இயற்கை பேரழிவை
உண்டாக்கும் புதிய ஆயுதமா?
(தொடரும் அபத்தங்களும்,
குளறுபடிகளும்…)
மு.சிவகுருநாதன்
(2019 - 2020 ஆம்
கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 48)
முப்பத்தாறு:
இயற்கை பேரழிவை உண்டாக்கும்
புதிய ஆயுதமா?
எட்டாம் வகுப்பு இரண்டாம் பருவ சமூக
அறிவியல் பாடநூலின் ‘இடர்கள்’ பாட இறுதியில் கீழ்க்கண்ட பத்தி இடம் பெறுகிறது.
பொதுவாக இவை ‘சிந்திக்க’, ‘உங்களுக்குத் தெரியுமா?’ என்ற தலைப்புகளில் இடம்
பெறுவது வழக்கம். ஆனால் இங்கு சுற்றுச்சூழல் பேரழிவு மரணங்களின் புள்ளிவிவரத்தை
அளித்துவிட்டு இயற்கையை பேரழிவு ஆயுதம் என்கின்றனர். தொடக்கத்தில் வெறுமனே கேள்வி
கேட்டாலும், “இயற்கைதான் பேரழிவை உண்டாக்கும் ஆயுதம்” என்கிற தொனியும்
குழந்தைகளின் மனத்திலிருத்தும் வன்மமும் அபாயகரமானது. அணு உலை விபத்துகள்,
அணுகுண்டு வெடிப்பு, கதிரியக்கம் போன்றவற்றிற்கு இவர்கள் இவ்வளவு பீடிகைகள்
போடுவதில்லை என்பதும் இங்கு கவனிக்க வேண்டியது.
“பேரழிவை
உருவாக்கக் கூடிய புதிய ஆயுதமாக இயற்கை வளர்ந்து வருகிறது. நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?
பெரும்
சுற்றுச்சூழல் பேரழிவு காரணமாக இந்தியாவில்
2017 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில்
சுமார் 22,000 பேர் இறந்துள்ளனர். கடந்த
20 ஆண்டுகளில் (1998 – 2017) உலகில்
சுமார் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மோசமான வானிலை நிகழ்வுகளால் இறந்துள்ளனர். இது ஜெர்மன் - வாட்ச் என்ற தனியார் அமைப்பு வெளியிட்டுள்ள உலகளாவிய
காலநிலை இடர் குறியீட்டு அறிக்கையில்
இவை கூறப்பட்டுள்ளது”.
(பக்.144)
“Nature
is emerging as a new weapon of mass destruction, do you agree?
Around
22,000 people have died in India in 10 years until 2017 due to major
environmental disasters – Indian Meteorology Department. In the past two decades (1998-2017)
over 5,00,000 people have
died due to extreme weather
events around the world – stated by Global Climate Risk Index Report
Published by Germanwatch
(German-based non-profit organisation)”. (Page: 124)
பாட
இறுதியில் இப்படியென்றால் பாடத் தொடக்கம் எப்படியிருக்கும்? அதையும் கொஞ்சம் பார்த்துவிடுவோம்!
“இருபத்தியோராம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் பூமியானது முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை பெருக்கத்திற்கும் மக்கள் நலமாகவும் வளமாகவும் வாழ உறுதுணையாக இருந்தது. அதே சமயம் மக்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருந்தது”.
“In the
beginning of twenty-first century,
the earth supported a human population
that was more numerous and
found healthier and wealthier
than ever before. At the same time, there were a lack of awareness on the risks that faced by the people. By keeping this in
mind, the present lesson
of hazards is intended to familiarise
the different types of hazards to promote awareness among students regarding hazards”.
21 ஆம்
நூற்றாண்டில் தொடக்கத்தில், “மக்கள்
நலமாகவும் வளமாகவும் வாழ உறுதுணையாக
இருந்த”, பூமி எப்படி பேரழிவு ஆயுதமாக
மாறியது? 2019 தானே நடக்கிறது? தொடக்கமே அழிவுக்குள்ளானதா அல்லது பின்னால்
நடந்ததா?
‘விழிப்புணர்வு’ குறைவாக இருந்தது. யாருக்கு? அரசுக்கா, மக்களுக்கா? 2004
இல் சுனாமி (ஆழிப்பேரலை) வரவில்லையென்றால் பேரிடர்கள் குறித்த பாடங்கள் பாடநூலில்
இடம்பெற்றிருக்காது அல்லவா? அதன் பிறகுதான் இந்தியாவில் பேரிடர் மேலாண்மை அமைப்பு
நிறுவப்பட்டது. இதன் செயல்பாடுகள் ஒடிசாவைத் தாண்டி சொல்ல முடியாத நிலை.
அரசுகளுக்கே பேரிடர் குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை. பேரிடர்கள்,
சாலைப் பாதுகாப்பு என எது வந்தாலும் மக்களைக் குறை சொல்வதே வாடிக்கையாகிவிட்டது!
முப்பத்தேழு:
தோற்றமா? உருவாகும் விதமா?
இப்பாடத்தில்
‘இடர்கள்’ பலவாறு வகைப்படுத்தப்படுகின்றன. அதில் ஒன்று, “தோற்றத்தின் அடிப்படையில்
உருவாகும் இடர்கள்”. ‘Based on their origin’ என்பதை இப்படியா
மொழிபெயர்ப்பது?
‘Appearance’ என்பதும் ‘தோற்றத்தைக்’ குறிக்கும். ‘origin’ னும் தோற்றமே! எனவே குழப்பம் ஏற்படும். ‘Formation’
(உருவாதல்)
சரியாக இருக்குமா?
‘உயிரியல்
சார்ந்த இடர்களில்’ தமிழ் வழியில் மட்டும் புதிதாக இரண்டைச் சேர்த்துள்ளனர். இது
ஏன்? இவை ஆங்கிலத்துக்கு அவசியமில்லையோ!
“சின்னம்மை, பெரியம்மை, தட்டம்மை, பால்வினைத் தொற்று நோய்கள், எய்ட்ஸ், விஷ தேனீக்கள் ஆகியவற்றால் ஏற்படும் இடர்கள்”.
“Biological hazard – Chickenpox, Smallpox, AIDS [HIV]
and Killer bees”.
“measles, sexually transmitted diseases” ஆகியவை ஏன் சொல்லப்படவில்லை?
“Nuclear/
Radiological accidents”, என்பதை “அணுக்கதிர்கள்
மற்றும் கதிரியக்க விபத்துகள்”, என்றும் மொழியாக்குவதையும் கவனிக்க. அணு உலை
விபத்து, அணுக்கசிவு ஆகியவற்றை மருத்துவக் கருவிகள் வாயிலாக ஏற்படும்
கதிர்வீச்சோடு ஒன்றாக்கலாமா? இவற்றின் பாதிப்புகள் சம அளவிலானவையா?
பாடப்பகுதிகள் முழுமையும் கீழே தரப்படுகிறது.
“இவ்வகையான
இடர்களை எட்டு வகையாகப் பிரிக்கலாம். அவை :
1. வளி மண்டலத்தால் ஏற்படும் இடர்கள்
வெப்ப மண்டல சூறாவளி இடியுடன் கூடிய புயல், மின்னல், சுழல் காற்று, பனிச்சரிவு, வெப்ப அலைகள், மூடுபனி மற்றும் காட்டுத்தீ
ஆகியவற்றால் ஏற்படும் இடர்கள்.
2. நிலவியல் சார்ந்த இடர்கள்
நில அதிர்வு, சுனாமி, நிலச்சரிவு, நிலம் அமிழ்தல் ஆகியவற்றால் ஏற்படும் இடர்கள்.
3. நீரியல் தொடர்பான இடர்கள்
வெள்ளப்பெருக்கு, வறட்சி, கடற்கரை அரிப்பு, சூறாவளி அலைகள் ஆகியவற்றால் ஏற்படும் இடர்கள்.
4. எரிமலை சார்ந்த இடர்கள்
எரிமலை வெடிப்பு மற்றும் லாவா வழிதல் ஆகியவற்றால் ஏற்படும் இடர்கள்.
5. சுற்றுச்சூழல் சார்ந்த இடர்கள்
மண், காற்று, நீர் மாசடைதல், பாலைவனமாதால், புவி வெப்பமடைதல் மற்றும் காடழிப்பு ஆகியவற்றால் ஏற்படும் இடர்கள்.
6. உயிரியல் சார்ந்த இடர்கள்
சின்னம்மை, பெரியம்மை, தட்டம்மை, பால்வினைத் தொற்று நோய்கள், எய்ட்ஸ், விஷ தேனீக்கள் ஆகியவற்றால் ஏற்படும் இடர்கள்.
7. தொழில்நுட்பம் சார்ந்த இடர்கள்
அபாயகரமான கழிவுப் பொருட்களால் ஏற்படும் இடர்கள், தீவிபத்து மற்றும் கட்டமைப்பு குறைபாடுகளால் ஏற்படும் இடர்கள் (பாலங்கள்,
சுரங்கங்கள், அணைகள், அணுக்கதிர்கள்
மற்றும் கதிரியக்க விபத்துகள்)
8. மனித தூண்டுதலால் ஏற்படும் இடர்கள்
தீவிரவாதம், துப்பாக்கிச்சூடு, போக்குவரத்து விபத்துக்கள், போர் மற்றும் உள்நாட்டுக் கலவரம் ஆகியவற்றால் ஏற்படும் இடர்கள். (பக்.138)
II. Based on their origin
Hazards can be grouped into eight caregories
1. Atmospheric hazard – Tropical
storms, Thunderstorms, Lightning, Tornadoes, Avalanches, Heat waves, Fog and Forest fire.
2. Geologic/Seismic hazard – Earthquakes, Tsunamis,
Landslides and Land subsidence.
3. Hydrologic hazard – Floods,
Droughts, Coastal erosion and Storm surges. (Page: 119)
4. Volcanic hazard – Eruptions and Lava flows.
5. Environmental hazard – Pollution of soil/ air/water, Desertification, Global warming and Deforestation.
6. Biological hazard – Chickenpox,
Smallpox, AIDS [HIV] and Killer bees.
7. Technological hazard – Hazardous material incidents, Fires, Infrastructure failures Bridges, Tunnels, Dams] and Nuclear/ Radiological accidents.
8. Human-induced hazard – Terrorism,
Mass shootings, War, Transportation accidents and Civil disorder. (Page: 120)
முப்பத்தெட்டு:
உயர்சிந்தனைக் குழப்பம்!
பேஷ்வா பாலாஜி பாஜிராவ் பற்றிக்
குறிப்பிடும்போது கீழ்க்கண்ட பத்தி இடம்பெறுகிறது.
“மராத்திய விவசாயப்
போர்வீரர்களின் காலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. ஊதியம்
வழங்கப்பட்ட வீரர்களைக் கொண்ட படைக்குத் தற்போது பாலாஜி பாஜிராவ் தலைமையேற்றார்.
மராத்திய வீரர்கள் ஒவ்வோர் ஆண்டும் போர்க்களத்திலிருந்து பணிகளுக்காகச்
சென்று வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், போர்க்களத்திற்கு எளிதில்
சென்று வருவதற்கு தங்கள் வசிப்பிடத்திற்குச் சென்றுவர கோட்டைகளிலோ நகரங்களிலோ
வாழ வழிவகை செய்தார்”. (பக்.153)
“The Maratha peasant warrior band was reconfigured and its run
came to an end. Maratha soldiers were not permitted now to retire
from battle fields each year for the purpose of cultivating their land.
Soldiers were required to live in forts and towns far away from their
home. They were trained as infantrymen as well as horsemen. The large
guns were nominally under the command of Maratha officers. But
those who fired and maintained them were mostly Portuguese, French
and British”. (Page: 128,129)
இப்பத்தியைக் கொண்டுதான் கீழ்க்கண்ட கூற்று, காரண வினா
வடிமைக்கப்பட்டுள்ளது. சத்ரபதி சிவாஜி தனது அரசை விவசாயிகளின் அரசாக
அடையாளங்கண்டார். எனவே வழக்கமான அரசர்கள், போர்கள் ஆகியவற்றால் வேளாண் மக்கள்
இன்னல்களுக்கு உள்ளாவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குறைவான நிலவரி,
படைகளால் வேளாண்மை பாதிக்காது தடுத்தல், விவாசாயிகளிடம் காய்கறிகள், வைக்கோல்
ஆகியவற்றை விலையின்றி அபகரித்தலைத் தடுத்தல், மக்களுக்குக் குறிப்பாக பெண்களின்
மாண்பைக் காத்தல் போன்ற பல நடவடிக்கைகள் இதிலடங்கும். எனவே வேளாண் மக்களும் சிவாஜிக்காக
ஒருங்கிணைந்தனர். மகாத்மா
ஜோதிராவ் புலேயின் ஒரு கதைப்பாடலில் சிவாஜியை
‘குலவாடி பூஷண்’ (விவசாயிகளின் மகுடத்தில் பதித்த வைரமணி) எனக்
குறிப்பிட்டிருப்பதை கவனிக்கவும்.
பேஷ்வாக்கள் ஆட்சிக் காலத்தில்
நிலப்பிரபுக்கள் கைகளில் அதிகாரம் வந்தபோது விவசாய ராணுவ முறைக்கு முற்றுப்புள்ளி
வைக்கப்பட்டது. போர்வீரர்களுக்கு ஊதியம் வழங்கும் முறை சிவாஜி காலத்திலேயே
இருந்ததாக கோவிந்த் பன்சாரே குறிப்பிடுகிறார். இவ்வாறு சிவாஜி காலத்தில் இருந்த
ஒரு நடைமுறை பேஷ்வா காலத்தில் மாற்றப்படும்போது மராத்தியப் போர்வீரர்கள் என்று
பொதுவாகக் குறிப்பிடுவது எவ்வாறு சரியாகும்? பாடநூலில் உள்ள வரிகளை எடுத்துப்போட்டு
காரணம் என்று கட்டமைப்பதை என்ன சொல்வது?
V. கீழ்க்காணும் கூற்றுகளை
ஆய்க. பொருத்தமான விடையை டிக்
இட்டுக் காட்டவும்
கூற்று: மராத்தியப் போர்வீரர்கள்
தங்கள்
வசிப்பிடத்திற்குத் தொலைவில் உள்ள கோட்டைகளிலும், நகரங்களிலும் வாழ்ந்தனர்.
காரணம்: மராத்திய வீரர்கள்
ஒவ்வோர் ஆண்டும் போர்க்களத்திலிருந்து தங்கள் நிலங்களின் வேளாண் பணிகளுக்காகச்
சென்று வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அ) கூற்றிற்கான காரணம் சரி
ஆ) கூற்றிற்கான காரணம் தவறு
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு
V. Consider the following
statements. Tick the appropriate answer:
1. Assertion (A): Soldiers were to
live in forts and towns far away from home
Reason (R): Maratha soldiers were
not permitted to retire from battle fields each
year for the purpose of cultivating
their land.
a) R is correct explanation of A
b) R is not the correct explanation
of A
c) A is Wrong and R is correct
d) A and R are wrong (Page:131)
கீழ்க்கண்ட வினாவிற்குச் சரியான விடைக்குறிப்பு
இல்லை. இரண்டாவது வாக்கியம் தவறு. இப்படித் தவறான விடைக்குறிப்புடைய வினாக்கள்
பாடநூலில் இருப்பது மட்டுமா, தேர்வுகளிலும் கேட்கப்படும்.
2. வாக்கியம் – I: செய்திப்பரிமாற்றக்
கடிதங்கள் அடங்கிய கோப்புகளையும், கணக்குப் பதிவேடுகளையும் மதிப்பீடு
செய்கையில், பராமரிப்பதில் பேஷ்வாக்கள் கவனமுடன் இருந்தனர்.
வாக்கியம் – II: இரண்டாம் பானிப்பட்
போரில் பீரங்கிப்படைமுக்கியத்துவம் பெற்றிருந்தது (பக்.156)
அ) I சரி
ஆ) II சரி
இ) I மற்றும் II சரி
ஈ) I மற்றும் II தவறு (பக்.156&157)
2. Statement I : Judging from the
ledgers of correspondence and account books, Peshwas were keen on
accurate record-keeping.
Statement II: Artillery
decided the battle at Panipat in 1761.
a) I is correct
b) II is correct
c) I and II are correct
d) I and II are false (Page:131&132)
முப்பத்தொன்பது:
சிவாஜியின் முடிசூடலும்
தாயாரின் வாழ்க்கை நிறைவுறுதலும்
ஏழாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தில் அலகு 03 ‘மராத்தியர்கள் மற்றும்
பேஷ்வாக்களின் எழுச்சி’ என்ற பாடம் உள்ளது. சிவாஜியின் மகன் சாம்பாஜியின் ஒழுக்கக்
கேடுகள் பற்றியும் இதற்காக வைதீக இந்துக்கள் அவர் மீது ஆழ்ந்த வெறுப்பு
கொண்டிருந்தும் வண்ணத்தில் சுட்டப்படுகிறது. (பக்.151)
ஆனால் சிவாஜி மணிமகுடம் சூடிய செய்தி ஒரு வரியில் கடக்கப்படுகிறது. சிவாஜி
சத்ரியர் இல்லை என்றும் அவர் ஒரு சூத்திரர் என்றும் சொல்லி, அவருக்கு மூடிசூட்டுவிக்க
உள்ளூர் பிராமணர்கள் மறுத்தனர். இந்த சித்பவன பிராமணர்களைத்தான் வைதீக இந்துக்கள் என்கின்றனர். ஒழுக்கக்கேடுகளை
விண்டுரைப்பவர்கள் வருண (சாதி) அடிப்படையில் சத்ரபதி சிவாஜி இழிவுப்படுத்தப்பட்டது
ஒழுக்கச் செயல் என்று கருதுகிறார்களா?
மராத்தியப் பிராமணர்களின்
மறுப்பால் காசியிலிருந்து காகபட்டர் வரவழைக்கப்பட்டு சிவாஜி சத்ரபதியாக
முடிசூட்டிக்கொண்டார். சிவாஜியின் தாய், மனைவி, தலைமை தளபதி ஆகியோர் இறந்த காரணத்தால்
காகபட்டர் மூடிசூடியது குறைபாடுடையது என்று அதே பிராமணர்கள் நிவர்த்தி செய்து
மறுமுறை முடிசூடிய அவலமும் நடந்தது. குறிக்கப்பட்ட நாள் சரியில்லை, விலங்குகளைப்
பலியிட்டு யாகம் நடத்தவில்லை என்றெல்லாம் காரணம் சொல்லப்பட்டது.
சிவாஜியின் தாயார் ஜீஜாபாயின்
மரணம் வயது முதிர்வால் நடந்த ஒன்று. மூடிசூடுவதைக் காண உயிருடனிருந்தார், வாழ்க்கை
நிறைவுற்றது என்றெல்லாம் சொல்வது ஏன்? இவை மராத்தியப் பிராமணர்கள் சொல்லியதற்கு இணையாக
உள்ளது.
“1674இல் சிவாஜி சத்ரபதி என்னும் பட்டத்துடன்
மணிமுடி சூடிக்கொண்டார். சிவாசியின் முடிசூட்டுவிழா ரெய்கார்
கோட்டையில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. தம் மகனின் முடிசூட்டு
விழாவைக் காண்பதற்காக உயிருடனிருந்த சிவாஜியின் வயது முதிர்ந்த தாயார்
ஜீஜாபாய், தம் வாழ்க்கை நிறைவுற்றதால் முடிசூட்டுவிழா முடிந்த சில நாட்களில்
இயற்கை எய்தினார்”.
“In 1674, Shivaji crowned himself by assuming the title of
Chhtrapati and the coronation of Shivaji was celebrated with great
splendour at Raigarh, as the occasion was the founding of a new kingdom
and a new dynasty. Shivaji’s aged mother Jijabai, who had lived to
see her son crowned the king, passed away a few days after the coronation,
with her life wish fulfilled”.
நாற்பது:
சிவாஜியின் மூன்றாம் வட்டம்
எது?
சிவாஜியின்
கொள்ளையிடல்கள் பற்றி பல இடங்களில் பேசப்படுகிறது. மன்னர்கள் அனைவரும்
கொள்ளையடித்தவர்களே. இவர்களில் ஒளரங்கசீப், சிவாஜி என்று வரும்போது தனிப்பட்ட மதக்
காழ்ப்புகளைக் கொண்டு வரலாறு எழுதும் வெறுப்பரசியலிருந்து விடுபட வேண்டும் என்று
நாம் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
“1670இல்
சிவாஜி இரண்டாவது முறையாகச் சூரத் நகரைக் கொள்ளையடித்தபோது முகலாயப் படைகளால்
தடுக்க இயலவில்லை”. (பக்.149)
“In 1670, the Mughal army was
helpless when Shivaji again plundered Surat”.
தமிழ் வழியில், ‘சிவாஜியின் கீழ்
மராத்தியர் நிர்வாகம்’
“சிவாஜியின் அரசியல் முறை மூன்று வட்டங்களைக் கொண்டிருந்தது.
சிவாஜி அவற்றின் மையமாக விளங்கினார். முதல்
வட்டத்தில் மக்களின் மீது
அக்கறை கொண்ட அவர் எந்த வகையிலும் மக்கள் துன்புறுத்தப்படுவதை அனுமதிக்கவில்லை.
இரண்டாவது வட்டத்தில் அவர் மேலாதிக்கம் செலுத்தினாலும் நேரடி நிர்வாகத்தை
மேற்கொள்ளவில்லை. கொள்ளையடிக்கப் படுவதிலிருந்தும், சூறையாடப் படுவதிலிருந்தும்
மக்களைக் காப்பாற்றினார். அதற்காக அம்மக்கள் சௌத் (மொத்த வருமானத்தில்
நான்கில் ஒரு பங்கு (1/4), பாதுகாப்புக் கட்டணமாக) சர்தேஷ்முகி
(பத்தில் ஒரு பங்கு (1/10) அரசருக்கான கட்டணமாக) ஆகிய வரிகளைச்
செலுத்த வேண்டும். மூன்றாவது வட்டத்தில் கொள்ளையடிப்பது மட்டுமே
சிவாஜியின் நோக்கமாக இருந்தது”. (பக்.149)
ஆங்கில வழியில், ‘Maratha
Administration under Shivaji’
“Shivaji’s political system consisted of three circles.
At the centre was the swaraj. Shivaji was caring and would not
allow the people to be harassed in any way. In the second circle,
Shivaji claimed suzerainty, but he did not administer them himself. He
protected the people from loot and plunder for which they were
required to pay Chauth (one-fourth of the revenue as protection money)
and Sardeshmukhi (an extra one-tenth, as the chieftain’s due). In
the third circle, Shivaji’s only objective was plunder”. (Page: 125)
“முதல் வட்டத்தில் எந்த வகையிலும்
மக்கள் துன்புறுத்தப்படுவதை அனுமதிக்கவில்லை.
இரண்டாவது வட்டத்தில் கொள்ளையடிக்கப்
படுவதிலிருந்தும், சூறையாடப் படுவதிலிருந்தும் மக்களைக் காப்பாற்றினார்.
மூன்றாவது வட்டத்தில்
கொள்ளையடிப்பது மட்டுமே சிவாஜியின் நோக்கமாக இருந்தது”.
இவற்றை எப்படி புரிந்துகொள்வது? சிவாஜியின் நிர்வாகத்தில் இந்த மூன்றாவது
வட்டம் எது? தனது ஆட்சிக்குட்படாத பகுதிகளைக் கொள்ளையிடல் என்பதுதானே.. போர் மூலம்
கொள்ளையிடுவதை எப்படி ஆட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரலாமா?
அக்காலத்தில் கொள்ளையிட்ட பொருள்கள் அடித்த படைவீரர்களுக்கு பங்கு பிரித்து
வழங்கும் நடைமுறை இருந்தது. அதனால் அதிக பொருளுக்கு ஆசைப்பட்டு தேவையில்லாத
போர்களில் ஈடுபட்டுக் கொள்ளையடித்தனர். சிவாஜி அம்முறையை மாற்றி கொள்ளைச்
செல்வத்தை அரசுக் களஞ்சியத்தில் சேர்த்து வீரர்களுக்கு ஊதியம் கொடுக்கும்
நடைமுறையைத் தொடங்கினார் என்று கோவிந்த் பன்சாரே குறிப்பிடுகிறார். இவ்வாறு
உண்மைகளைச் சொன்னதால்தான் அவர் படுகொலை செய்யப்பட்டார்.
(அபத்தங்கள் தொடரும்…)