வியாழன், மார்ச் 01, 2012

புதிய பகுதி - பரண் : பரண் - 0001

                                                    புதிய பகுதி - பரண் 

                                                            பரண் - 0001 

       கவிஞர்  இலக்குமி குமாரன் ஞான திரவியம்  சொந்த முயற்சி மற்றும் நண்பர்கள் உதவியுடன் தொன்னூறுகளில்  (1992 -1997)  'மவ்னம்' என்ற கவிதைச் சிற்றேட்டை நடத்தி வந்தார். கணையாழி பிபிரவரி -2012  இதழில் க.அம்சப்பிரியா 'கவிதைத்தடம் 'மவ்னம்'- ஒரு பதிவு ' என்கிற தலைப்பில் ஆறு பக்கக்கட்டுரை எழுதியுள்ளார்.

      'மவ்னம்'- இதழ்  எட்டில் (மார்ச்-1995) என்னுடைய கவிதை முயற்சி ஒன்று வெளியானது. கவிதைக்கான இதழ் ஒன்றில் எனது கவிதை  இருந்தது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி. கணையாழி கட்டுரையைப் படித்ததும்  'மவ்னம்' இதழைத் தேடித் பிடித்து எடுத்தேன். இப்போது படிக்கும்போது சிரிப்பாகயிருக்கிறது.  இதை வெளியிட்ட  கவிஞர்  இலக்குமி குமாரன் ஞான திரவியம் மற்றும்   'மவ்னம்'- இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகள்.
     
     இந்த 'பரண்' பகுதியில் என்னுடைய எழுத்துக்களை  (பழைய அச்சேறியது / அச்சேராதது)  தொடர்ந்து வெளியிட எண்ணியுள்ளேன். வேறு வழியில்லை. முடிந்தால் படித்துப் பாருங்கள்.

தலைப்பில்லாத அந்த கவிதை 

இரைச்சல்களற்ற 
இரவின் பேரமைதியில் 
தவளைகள் கத்தாமலிருக்க 
நிலவொளியில் நடக்க 
சல்லாபச் சிறகுகள்
சுய நினைவற்று ஆர்ப்பரிக்க 
ஏதேனும் கிடைத்துவிட்ட 
ஏக்கத்தில் இங்குமங்கும் 
ஊர்கின்ற போதில் 
விளக்குகள் அணையாத 
விடி இரவில் 
சோர்ந்து போய்.

சேர்ந்திருக்க 
யார் வருவா?
 
                                                        -மு.சிவகுருநாதன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக