திங்கள், மார்ச் 19, 2012

பணக்காரர்களின் பட்ஜெட் -2012

பணக்காரர்களின் பட்ஜெட் -2012             -மு.சிவகுருநாதன் 

      இந்திய அரசு பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கவும் ஏழைகளை மென்மேலும் எழைகளாக்கவும் வழக்கம்போல தனது பட்ஜெட்டை பிரணாப் முகர்ஜி மூலம் சமர்ப்பித்துள்ளது. 40 ஆண்டுகாலம் நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ள தனக்கு என்ன செய்யவேண்டுமெனத் தெரியும் என இருமாந்துள்ளார். இவ்வளவு ஆண்டுகள் ஆனபிற்பாடும் பிரதமர் நாற்காலி தனக்குக் கிடைக்கவில்லை என்ற அவருடைய ஆதங்கம் ஒருவாறு விளங்கத்தான் செய்கிறது.

    ப.சிதம்பரம் எவ்வளவோ தேவலாம் என்கிற குரல்களெல்லாம் ஒலிக்கத்தொடங்கியுள்ளன. முதலாளிகளுக்கு கைகட்டி சேவகம் செய்யும் கொள்கைகள் இருக்கும் வரையில்  பிரணாப் முகர்ஜி, தினேஷ் திரிவேதி போன்றோர் முதலாளித்துவத்தின் எடுபிடிகளே.  மன்மோகன் சிங் வகுத்தளித்த இந்தப் பாதையில் செல்லும் இவர்கள் ஒருநாளும் மக்களைப் பற்றி யோசித்தது இல்லை.

    இவைகளின் முதலாளிய சேவகத்திற்கு சில உதாரணங்கள்:

  • விஜய் மல்லையாவின் king  fishers  விமான  நிறுவனத்தை பாதுகாக்க வெளிநாடுகளிருந்து 5000 கோடி கடன் பெற அனுமதி.
  • விமான இறக்குமதிக்கு முழு வரி ரத்து. 
  • விமான பெட்ரோல் இறக்குமதிக்கு வரி குறைப்பு.
  • multi-speciality hospitals வளம்கொழிக்க ரூ.5000 வரையிலான மருத்துவப் பரிசோதனைகளுக்கு வருமானவரிவிலக்கு.  
  • கடைநிலை (D)  ஊழியர்களுக்கு 10 %வருமானவரி விதித்துவிட்டு 10 லட்சசத்துக்கு மேல் எத்தனை கோடி சம்பாதித்தாலும் 30 % வரி என்ற அநியாயம். 
  • வேளாண் மானியங்கள் குறிப்பு; ஆனால் பன்னாட்டு கம்பெனிகளுக்கு எவ்வித மானிய வெட்டும் இல்லை.
  • சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் மானியங்கள் படிப்படியாகக் குறைக்க நடவடிக்கை.
  • சிமென்ட் விலை உயர்வு.
  • சைக்கள் விலை அதிகரிப்பு. 
  • சேவை வரி 10% லிருந்து   12%  ஆக உயர்வதால் உணவகப் பண்டங்கள் விலை கூடும். 
  • தங்கம், பிளாட்டினம் விலை உயரும். தங்கத்தில் முதலீடு செய்வது காரணமாகக் கூறப்பட்டாலும் ஏழைகளின் திருமணம் தடைபடும். 
  • ஏ.சி. பிரீட்ஜ், வாஷிங் மெசின்  விலை அதிகரிக்கப் போவதாக முன்கூட்டியே சொல்லை இந்த கம்பெனிகள் இவற்றை அண்மையில் விற்றுத் தீர்த்தன. இந்த முதலாளிகள் கோரிக்கைகள் அப்படியே ஏற்கப்பட்டது உண்மையாயிற்று. 
  • ராணுவ ஒதுக்கீடு ரூ.193407 கோடி ; சென்ற ஆண்டு ஒதுக்கீடு ரூ. 164415 கோடி. ஒரு ரூபாயில் ராணுவ செலவு 11 காசுகள். 
  • அனல்மின் நிலையக் கருவிகள் இறக்குமதிக்கு முழு வருவிலக்கு.
  • நிலக்கரி, பெட்ரோலியம், எரிவாயு இறக்குமதிக்கு வரி இல்லை. 

    இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இந்த மக்கள் பிரதிநிதிகள் யாருக்கு சேவகம் செல்கிறார்கள்?

வாழ்க இந்தியா! வளர்க முதலாளிகள்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக