தியாகு நூல்கள்
(புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 019)
மு.சிவகுருநாதன்
தோழர் தியாகுவிற்கு தமிழ்ச்சூழலில் அறிமுகம் தேவையில்லை. நீண்ட கால சிறை வாழ்க்கைக் குறிப்புகளான ‘ஜூனியர் விகடன்’ இதழில் தொடராக வெளிவந்து, பின்னர் நூலாக்கம் பெற்ற, சுவருக்குள் சித்திரங்கள், கம்பிக்குள் வெளிச்சங்கள் போன்றவை பரவலான கவனிப்பையும் வாசிப்பையும் பெற்றவை. நந்தன் இதழில் தொடராக வந்த ‘விலங்கிற்குள் மனிதர்கள்’ இன்னும் நூல் வடிவம் பெறவில்லை.
அவருடைய சிறைக்குறிப்புகள் வழியேதான் தோழர் ஏ.ஜி. கஸ்தூரிரெங்கன் பற்றிய சித்திரம் நமக்குக் கிடைத்தது. மரணதண்டனை ஒழிப்பு உள்ளிட்ட மனித உரிமைப்பணிகளில் இவரது பங்கு மகத்தானது.
காரல் மார்க்சின் ‘மூலதனம்’ நூலை தமிழாக்கம் செய்த்து இவரது அரும்பணிகளுள் ஒன்றாகும். ‘மூலதனம்’ நூலை மூன்று பாகங்கள், ஐந்து புத்தகங்கள் ₹2000 விலையில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு (NCBH) வெளியிட்டுள்ளது.
‘மூலதனம்’ நூலை ‘மூலமுதல்’ என்ற பெயரில், ஆங்கிலம், வடமொழிக் கலப்பின்றி இயன்ற வரை தூய நற்றமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கி ஒவ்வொரு மூன்று பாகங்களையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளார். மார்க்சியம் ஆனா… ஆவன்னா… (₹150) நூலை முன்னோட்டமாக வெளியிட்டுள்ளார்.
பொதுவாகவே மார்க்சிய நூல்களை சில பக்கங்கள் கூட படிக்க இயலவில்லை என்கிற தடுமாற்றம் உண்டு. தூயதமிழ் அத்தகைய தூரப்படுத்தலை மேலும் அதிகமாக்காமலிருந்தால் நல்லது.
இனி அவரது சில நூல்களின் பட்டியல்:
தமிழ்த்தேசம் வெளியீடுகள்:
1. மார்க்சியம் ஆனா… ஆவன்னா… ₹150
2. கார்ல் மார்க்சின் மூலமுதல் அகவை நூற்றைம்பது ₹30
வெளியீடு:
தமிழ்த்தேசம்,
76, செட்டித் தோட்டம், ஆலந்தூர் சாலை,
சைதாப்பேட்டை, சென்னை – 600015
அலைபேசி: 8939154752 / 9444078265
மின்னஞ்சல்: thozharthiagu.chennai@gmail.com
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு:
1. மூலதனம் 3 பாகங்கள், 5 புத்தகங்கள் ₹2000
வெளியீடு:
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்,
41, பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்,
சென்னை – 600098.
பேச: 044-26258410, 26251968, 48601884
மின்னஞ்சல்: info@ncbh.in
இணையம்: www.ncbhpublisher.in
விஜயா பதிப்பகம் வெளியீடு:
1. சுவருக்குள் சித்திரங்கள் ₹330
2. கம்பிக்குள் வெளிச்சங்கள் ₹385
வெளியீடு:
விஜயா பதிப்பகம்,
20, மணிக்கூண்டுக் கோபுரம் (ராஜா தெரு அருகில்),
டவுன் ஹால்,
கோயம்புத்தூர் – 641001
அலைபேசி: 90470 87058
வடலி வெளியீடு
1. கொலை நிலம் முரண் - அரசியல் உரையாடல் ₹80
(எழுத்தாள ஆளுமைகள் – நூல்களின்பட்டியல் – தொடரும்…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக