திங்கள், ஏப்ரல் 03, 2023

தமிழவன் நூல்கள்

தமிழவன் நூல்கள்

(புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 030)

மு.சிவகுருநாதன்

 



            தமிழவன் என்னும் கோட்பாட்டாளர்  மற்றும் கதை சொல்லி

       முனைவர் எஸ்.கார்லோஸ் என்கிற தமிழவன் பெங்களூரு பல்கலைக்கழகம், போலந்து வார்சா பல்கலைக் கழகம், குப்பம் திராவிடப் பல்கலைகழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழ்நாட்டுக்கு வெளியே பணியாற்றியதால் என்னவோ வழமையான தமிழ்ப்புலச் சிந்தனைகளிலிருந்து வேறுபட்டவர்.  

        கோட்பாட்டு ரீதியாகவும் லத்தீன் அமெரிக்கா போன்ற பிற மொழி எழுத்துக்களின் வாசிப்பனுபவத்தின் வாயிலாகவும் புது வகை எழுத்து முயற்சிகளில் சளைக்காது ஈடுபட்டு வருகிறார். குறிப்பிடத் தகுந்த நாவல்களையும் பல சிறுகதைகளையும் தொடர்ந்து எழுதி வருகிறார். இவரது கதை சொல்லும் முறை எளிமை, பூடகம், படிமம் ஆகிய பல கூறுகளால் இணைந்தது.

·         ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்

·         சரித்திரத்தில் படிந்த நிழல்கள்

·         ஜி.கே. எழுதிய மர்ம நாவல்

·         வார்ஸாவில் ஒரு கடவுள்

·         முஸல்பனி

·         ஷாம்பாலா

·         ஆடிப்பாவைபோல         ஆகிய நாவல்களும்

 

·         தமிழவன் கதைகள்

·         இரட்டைச் சொற்கள்

·         நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்

·         கருஞ்சிவப்பு ஈசல்கள் ஆகிய சிறுகதைத் தொகுதிகளும் இதுவரை வெளியாகியுள்ளன.

          ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் ‘One Hundred Years of Solitude’ பாதிப்பில் எழுதப்பட்டதாக சிலாகிக்கப்பட்டது. ஜார்ஜ் லூயிஸ் போர்ஹே, ஜேம்ஸ் ஜாய்ஸ் போன்றோரின் பாதிப்புகள் எந்த ஒரு படைப்பாளிக்கும் இருப்பது இயல்புதான். அவற்றை தமிழ்ச்சூழலுடன் இணைப்பது தமிழவனின் புதுவகை எழுத்தைச் செழுமைப்படுத்தியுள்ளது.

         1993–ல் வெளியான சரித்திரத்தில் படிந்த நிழல்கள்நீண்ட நாள்களுக்குப் பிறகு மறுபதிப்பு கண்டுள்ளது. இந்நாவல் போஸ்ட் மாடர்னிச / பாலிம்ஸெஸ்ட் சரித்திரம் என்ற வகைப்படித்தி வெளியானது. தெகிமொலாஎன்ற கற்பனை தேசத்தின் ஊடாக சொல்லின் பொருள், காலத்தை வென்றவள், அம்மிக்குழவி, எறும்பு ராணிகள், பச்சை ராஜன், மலை மீது ஒளி, ஒற்றைக்கண்ணன் போன்ற குறியீட்டுக் கதை மாந்தர்கள் வழியே நாம் காணும் தமிழக அரசியலை புது மொழியில் எழுதினார். ஜி.கே. எழுதிய மர்ம நாவலும்மர்ம நாவல் பாணியை புது வகை எழுத்தில் கொண்டுவந்தது.

       இவரது சிறுகதைகள் நம்மை வெறொரு உலகிற்கு அழைத்துச் செல்பவை. வாசிப்பில் சுவாரசியம் தரக்கூடியவை இவை. சிறுகதைக்கென்று தனித்த பாணியைப் பின்பற்றி எழுகிறார். நாவலில் வெளிப்படும் பன்முகப்பார்வைகள் சிறுகதைகளிலும் விரிகின்றன.

தமிழவன் நூல்கள் பட்டியல்:

எதிர் வெளியீடு:

1.       நவமார்க்சிய வழியில் திராவிடத் தமிழ்ச் சிந்தனைகள் மற்றும் பிற கட்டுரைகள்  ₹380

2.       கருஞ்சிவப்பு ஈசல்கள்சிறுகதைகள்  ₹200

3.       ஆடிப்பாவைபோலநாவல்  ₹350

 

வெளியீடு:

எதிர் வெளியீடு,

96, நீயூ ஸ்கீம் ரோடு,

பொள்ளாச்சி – 642002.

பேச: +91 4259 226012

Mobile: 98948 75084 / 99425 11302

மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com

இணையம்:  https://ethirveliyeedu.com/

 

அடையாளம் பதிப்பகம்:

1.       புதுக் கம்யூனிசம் மற்றும் சில கட்டுரைகள்  ₹160

2.       அவஸ்தையூ.ஆர். அனந்தமூர்த்தி (மொ)  ₹220

3.       அமைப்பியலும் அதன் பிறகும்  ஸ்ட்ரக்சுரலிசம் நூலின் விரிவாக்கப்பட்ட பதிப்பு  ₹350

4.       திராவிடம் தமிழ்த் தேசம் கதையாடல் ஒரு நூற்றாண்டுத் தமிழ்ச் சிந்தனை வரலாறு ₹200

5.       முஸல்பனி  - நாவல் ₹65

6.       இரட்டைச் சொற்கள் - உலகத் தரத்தில் தமிழ்ச் சிறுகதைகள்  ₹125

7.       வார்ஸாவில் ஒரு கடவுள்நாவல்  ₹390

8.       சரித்திரத்தில் படிந்த நிழல்கள் - காலனிய அழகியலுக்கு எதிரான பின்காலனிய நாவல் ₹120

9.       ஜி. கே. எழுதிய மர்ம நாவல்  - ₹220

10.   ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் - தமிழில் முதல் மாய எதார்த்த நாவல்  ₹125

வெளியீடு:

அடையாளம்,

1205/1, கருப்பூர் சாலை,

புத்தாநத்தம் – 621310,

திருச்சிராப்பள்ளி மாவட்டம்.

பேச: 04332 273444

மின்னஞ்சல்: info@adaiyaalam.net

 

பாரதி புத்தகாலயம் வெளியீடு:

1.       ஷம்பாலா - ஓர் அரசியல் நாவல்  ₹210

வெளியீடு:

பாரதி புத்தகாலயம்,

7, இளங்கோ சாலை,

பாரதி புத்தகாலயம்,

தேனாம்பேட்டை,

சென்னை -600018.

அலைபேசி: 8778073949

தொலைபேசி: 044-24332424, 24332924, 24356935

மின்னஞ்சல்: bharathiputhakalayam@gmail.com

இணையம்: www.thamizhbooks.com

சாகித்திய அகாதெமி வெளியீடு:

2.       தன் வரலாறு: ஓர் இலக்கிய வடிவம்  ₹400

3.       இளையவர்களின் புதுக்கவிதைகள் (தொ) ₹175

4.       திறனாய்வும் கேட்பாடும்  (தொ) ₹180

புது எழுத்து:

1.       நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்கதைகள்  ₹120

மேலும் சில நூல்கள்:

1.       நவ மார்க்சிய வழியில்... ₹400

2.       தமிழுணர்வின் வரைபடம் - ஆக.2009 - ₹75  (உயிர்மை)

3.       பழந்தமிழில் அமைப்பியல் மற்றும் குறியியல் ஆய்வுகள் - 2009 - உலகத் தமிழாராய்ச்சி  நிறுவனம் - ₹45

4.       தமிழவன் கட்டுரைகள் - தொகுதி 2 - காவ்யா -2010 - ₹600

5.       தமிழவனின் மாற்றுக்குரல்  (தமிழ்மொழி,இலக்கியம், பண்பாடு பற்றிய 1970 முதல் 2020 வரையிலான தமிழவன் மீதான கட்டுரைகளின் தொகுப்பு) - ₹620 தொகுப்பாசிரியர்: ப.கிருஷ்ணசாமி , ப.சகதேவன் யாவரும் பதிப்பகம்.

சில நூல் அறிமுகக் கட்டுரைகளின் இணைப்புகள்:

தமிழவனின் படிம நாவல் முஸல்பனி

https://musivagurunathan.blogspot.com/2016/11/57.html

 

இறுதியாக

         இத் தொடரில் இதுவரை 30 எழுத்தாளர்களின் நூல் பட்டியல் வெளியானது. இது பேராற்றின் சிறு துளி மட்டுமே. இது திருவாரூர் புத்தகக் கண்காட்சிக்கு மட்டுமல்ல; தமிழகத்தின் நடக்கும் அனைத்து இடங்களிலும் நடப்பவற்றுக்கும் சேர்த்துதான்.

        தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா, நொபரு கரஷிமா, ரொமிலா தாப்பர் போன்றோரது நூல்கள் பல தமிழில் கிடைக்கின்றன. அவற்றைப் பற்றி எழுத கால அவகாசம் இல்லை. பின்னர் பார்க்கலாம்.

(எழுத்தாள ஆளுமைகள் நூல்களின்பட்டியல் இத்துடன் தற்காலிகமாக நிறைவடைகிறது…)

மீண்டும் சந்திப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக