திங்கள், நவம்பர் 18, 2019

இந்தியாவில் கொள்கைகளை வடிவமைப்பதும் உருவாக்குவதும் யார்?


இந்தியாவில் கொள்கைகளை வடிவமைப்பதும் உருவாக்குவதும் யார்?

(தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)

மு.சிவகுருநாதன்
  
(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 47)



முப்பத்தொன்று:

இந்தியாவின் கொள்கைகளை வடிவமைப்பது யார்? 

    பத்தாம் வகுப்பு இரண்டாம் தொகுதி சமூக அறிவியல் குடிமையியல் பகுதியில் நான்காவது பாடம் ‘இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை’. இதன் இறுதியில் கேட்கப்பட்டுள்ள கேள்வி நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. 

தமிழ் வழியில்,

“I சரியான விடையைத்  தேர்வு செய்யவும்

1. இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் எந்த அமைச்சர் முக்கிய பங்கு  வகிக்கிறார்?

அ) பாதுகாப்பு அமைச்சர்  ஆ) பிரதம அமைச்சர்
இ) வெளி விவகாரங்கள் அமைச்சர்  ஈ) உள்துறை அமைச்சர்”  (பக்.150)

ஆங்கில வழியில்,

Choose the correct  answer

“1. Which Minister plays a vital role in molding  foreign policy of our country?
a) Defense Minister  b) Prime Minister
c) External Affairs Minister d) Home Minister”  (Page: 136)

     வெளியுறவு, அயலுறவு என்றெல்லாம் ஒருபுறம் பயன்படுத்திவிட்டு, மறுபுறம் ‘External Affairs Minister’ ஐ ‘வெளி விவகாரங்கள் அமைச்சர்’ என்று வரிக்குவரி மொழியாக்கமும் தொடர்கிறது. இது போகட்டும்!
  
   அயலுறவுக் கொள்கையை அந்தத் துறையின் அமைச்சரே வடிவமைப்பது எப்படி? இதைப்போல ஒவ்வொரு துறை அமைச்சர்களும் தங்கள் துறைக்கான கொள்கைகளை உருவாக்கிக் கொள்ள முடியுமா?

    நமது கூட்டாட்சி அமைப்பில், நாடாளுமன்ற மக்களாட்சியில் அரசியல் சட்டப்படி நாடாளுமன்றமே கொள்கைகளை வகுக்க முடியும். பிரதமருக்குக் கூட வானளாவிய அதிகாரங்கள் கிடையாது; அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்புணர்வில் அரசு இயங்குகிறது. நாடாளுமன்றம், அமைச்சரவை எடுக்கும் கொள்கை முடிவுகளை செயல்படுத்தும் பொறுப்பைத் தவிர சுயமாக கொள்கைகளை உருவாக்குவதும் வடிவமைப்பதும் அமைச்சர்களின் பணியல்ல. நிதியமைச்சர் அல்லது இந்திய ரிசர்வ் வங்கி செய்யும் அறிவிப்புகளை (பணமதிப்பிழப்பு போன்ற) பிரதமர் மேற்கொள்வதும் அதிகார மீறலே.

      வெளியுறவுத்துறையின் செயலாளாராக இருந்து, மோடியின் இரண்டாம் ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக்கப்பட்ட ஜெய்சங்கரை மனதில் கொண்டு இவ்வாறு எழுதியிருப்பார்கள் போலும்! அரசு அதிகாரியான ஜெய்சங்கர் அமைச்சராக்கப்பட்டதும் உடன் பாஜக. வில் இணைந்து மாநிலங்களவை உறுப்பினரானதும் இந்திய நிர்வாக, அரசியல் சீரழிவின் ஓர் அங்கமாகப் பார்க்க வேண்டியது. இதில் தமிழர் என்கிற பம்மாத்துகளுக்கு ஒன்று குறைவில்லை.
 
     பாடநூல் “இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை நிறைவேற்றும் பொறுப்பு இந்திய வெளியுறவுத் துறை  அமைச்சகத்தைச் சார்ந்தது”, (பக்.149) என்றுதான் சொல்கிறது. பிறகு ஏன் வினா அவ்வாறு கேட்கப்படுகிறது?

    “The Ministry of External Affairs is responsible for carrying out the foreign policy of India”.  (Page: 136)

     “வெளியுறவுக் கொள்கை என்பது ஒரு நாடு  வெளியுறவு விவகாரங்களின் மூலம் தேசிய  நலனைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் இருதரப்பு  மற்றும் பலதரப்பு உறவுகளைப் பேணவும்  வடிவமைக்கப்பட்ட கொள்கை ஆகும். இது  நாட்டு மக்களின் சிறந்த நலன்கள், நாட்டின் பரப்பு  மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றைப் பாதுகாக்க  முயல்கிறது. வெளியுறவுக் கொள்கை என்பது  நாட்டின் பாரம்பரிய மதிப்புகள், ஒட்டுமொத்த  தேசியக் கொள்கை, எதிர்பார்ப்பு மற்றும் சுய  கருத்து ஆகியவற்றின் நேரடி பிரதிபலிப்பாகும்.  நாடுகள் ஒன்றையொன்று சார்ந்துள்ளன.  சர்வதேச உறவுகளில் ஒன்றையொன்று  சார்ந்திருப்பது தவிர்க்க இயலாததாகும்.  ஒரு குறிக்கொள் மற்றும் இலக்கு சார்ந்த  வெளியுறவுக் கொள்கையானது நாடுகளிடையே  மேம்பட்ட உறவுகளை அடையும் திறனையும்  விரைவான வளர்ச்சிக்கான பலத்தையும்  கொண்டிருககும். வெளியுறவுக் கொள்கையின்  முக்கிய அம்சங்கள்: உடன்படிக்கைகள், நிர்வாக  ஒப்பந்தங்கள், தூதுவர்ககளை நியமித்தல்,  வெளிநாட்டு உதவி, சர்வதேச வணிகம் மற்றும்  ஆயுதப் படைகள் ஆகியவைகள் ஆகும்”. (பக்.143)

    “வெளியுறவு அமைச்சகம் எனப்படும் இந்திய  வெளிவிவகார அமைச்சரவை  இந்திய  அரசின் ஒரு அங்கமாக இருந்து நாட்டின்  வெளியுறவுகளைப் பொறுப்பேற்று நடத்துகிறது.  1986 ஆம் ஆண்டு புது டெல்லியில் நிறுவப்பட்ட  இந்திய வெளிநாட்டுச் சேவை பயிற்சி நிறுவனம்  இந்திய வெளியுறவுச் சேவை அதிகாரிகளுக்கு  (IFS) பயிற்சி அளிக்கிறது”.  (பக்.143)

       “Foreign policy can be defined as a  country’s policy that is conceived, designed  and formulated to safeguard and promote  her national interests in her external affairs,  in the conduct of relationships with other  countries, both bilaterally and multilaterally. It  seeks to secure the best interests of the people,  territory and economy of the country. It is a  direct reflection of country’s traditional values  and overall national policies, her aspirations  and self-perception. Nations have also been  interdependent. Interdependence has been an  incontrovertible fact of international relations.  An objective and goal-oriented foreign policy has  the potential to achieve improved relations with  other nations and accelerate growth. The main  tools of foreign policy are treaties and executive  agreements, appointing ambassadors, foreign  aid, international trade and armed forces.

      The Ministry of External Affairs of India  also known as Foreign Ministry comes under  Government of India is responsible for the  conduct of foreign relations of India. The  foreign Service Training Institute, New Delhi  established in 1986 provides training for  officers of Indian Foreign Services (IFS)”.  (Page: 130)

முப்பத்திரண்டு:

பஞ்சசீலத்தின் அடிப்படை என்ன? 

     பத்தாம் வகுப்பில் பஞ்சசீலத்தை அறிமுகப்படுத்துவற்கு முன்னதாக கீழ்க்கண்ட குறிப்பு உள்ளது. இதை ஏன் உரிய முறையில் சொல்லவில்லை, இக்குறிப்பை பாடத்துடன் இணைக்கவில்லை என்பது கேள்விக்குரியது.

     “நாடுகளுக்கிடையேயான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு வலிமையைப் பயன்படுத்தாமல்  அமைதி வழிமுறைகளைப் பின்பற்றுவதைப்  புத்தர் ஆதரித்தார்”.  (பக்.144)

     பவுத்தம் பஞ்சசீலம், அட்டசீலம், தசசீலம் எனப் பல்வேறு ஒழுக்கக் கோட்பாடுகளை வலியுறுத்துகிறது. இந்தத் தனிமனித ஒழுக்கக் கோட்பாடுகளைப் போலவே நமது நாடு அண்டை நாடுகளுடன் போரின்றி இணக்கமாக வாழ்வதற்கும் பவுத்த அடிப்படையில் பஞ்சசீலம் கட்டப்பட்டது. மேலும் சாக்கிய இனக்குழுத் தலைவரான புத்தர் ரோகிணி ஆற்றின் நீரை பகிர்ந்துகொள்ளும் நதிநீர்ச் சிக்கலில் போரை மறுத்துத் துறவறம் பூண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முப்பத்து மூன்று:

‘ஈத்தாமொழி’ ஐ இப்படியா கொலை செய்வது? 
 
      பத்தாம் வகுப்பு புவியியல் பாடத்தில் ‘புவியியல் குறியீடு’ (GI Tag) பற்றிச் சொல்லப்படுகிறது. பட்டுக்கு ஆரணி, காஞ்சிபுரம் போன்று சுங்கடி சேலைகளுக்கு மதுரை மற்றும் சின்னாளம்பட்டி (திண்டுக்கல்) ஆகியவற்றுக்கும் புவியியல் குறியீடு பெறப்பட்டுள்ளது. நீலகிரித் தேயிலைக்கும் இது உண்டு. 50 க்கும் மேற்பட்ட பொருள்களுக்கு புவியியல் குறியீடு கிடைத்துள்ளது. அனைத்து ஊர்ப் பெயர்களையும் சரியாக எழுதியவர்கள் இறுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தின் ‘ஈத்தாமொழி’யை (Eathamozhi) கொலை செய்துள்ளனர்? தமிழில்,  ‘ஏத்தோமொழி’, என்றும் ஆங்கிலத்தில், ‘Eathomozhi’ என்றும் எழுதுகின்றனர்.
 
தமிழ் வழியில், சில முக்கியப் புவியியல் குறியீடுகள்:
 
‘இடம் / உற்பத்திப் பொருள்கள்

ஆரணி - பட்டு
காஞ்சிபுரம் - பட்டு
கோயம்புத்தூர் - மாவு அரைக்கும் இயந்திரம், கோரா பட்டு சேலை
தஞ்சாவூர் - ஓவியங்கள், கலைநயம் மிக்க தட்டுகள், தலையாட்டி  பொம்மைகள், வீணை
நாகர்கோவில் - கோயில் நகைகள்
ஈரோடு - மஞ்சள்
சேலம் - வெண்பட்டு ( சேலம் பட்டு )
பவானி - போர்வைகள்
மதுரை - சுங்கடி சேலை
சுவாமிமலை - வெண்கலச் சிலைகள்
நாச்சியார்கோவில் - குத்துவிளக்கு
பத்தமடை - பாய்
நீலகிரி - பாரம்பரிய பூத்தையல்
மகாபலிபுரம் - சிற்பங்கள்
சிறுமலை - மலை வாழை
ஏத்தோமொழி – தேங்காய்”.  (பக்.128)

ஆங்கில வழியில்,  GI Tag

“Some important GI Tags of Tamil Nadu are:

Place / Products
Arani - Silk
Kancheepuram - Silk
Coimbatore - Wet Grinder and Cora cotton
Thanjavur - Paintings, Art plate,  Doll and veenai
Nagercoil - Temple Jewellery
Erode - Turmeric
Salem – Venpattu (salem silk)
Bhavani - Jamakkalam
Madurai - Sungudi
Swamimalai - Bronze Icons
Nachiarkovil - Kuthuvilakku
Pattamadai - Mat
Nilgiri - Orthodox Embroidery
Mahabalipuram - Stone sculpture
Sirumalai - Hill banana
Eathomozhi – Coconut”.   (Page: 114)

முப்பத்து நான்கு:

பேரிடர்களா (Disaster) அல்லது இடர்களா (Hazards)? 

     இதுகாறும் பேரிடர்கள் (disasters) என்று சொன்னவர்கள் தற்போது இடர்கள் (hazards) என்று மாற்றிச்சொல்லக் காரணம் என்ன? இவையிரண்டிற்கும் இவர்கள் அளிக்கும் அபத்தமான விளக்கங்கள் வேறு. (எட்டாம் வகுப்பு)

தமிழ் வழியில்,

    “ஹசார்டு என்பது புவியிலுள்ள உயிர் மற்றும் உயிரற்ற பொருட்களைப் பாதிக்கக்கூடிய நிகழ்வை  இடர் (Hazard) என்கிறோம்”. (பக்.136)

    ஒரு பொருளோ, நபரோ, நிகழ்வோ அல்லது காரணியோ மக்கள் அல்லது கட்டமைப்புகள் மற்றும் பொருளாதார வளங்களுக்கு அச்சுறுத்தலாகவும், இழப்பு ஏற்படுத்தும் வகையிலும் அமைந்தால் அது இடர் (Hazard) எனப்படும்”. 
 
     “ஒரு சமுதாயம் பல்வகையான இடர்களைச் சந்தித்து வந்தாலும் மிகவும் கடுமையாக பாதிக்கும் இடர்களின் அச்சுறுத்தல்களைப் பற்றி அப்பகுதி மக்கள் அறிந்திருப்பது மிகவும் அவசியமாகும்.

    “மனித உயிர்கள் மற்றும் உடைமைகளுக்கு அச்சுறுத்தலை உருவாக்கும் இயற்கையான நிகழ்வுகள் இயற்கை இடர்கள் எனப்படும். பேரிடர்களின் எண்ணிக்கை மற்றும் தீவிரம் மனித  செயல்களால் அதிகரிக்கிறது. இயற்கையான  செயல்பாடுகள் அல்லது நிகழ்வுகள் மட்டுமே  இயற்கை இடருக்கான காரணங்கள் அல்ல”.

     “பேரிடர் என்பது வரையறுக்கப்பட்ட  பகுதியில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிகழும் ஒரு அபாயகரமான நிகழ்வாகும். இவை உயிர், மற்றும் உடைமைகளுக்கு பெரும் அழிவை  விளைவிப்பதுடன் மற்றவர்களின் உதவியை  நாட வேண்டிய தேவை ஏற்படுகிறது”.

     “பேரழிவு என்பது மிகப்பெரிய இழப்பினையும் அதிக செலவினத்தையும் உண்டாக்குவதோடு அவற்றிலிருந்து மீள்வதற்கு நீண்ட காலமும் தேவைப்படுகிறது”. (பக்.136 & 137)
ஆங்கில வழியில்,

   “Hazards are defined as a thing, person,  event or factor that poses a threat to people,  structures or economic assets and which may  cause a disaster. They could be either human- made or naturally occurring in the environment”.
 
    “Though the society experiences several  types of hazards, it is important for a region to  be aware of those threats that are most likely to  affect the community most severely”. (Page: 118)

     “A natural hazard is a  natural process and event that  is a potential threat to human  life and property. The process  and events themselves are not  a hazard but become so because of human  use of the land. A disaster is a hazardous event that 
occurs over a limited time span in a defined  area and causes great damage to property/ loss of life, also needs assistance from others.  A catastrophe is a massive disaster that  requires significant expenditure of money  and a long time (often years) for recovery”. (Page:119)

       ஒரு பொருளோ, நபரோ, நிகழ்வோ அல்லது காரணியோ மக்கள் அல்லது கட்டமைப்புகள் மற்றும் பொருளாதார வளங்களுக்கு அச்சுறுத்தலாகவும், இழப்பு ஏற்படுத்தும் வகையிலும் அமைந்தால் அது இடர் (Hazard) எனப்படும்”,    

        “பேரிடர் என்பது வரையறுக்கப்பட்ட  பகுதியில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிகழும் ஒரு அபாயகரமான நிகழ்வாகும்”, என்றெல்லாம் விளக்கம் சொல்கின்றனர்.

    அச்சுறுத்தல், இழப்பு ஏற்பட்டால் அது இடர்; அபாகரமான நிகழ்வு என்றால் அது பேரிடர். வரையறுக்கப்படாத பகுதியில் குறிப்பிடப்படாத காலத்தில் நிகழ்ந்தால் அது இடர்; வரையறுக்கப்பட்ட  பகுதியில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிகழ்ந்தால் அது பேரிடர். என்ன அருமையான விளக்கம் பாருங்கள்! வெட்டி ஒட்டும் வேலைகளால் இவ்வாறு அமைந்திருப்பதாகக் கணிக்கலாம்.

தமிழ் வழியில்,

“தோற்றத்தின் அடிப்படையில் உருவாகும்  இடர்கள்
இவ்வகையான இடர்களை எட்டு வகையாகப் பிரிக்கலாம். அவை :
1. வளி மண்டலத்தால் ஏற்படும் இடர்கள் 
வெப்ப மண்டல சூறாவளி இடியுடன் கூடிய புயல், மின்னல், சுழல் காற்று, பனிச்சரிவு, வெப்ப அலைகள், மூடுபனி மற்றும் காட்டுத்தீ ஆகியவற்றால் ஏற்படும் இடர்கள்.
2. நிலவியல் சார்ந்த இடர்கள் 
நில அதிர்வு, சுனாமி, நிலச்சரிவு, நிலம் அமிழ்தல் ஆகியவற்றால் ஏற்படும் இடர்கள்.
3. நீரியல் தொடர்பான இடர்கள்
வெள்ளப்பெருக்கு, வறட்சி, கடற்கரை அரிப்பு, சூறாவளி அலைகள் ஆகியவற்றால் ஏற்படும் இடர்கள்.
4. எரிமலை சார்ந்த இடர்கள் 
எரிமலை வெடிப்பு மற்றும் லாவா வழிதல்  ஆகியவற்றால் ஏற்படும் இடர்கள்.
5. சுற்றுச்சூழல் சார்ந்த இடர்கள் 
மண், காற்று, நீர் மாசடைதல், பாலைவனமாதால், புவி வெப்பமடைதல்  மற்றும் காடழிப்பு ஆகியவற்றால் ஏற்படும் இடர்கள்.
6. உயிரியல் சார்ந்த இடர்கள்
சின்னம்மை, பெரியம்மை, தட்டம்மை, பால்வினைத் தொற்று நோய்கள், எய்ட்ஸ், விஷ தேனீக்கள் ஆகியவற்றால் ஏற்படும் இடர்கள்.
7. தொழில்நுட்பம் சார்ந்த இடர்கள்
அபாயகரமான கழிவுப் பொருட்களால்  ஏற்படும் இடர்கள், தீவிபத்து மற்றும் கட்டமைப்பு குறைபாடுகளால் ஏற்படும் இடர்கள் (பாலங்கள், சுரங்கங்கள், அணைகள், அணுக்கதிர்கள் மற்றும் கதிரியக்க விபத்துகள்)
8. மனித தூண்டுதலால் ஏற்படும் இடர்கள்
தீவிரவாதம், துப்பாக்கிச்சூடு, போக்குவரத்து விபத்துக்கள், போர் மற்றும் உள்நாட்டுக் கலவரம் ஆகியவற்றால் ஏற்படும் இடர்கள்”. (பக்.138)

ஆங்கில வழியில்,

“II. Based on their origin
Hazards can be grouped into eight caregories
1. Atmospheric hazard – Tropical storms,  Thunderstorms, Lightning, Tornadoes,  Avalanches, Heat waves, Fog and Forest fire.
2. Geologic/Seismic hazard – Earthquakes,  Tsunamis, Landslides and Land subsidence.
3. Hydrologic hazard – Floods, Droughts,  Coastal erosion and Storm surges. (Page: 119)
4. Volcanic hazard – Eruptions and Lava flows.
5. Environmental hazard – Pollution of soil/ air/water, Desertification, Global warming  and Deforestation.
6. Biological hazard – Chickenpox, Smallpox,  AIDS [HIV] and Killer bees.
7. Technological hazard – Hazardous material  incidents, Fires, Infrastructure failures  Bridges, Tunnels, Dams and Nuclear/ Radiological accidents. 
8. Human-induced hazard – Terrorism, Mass  shootings, War, Transportation accidents and  Civil disorder”, (Page: 120)

      என்றெல்லாம் இடர்கள் (பேரிடர்கள் அல்ல!) வகைப்படுத்தப்படுகின்றன. அணு உலை விபத்துகள், அணுக்கழிவுகள், கதிரியக்கம் போன்றவற்றை வெறும் தொழில்நுட்ப இடர்கள் என்று கடந்து விடமுடியுமா? அணுக்கழிவுகளை அழிக்க/மாற்ற, கதிரியக்கத்தைத் தடுக்க நம்மிடம் என்ன தொழில்நுட்பம் இருக்கிறது? ஜப்பானில் சுனாமியால் புகுஷிமா அணு உலை விபத்து ஏற்பட்டு பசுபிக் பிராந்தியத்தில் கதிர்வீச்சுப் பாதிப்பு ஏற்பட்டது. இது இன்னும் தொடர்கிறது. இதை நிலவியல் அல்லது தொழில்நுட்ப இடர் என்று சொல்லித் தப்பிக்க முடியுமா?
 
முப்பத்தைந்து:

எதை முதலில் சொல்வது? 

    ஏழாம் வகுப்பு இரண்டாம் பருவ சமூக அறிவியல் புவியியல் பாடத்தில் இந்திய மற்றும் தமிழக மலை வாழிடங்கள், நீர்வீழ்ச்சிகள், வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயங்கள், தேசியப் பூங்காக்கள், கடற்கரைகள் ஆகியன பட்டியலிடப்படுகின்றன. ‘நீர்வீழ்ச்சிகளை’ அருவிகள் என்றும் ‘சரணாலயங்கள்’ என்பதை உய்விடங்கள் அல்லது புகலிடங்கள் அல்லது வாழிடங்கள் என்று சொல்வது நல்லது. 

    இப்பாடத்தில் பத்தாம் வகுப்பு புவியியலில் 20.21% காடுகள் என்று சொன்னதற்கு மாற்றாக, “தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பான 130,058 சதுர கிலோமீட்டரில் 17.6% நிலப்பரப்பு அடர்த்தியான காடுகளைக் கொண்டுள்ளது”, (பக்.185) என்று சொல்லப்படுகிறது. 

   பொதுவாக இவ்வாறு ஒன்றைப் பட்டியலிடும்போது பெரியது, நீளமானது, அதிக பரப்புடையவற்றை முதலில் சொல்வது மரபு. 


  • இந்திய மலை வாழிடங்களில் கொடைக்கானல் முதலில் சுட்டப்படுகிறது. உதகமண்டலம் (ஊட்டி?!) அடுத்துதான்! (பக்.178)
  • இந்திய (நீர்வீழ்ச்சி) அருவிகளில் தாழையாறு (தாழையார்?!) அருவி (நீர்வீழ்ச்சி) முதலில் இடம்பெறுகிறது. (பக்.180)
  • இந்தியக் கடற்கரைகளில் தனுஷ்கோடிக்கு முதலிடம்! (பக்.182)


   இந்திய அளவில் குறிப்பிடும்போது தமிழ்நாட்டை முதலில் குறிப்பிடுகிறார்கள் என்று கருதுவோம். தமிழகத்துப் பட்டியலிலும் இப்படித்தான் உள்ளது!


  • தமிழ்நாட்டுக் கடற்கரைகளில் கோவளம் முதலிடத்திலும் உலகில் இரண்டாவது நீளமான அழகிய கடற்கரையான மெரினா இரண்டாவதாகவும் இடம்பெறுகிறது. (பக்.187)
  • தமிழ்நாட்டின் தேசிய பூங்காக்களில் கிண்டி முதலிடத்திலும் முதுமலை இறுதியிலும் உள்ளது. (பக்.187)
  • தமிழ்நாட்டு அருவிகளில் (நீர்வீழ்ச்சிகள்?!) ஒகேனக்கல் முதலிலும் குற்றாலம் ஆறாவதாகவும் குறிப்பிடப்படுகிறது. (பக்.184)
  • தமிழ்நாட்டுப் பறவைகள் புகலிடத்தில் வேட்டங்குடிக்கு முதலிடம்; வேடந்தாங்கலுக்கு இறுதி இடம். (பக்.185)


(அபத்தங்கள் தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக