத்தூர்' எனும் விடை  பொருத்தமானது தானே

ஆனைமலை வாழிடம் - உயர் விளிம்பு

குரங்கு அருவி - கோயம்புத்தூர்

என்று மட்டுமே  விடை எழுத வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா?      இம்மாதிரியான குழப்பமேற்படுத்தும், ஒன்றிற்கு மேற்பட்டவற்றிற்கு விடையாக வருவனவற்றைத்  தவிர்ப்பது நல்லது
 

இருபத்தைந்து:

மொழிபெயர்ப்புக் குளறுபடிகள்

     ஏழாம் வகுப்பு இரண்டாம் பருவ சமூக அறிவியல் குடிமையியல் பகுதியில் 2 - வது பாடம் ‘ஊடகமும் ஜனநாயகமும்’. இதை ‘ஊடகமும் மக்களாட்சியும்’ என்று எழுதுவதில் என்ன தடையோ தெரியவில்லை?


    ‘Narrowcast Media’ ஐ குறுகிய தொடர்பு ஊடகம், குறு அளவிலான  ஊடகம்  என்றும் ‘Broadcast Media’ ஐ தொலைத் தொடர்பு ஊடகம், ஒலிபரப்பு ஊடகம் என்று சொல்வது சரியா? குழப்பமில்லாத மொழியாக்கம் இல்லையா? குறுந்தொலைவாக இருப்பின் அது ஒலிபரப்பில் வராதா? ‘Direct mail – ‘நேரடி அஞ்சல்’ என்றால் என்ன? இது அஞ்சலா, அல்லது மின்னஞ்சலா? ஏனிப்படி குழப்ப வேண்டும்? “Twitter, Facebook, whatsApp and Instagram”, ஆகிய சொற்களுக்கு  “கீச்சகம், முகநூல், புலனம்/கட்செவி அஞ்சல் மற்றும் படவரி”, என்று சொல்வது எத்தனை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குப் புரியும்? இங்கும் அஞ்சலா? புதிய சொல்லாக்கங்களைப் பயன்படுத்தும்போது அடைக்குறிக்குள் ஆங்கிலத்தில் தருவது அவசியம்.  


      பாடநூல் கீழ்க்கண்டவாறு ஊடகத்தை வகைப்படுத்துகிறது. தமிழ் வழியில்,


“குறுகிய தொடர்பு ஊடகம்: கேபிள் தொலைக்காட்சி, நேரடி அஞ்சல், கருத்தரங்கு

தொலைத் தொடர்பு ஊடகம்: திரைப்படங்கள் தொலைக்காட்சி, வானொலி 

அச்சு ஊடகம்: செய்தித்தாள்கள், இதழ்கள், பத்திரிக்கைகள் புத்தகங்கள், 
சுவரொட்டிகள், அறிக்கைகள்

இணைய ஊடகம்: கூகுள் இணைய தளங்கள் மற்றும் வலைப்பதிவுகள் 

சமூக ஊடகம்: கீச்சகம், முகநூல், புலனம்/கட்செவி அஞ்சல் மற்றும் படவரி”.  (பக்.205)

ஆங்கில வழியில், ‘Classification of Media’,

“Narrowcast Media: Cable Television, Direct mail, Seminar
Broadcast Media: Films, Television, Radio
Print Media: Newspapers, Magazine, Journals, Books, Posters, Reports
Web Media: Google website and Blogs
Social Media: Twitter, Facebook, whatsApp and Instagram”.  (Page:172)


“III. பொருத்துக.

1. குறு அளவிலான  ஊடகம்  - கூகுள் இணையம் 
2. சமூக ஊடகம் - சுவரொட்டிகள் 
3. அச்சு ஊடகம் - கருத்தரங்கு
4. இணைய ஊடகம் - திரைப்படங்கள் 
5. ஒலிபரப்பு ஊடகம் – முகநூல்”.  (பக்.209)

ஆங்கில வழியில்,

“Match the following,


  1.    Narrowcast media - films
  2.   Social media - posters
  3.   Print media - seminar
  4.   Web media - google web site
  5.    Broadcast media – facebook”.   (Page: 175)


இருபத்தாறு:

தொலைப்பேசி, அலைப்பேசி என அழுத்த வேண்டுமா? ‘Telex’ தான் தொலைபேசியா?

    Telex’ என்று அதை சொல்ல வருகிறார்கள்?  ‘Tele printer’ என்பதையா? தமிழில் தொலைபெசி என்கின்றனர். ‘Telephone’  எப்போது Telex’ ஆனது?

“3. உலகினை மக்களின் அருகாமையில்  கொண்டு வந்த ஊடகம்
அ) தட்டச்சு ஆ) தொலைக்காட்சி  இ) தொலைப்பேசி
ஈ) இவற்றில் எதுவும்  இல்லை”. (பக்.209)

“3. Which invention has brought the world  closure?
a.   Typewriter b. Television c. Telex d. none of these”.இருபத்தேழு:

உயர் சிந்தனைகளில் ஒன்று தமிழுக்குத் தேவையில்லையோ!

    ஏழாம் வகுப்பு ‘ஊடகமும் ஜனநாயகமும்’ பாடத்தில் உயர் சிந்தனை வினாக்கள் ஆங்கில வழியில் நான்கும் தமிழ் வழியில் மூன்றும் காணப்படுகின்றன.

“4. Media is a boon or bane”., என்ற வினா தமிழுக்குத் தேவையில்லை என நீக்கப்பட்டுள்ளது.


“VII. உயர் சிந்தனை வினா, தமிழ் வழியில்,

1. ஊடகம் அவசியமா? ஏன்?
2. பத்திரிக்கையாளர் சந்திப்பை பற்றி நீவிர்  அறிந்தவற்றை எழுதுக.
3. ஊடகம் நம் அன்றாட வாழ்க்கையில் எந்தவகையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது?”. (பக்.210)


“VII. HOTs, ஆங்கில வழியில்,

1. Is Media necessary? Why?
2. What do you know about the term press  conference?
3. In what ways media affects our daily lives?
4. Media is a boon or bane”.


இருபத்தெட்டு:

இவற்றைக் காலவரிசைப் படுத்த முடியுமா?

  
    பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் இரண்டாம் தொகுதி, குடிமையியல், ‘இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை’ பாடத்தில் கீழ்க்கண்ட வினா உள்ளது.

தமிழ் வழியில்,

“பின்வரும் கூற்றினைப் படித்து பொருத்தமானவிடையைத் தேர்ந்தெடுக்கவும்

1.   பின்வருவனவற்றைக் காலவரிசைப்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து  சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

(i) பஞ்சசீலம் 
(ii) பொக்ரானில் அணுவெடிப்புச் சோதனை
(iii) 20 ஆண்டுகள் ஒப்பந்தம்
(iv) முதல் அணுவெடிப்புச் சோதனை

அ) (i), (iii), (iv), (ii) ஆ) (i), (ii), (iii), (iv)
இ) (i), (ii), (iv), (iii) ஈ) (i), (iii), (ii), (iv”.  (பக்.151)

ஆங்கில வழியில்,

“III. Consider the following  statement and tick the  appropriate answer.

1.   Arrange the following in the correct  chronological order and choose the correct  answer from the code given below.

(i) Panchsheel  (ii) Nuclear test at Pokhran
(iii) Twenty-year Treaty  (iv) First Nuclear test 

a) (i), (iii), (iv), (ii) b) (i), (ii), (iii), (iv)
c) (i), (ii), (iv), (iii) d) (i), (iii), (ii), (iv)”.   (Page: 137)

  இவற்றின் ஆண்டுகளைச் சேர்க்கும்போது, கீழ்க்கண்ட ஆண்டுகள் கிடைக்கின்றன.

பஞ்சசீலம் - 1954
பொக்ரானில் அணுவெடிப்புச் சோதனை - 1974
20 ஆண்டுகள் ஒப்பந்தம் - 1971
முதல் அணுவெடிப்புச் சோதனை – 1974

     பொக்ரானில் அணுவெடிப்புச் சோதனை (1974), முதல் அணுவெடிப்புச் சோதனை (1974) ஆகிய இரண்டும் வெவ்வேறா; ஒன்றுதானே! சீனாவின் லாப் நார் அணுச் சோதனையை (1964) குறிப்பிட்டிருந்தால் சிக்கலில்லை.இருபத்தொன்பது:

‘பிரிக்ஸ்’ இல் இந்தியா உறுப்பினாராக இல்லையா?

     பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் இரண்டாம் தொகுதி,  குடிமையியலில் ‘இந்தியாவின் சர்வதேச உறவுகள்’ என்ற பாடம் உள்ளது. இதை  ‘இந்தியாவின் பன்னாட்டு உறவுகள்’ என்று சொல்லக்கூடாதா?

   கீழக்கண்ட வினாவிற்கான பதிலில் எந்த விடையும் பொருந்துவதில்லை. ‘எந்த அமைப்பில்’ என ஒருமையில் கேட்டாதால் ஒரு அமைப்பு என்றாகிறது. அதை இவர்கள் ‘பிரிக்ஸ்’ என்று சொல்கிறார்கள்!

   ஜி 20, சார்க் (SAARC), பிரிக்ஸ் (BRICS ஆகிய அமைப்புகளில் இந்தியா இருக்கிறது.  ஏசியானில் (ASEAN) மட்டுமே இல்லை. ஆசியான் அல்லது ஏசியான் என்று சொல்லும்போது அதை ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு, எனவே இந்தியா அதிலிருக்கும் என்ற எண்ணம் பலருக்கு வரக்கூடும். உண்மை அதுவல்ல.

 ஏசியான் (ASEAN) என்பது ‘தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு’ (Association of South East Asian Nations) ஆகும். இவ்வமைப்பில் இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, புரூணை, மியான்மர், கம்போடியா, லாவோஸ், வியட்நாம் என்ற 10 தென்கிழக்காசிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

தமிழ் வழியில்,

“2. இந்தியா பின்வருவனவற்றுள் எந்த அமைப்பில் உறுப்பினராக இல்லை?

அ) ஜி 20  ஆ) ஏசியான் (ASEAN)
ஆ) சார்க் (SAARC) ஈ) பிரிக்ஸ் (BRICS)

சரியானவற்றை தேர்ந்தெடு
அ) 4 மட்டும் ஆ) 2 மற்றும் 4
இ) 2, 4 மற்றும் 1 ஈ) 1, 2 மற்றும் 3   (பக்.166)

ஆங்கில வழியில்,

2. India is not a member of which of the  following
1) G20 2) ASEAN 3) SAARC 4) BRICS

Select the correct option

a) 4 only  b) 2 and 4 c) 2, 4 and 1 d) 1, 2 and 3   (Page: 151)


முப்பது:

‘Income tax’, ஐ ‘விற்பனை வரி’ என மொழிபெயர்க்கும் அபத்தக்கூத்து!

    பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் இரண்டாம் தொகுதி, பொருளியல் பகுதியில் ‘அரசாங்களும் வரிகளும்’ என்றொரு பாடம். (இதை ‘அரசும் வரிகளும்; என்றாலென்ன?) சரியான விடையைத் தேர்தெடுக்கும் வினா ஒன்றில்,   ‘Income tax’ என்று ஆங்கில வழியிலும், ‘விற்பனை வரி’ என்று தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதில் ‘வருமான வரி’ என்பதுதான் சரியான விடை. இப்படியும்  மொழியாக்க முடியுமோ!

தமிழ் வழியில்,

“4. இந்தியாவில் தனி நபர்களின் மேல்  விதிக்கப்படுகின்ற பொதுவான மற்றும் மிக முக்கியமான வரி

அ) சேவை வரி ஆ) கலால் வரி
இ) விற்பனை வரி ஈ) மத்திய விற்பனை வரி”.   (பக்.194)

ஆங்கில வழியில்,

“4. The most common and important tax  levied on an individual in India is 

a) Service tax b) Excise duty.
c) Income tax d) Central sales tax”.   (Page: 178)

    இப்படியெல்லாம் அறிவுப்பூர்வமான உயர்சிந்தனை வினாக்களைக் (HOT) கேட்க அசாத்திய திறமைகள் வேண்டும். பாடநூலில் இவை பல இடங்களில் உள்ளன. இவற்றைக் கொண்டு மாணவர்களும் ஆசிரியர்களும் கல்வியில் உயர் சிந்தனை பெறுவார்களாக!

(அபத்தங்களும் குளறுபடிகளும் தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக