விஷ்ணுபுரம் சரவணன் நூல்கள்
(புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 022)
மு.சிவகுருநாதன்
விஷ்ணுபுரம் சரவணன் கவிஞர், இதழியலாளர்; குறிப்பிடத்தகுந்த குழந்தை இலக்கியப் படைப்பாளியாக விளங்குகிறார். வழமையான நீதிகளைக் குழந்தைகளிடம் திணிப்பது இவரது பணியல்ல. அவர்களைச் சுயமாகச் சிந்திக்க வைக்கவும் அவர்களின் அறிவுத் தேடலை விரிவாக்கவும் இவரது படைப்புகள் உதவுகின்றன.
இன்றைய காலகட்டத்தின் சூழலியல் அவசியத்தையும் குழந்தைகளின் வழியே முன்னெடுக்கவும் அவர்களை ஈடுபடுத்தவும் fantasy சார்ந்த ஒற்றைச் சிறகு ஓவியா போன்ற சிறார் கதைகளை எழுதி வருவதாகக் குறிப்பிடுகிறார். இளையோருக்கான ‘கயிறு’ கதைகள் ஆங்கிலத்தில் இளம்பரிதியால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இக்கதைகள் இருமொழியிலும் ஒரே நூலாகவும் தனித்தனியாகவும் வெளியாகியுள்ளது.
‘கதை கதையாம் காரணமாம்’ என்ற ஆசிரியர் மற்றும் பெற்றோருக்கான ஆலோசனை வழங்கும் நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். புதிய பாணியில் சிறார் உலகத்தை தமது எழுத்துகளாலும் செயல்பாடுகளாலும் நிறைப்பார் என்று நம்பலாம். இவரது சில நூல்களின் பட்டியல்:
பாரதி புத்தகாலயம் வெளியீடு:
1. வாத்து ராஜா ₹50
2. ஒற்றைச் சிறகு ஒவியா - சிறுவர் கதை ₹110
3. கயிறு ₹30 (ஓங்கில் கூட்டம் இணைந்து…)
வானம் பதிப்பகம் வெளியீடு:
1. கதை கதையாம் காரணமாம் (ஆசிரியர் மற்றும் பெற்றோருக்கான நூல்) ₹40
2. நீலப்பூ - சிறார் நாவல் ₹80
3. வித்தைக்காரச் சிறுமி ₹50
4. வானத்துடன் டூ ₹50
வெளியீடு:01
புக்ஸ் ஃபார் சில்ரன்,
பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
பாரதி புத்தகாலயம்,
தேனாம்பேட்டை,
சென்னை -600018.
அலைபேசி: 8778073949
தொலைபேசி: 044-24332424, 24332924, 24356935
மின்னஞ்சல்: bharathiputhakalayam@gmail.com
இணையம்: www.thamizhbooks.com
வெளியீடு:02
வானம்,
M 22, 6 வது அவென்யூ,
ராமாபுரம்,
சென்னை – 600089.
அலைபேசி: 9176549991
மின்னஞ்சல்: noolvanam@gmail.com
சில நூல் அறிமுகக் கட்டுரைகளின் இணைப்புகள்:
எழுத்தாளர்களின் சொந்த மண்ணில் ஒரு பாராட்டு விழா
https://musivagurunathan.blogspot.com/2020/03/blog-post_13.html
(எழுத்தாள ஆளுமைகள் – நூல்களின்பட்டியல் – தொடரும்…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக