தியோடர் பாஸ்கரன் நூல்கள்
(புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 025)
மு.சிவகுருநாதன்
இந்திய அஞ்சல்துறையில் உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். சுற்றுச்சூழலியர், திரை விமர்சகர், திரைப்பட வரலாற்றாளர் போன்ற பன்முகத் தன்மையை தமது எழுத்துகளில் வெளிப்படுத்துபவர்.
சூழலியல், திரைப்படம் சார்ந்த பல்வேறு நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியவர். இத்துறை சார்ந்த நூல்களையும் தொகுத்துள்ளார். இவரது திரை ஆய்வுகள் மிக அதிக எண்ணிக்கையிலானவை.
ரோஜா முத்தையா நூலகத்தின் இயக்குநராக பணியாற்றினார். ‘அவள் பெயர் தமிழரசி’ என்ற தமிழ்ப்படத்தில் நடித்துள்ளார். உல்லாஸ் கரந்தின் ‘The way of the Tiger’ என்ற நூலை ‘கானுறை வேங்கை - இயற்கை வரலாறும் பராமரிப்பும்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்.
குமரி நில நீட்சி, மூதாதையரைத் தேடி…, மணல்மேல் கட்டிய பாலம் ஆகிய நூல்களின் ஆசிரியர் சு.கி.ஜெயகரன் தியோடர் பாஸ்கரனின் சகோதரர் ஆவார்.
உயிர்மை பதிப்பக வெளியீடுகள் தற்போது அச்சில் இல்லை என்று நினைக்கிறேன். காலச்சுவடு மற்றும் சில பதிப்பகங்களில் இவரது நூல்கள் கிடைக்கின்றன.
தியோடர் பாஸ்கரனின் சில நூல்கள் பட்டியல்:
காலச்சுவடு வெளியீடுகள்:
1. யானைகளும் அரசர்களும் - சுற்றுச்சூழல் வரலாறு ₹290
2. சினிமா கொட்டகை - தமிழ்த் திரைத்துறை சார்ந்த கட்டுரைகள் ₹160
3. சோழர் காலச் செப்புப் படிமங்கள் ₹240 (மொ) தியோடர் பாஸ்கரன்
4. இந்திய நாயினங்கள்: ஒரு வரலாற்றுப் பார்வை ₹190
5. கானுறை வேங்கை - இயற்கை வரலாறும் பராமரிப்பும் (மொ) ₹250
6. சித்திரம் பேசுதடி - தமிழ்த்திரை பற்றிய காலப் பதிவுகள் ₹350
7. சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே ₹225
8. மழைக்காலமும் குயிலோசையும் இயற்கையியல் கட்டுரைகள் ₹225
9. மீதி வெள்ளித்திரையில்… ₹175
10. ராஜா ஸாண்டோ ₹90
வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி.சாலை,
நாகர்கோவில் – 629001.
தொலைபேசி: 04652 – 278525.
அலைபேசி: 9677778863
மின்னஞ்சல்: nagercoil@kalachuvadu.com
இணையதளம்: www.kalachuvadu.com
அகநி வெளியீடு:
1. தண்டோராக்காரர்கள் - தென்னிந்தியாவில் தேசியவாத அரசியலும் பொழுதுபோக்கு ஊடகங்களும் (1880-1945) (மொ) அ.மங்கை ₹220
கிழக்கு பதிப்பகம்
1. பாம்பின் கண் - தமிழ் சினிமா: ஓர் அறிமுகம் ₹190
இந்து தமிழ் திசை வெளியீடு:
1. விண்ணளந்த சிறகு - இயற்கை சார்ந்த கட்டுரைகள் ₹150
பாரதி புத்தகாலயம்
1. நம்மைச் சுற்றி காட்டுயிர் ₹50
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு:
1. கல் மேல் நடந்த காலம் - வரலாறு சார்ந்த கட்டுரைகள் ₹160
வெளியீடு:
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்,
41, பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்,
சென்னை – 600098.
பேச: 044-26258410, 26251968, 48601884
மின்னஞ்சல்: info@ncbh.in
இணையம்: www.ncbhpublisher.in
உயிர்மை வெளியீடுகள்:
1. கையிலிருக்கும் பூமி - இயற்கை சார்ந்த கட்டுரைகள் ₹700
2. சோலை எனும் வாழிடம் - இயற்கையியல் கட்டுரைகள் ₹110
3. வானில் பறக்கும் புள்ளெல்லாம் - சூழலியல் கட்டுரைகள் ₹115
4. தாமரை பூத்த தடாகம் ₹100
5. இன்னும் பிறக்காத தலைமுறைக்காக ₹120
6. எம் தமிழர் செய்த படம் ₹100
(எழுத்தாள ஆளுமைகள் – நூல்களின்பட்டியல் – தொடரும்…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக