ஞாயிறு, மார்ச் 04, 2012

பரண் - 0003 ஒரு சிறு பத்திரிக்கைக் குறிப்பு

பரண் - 0003     

ஒரு சிறு பத்திரிக்கைக் குறிப்பு 

       சிறு பத்தரிக்கைகளின் நோக்கம் பலவாறு மாறித்தான் போயிருக்கிறது. அடிக்கடி நீர்க்குமிழ் போல் சிற்றிதழ்கள் தோன்றி மறைந்து கொண்டிருக்கின்றன. இதைக் குறையாகக் கொள்ளமுடியாது. இதன் நோக்கம் பற்றித்தான் சந்தேகப் படவேண்டிருக்கிறது. 'நிராகரிக்கப்பட்ட படைப்புகளின் களம்'  என்று தஞ்சை ப்ரகாஷின்  'குயுக்தம்' வந்திருக்கிறது. வரவேற்போம். ஆனால் தன்னுடைய படைப்புகளுக்காக மட்டும் இதழ் தொடங்குவது நடந்து கொண்டுதானிருக்கிறது. இவ்வாண்டு (1995) ஜனவரியில் மணல் வீடு மாரப்பனின்  'சதுக்கப்பூதம்'  வந்தது. அதிலுள்ள 7  கட்டுரையில் 5  ஆசிரியருடையது. (ஒரு ஆங்கிலக் கட்டுரை உள்பட) தன்னிடமுள்ள சரக்கை உடனே கொட்டித் தீர்த்துவிடவேண்டுமென்ற ஆசையாக இருக்கலாம். இருந்தாலும் நோக்கம் ஒருவாறு விளங்கத்தான் செய்கிறது! சிறுபத்தரிக்கைச் சுழலில் இவற்றையும் எதிர்கொண்டு தீர வேண்டிய கட்டாயம் நமக்கு.

ஜூலை - ஆகஸ்ட் : 1995                                         -மு.சிவகுருநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக