திங்கள், ஏப்ரல் 03, 2023

சு.கி.ஜெயகரன் நூல்கள்

 

சு.கி.ஜெயகரன் நூல்கள்

(புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 027)

மு.சிவகுருநாதன்


 

           சூழலியல், திரைப்படம் சார்ந்த பல்வேறு நூல்களை எழுதிய தியோடர் பாஸ்கரனின் சகோதரர் சு.கி.ஜெயகரன் ஆவார். இவர் எழுதிய தமிழில் வெளியானவை நான்கு நூல்கள் மட்டுமே. அவை தமிழில் குறிப்பிடத்தக்க நூல்களாக உள்ளன.

       குமரி நில நீட்சி, மணல்மேல் கட்டிய பாலம்  ஆகிய மூன்று நூல்கள் தற்போது அச்சில் காலச்சுவடு பதிப்பகத்தால்  வெளியிடப்பட்டுள்ளது. தளும்பல் அச்சில் இல்லை. கிண்டிலில் கிடைக்கிறது.

     லெமூரியாசொல்லின் பெயர்க்காரணமே மிகவும் இழிவானது. இதன்மூலம் திராவிட மற்றும் தமிழ்ப் பெருமை பேசுவது அபத்தம் மட்டுமல்ல; நல்ல நகைச்சுவையும் கூட. பரிணாம வளர்ச்சியில் சற்றே கீழேயுள்ள ப்ரோசிமியன் பிரிவைச் சேர்ந்த லிமர் (Lemur) வகை விலங்குகள் மடகாஸ்கர் தீவுகளில் வாழ்பவை. 30 கிராம் எடையுடைய எலி லிமர் (mouse lemur) முதல் 7 கிலோகிராம் எடையுள்ள இந்திரி, சிஃபாகா   லிமர் வரை பலவகை இதில் உள்ளது. நம்மூர் தேவாங்குகளும் (loris) இப்பிரிவைச் சேர்ந்தவையே என்று சு.கி.ஜெயகரன் குமரி நில நீட்சி நூலில் குறிப்பிடுகிறார்.

       டினோசர்கள் அழிந்து பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னரே மனித இனம் தோன்றியதாக அறிவியல் சொல்கிறது. டினோசர்களையும் ஆதிமனிதனையும் சமகாலத்தவராக்கியது மிகப்பெரிய கால முரண் என்பதை சு.கி.ஜெயகரன் குறிப்பிடுகிறார்.

     தீவு, தீபகற்பம் ஆகிய சொல் பொருள் வேறுபாடுகள் இல்லாத காலகட்டத்தில் பாலி, பிராகிருதம் போன்ற வடமொழி நூற்கள் இந்தியத் தீபகற்பத்தை ஜம்புத்தீவு என்று அழைத்தன. ஜம்பு என்பது நாவல் மரத்தைக் குறித்ததால் நாவலந்தீவு, நாவலன் தண்பொழில் என்றெல்லாம் தமிழில் வழங்கப்பட்டது.

     கடல்கோள்கள் நிறைய நடைபெற்றுள்ளன. தமிழகத்தில் நிலப்பகுதிகள் கடலில் மூழ்கியிருக்கின்றன. இன்றிருக்கின்ற தமிழகத்தின் சிலபகுதிகள் கடலால் அழிபட்டிருக்கிறது. இது குமரிக்கண்டமல்ல; குமரி நிலநீட்சி என்பதை அறிஞர் சு.கி.ஜெயகரன் தெளிவான அறிவியல். நிலவியல், வரலாற்று ஆதாரங்களுடன் நிறுவுகிறார்.

        ஆஸ்ட்ரேலோபிதகஸ் ரமிடஸ், ஆஸ்ட்ரேலோபிதகஸ் அனமென்சிஸ், ஆஸ்ட்ரேலோபிதகஸ் ஆஃப்ரிக்கானஸ், ஆஸ்ட்ரேலோபிதகஸ் ரோபஸ்டஸ், ஹோமோ ஹெபிலிஸ், ஹோமோ எரக்டஸ், ஹோமோஹெய்டல் - பெர்கென்ஸிஸ், ஹோமோசெபியன்ஸ் ஆர்கேயிக்,  ஹோமோசெபியன்ஸ் நியாண்டர்தாலென்ஸிஸ், டெனிஸோவன், ப்ளோரோஸியன்ஸிஸ், ஹோமோசெபியன்ஸ் செபியன்ஸ் போன்ற பரிணாமத்தின் அனைத்துப் படிநிலைகளை இந்நூலில் விளக்குகிறார் சு.கி.ஜெயகரன். உதாரணமாக ஹோமோ எரக்டஸ் ஐ எடுத்துக்கொண்டால்  ஜாவா மனிதர், பீகிங் மனிதர், யானை வேட்டைக்காரர்கள் (ஸ்பெயின்), நர்மதை (இந்தியா) மனிதர், ரத்தினபுரி (இலங்கை) மனிதர் என விரிவாக விளக்கப்படுவதை மூதாதையரைத் தேடி நூலில் காணலாம்.

  

சு.கி.ஜெயகரனின் நூல்கள் பட்டியல்:

 காலச்சுவடு வெளியீடுகள்:

1.       மூதாதையரைத் தேடி - அண்மைத் தரவுகளை உள்ளடக்கிய மேம்படுத்தப்பட்ட பதிப்பு  ₹290

2.       மணல்மேல் கட்டிய பாலம்  ₹150

3.       குமரி நில நீட்சி  ₹260

வெளியீடு:

காலச்சுவடு பதிப்பகம்,

669, கே.பி.சாலை,

நாகர்கோவில் – 629001.

தொலைபேசி: 04652 – 278525.

அலைபேசி:  9677778863

மின்னஞ்சல்: nagercoil@kalachuvadu.com

இணையதளம்: www.kalachuvadu.com

பிற:

1.       தளும்பல்  - கட்டுரைத் தொகுப்பு (அச்சில் இல்லை)

சில நூல் அறிமுகக் கட்டுரைகளின் இணைப்புகள்:

ஆசிரியர்கள் வாசிப்பு – 001

https://musivagurunathan.blogspot.com/2018/07/001.html

கல்விக் குழப்பங்கள் - தொடர் பகுதி 25 முதல் 30 முடிய.

https://musivagurunathan.blogspot.com/2015/09/25-30.html

 

(எழுத்தாள ஆளுமைகள் நூல்களின்பட்டியல் தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக