சனி, ஏப்ரல் 01, 2023

ச.மாடசாமி நூல்கள்

.மாடசாமி  நூல்கள்

(புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 021)

மு.சிவகுருநாதன்


 

        கல்வியாளர் ச.மாடசாமி கல்வியை குழந்தைமயப்படுத்துவதிலும் மக்கள் மயபடுத்துவதிலும் தீவிரம் காட்டும் செயல்பாட்டாளர். அவருடைய எழுத்துகள் யாவருக்கும் புரியும்வண்ணம் எளிய நடையில் அமைந்தவை.

       தமிழக அரசின் கல்விக்கொள்கைக் குழுவில் இருக்கிறார். நிறைய சிறுநூல்களைப் படைத்துள்ளார்.  என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா, எனக்குரிய இடம் எங்கே?, ஆளுக்கொரு கிணறு, குழந்தைகளின் நூறு மொழிகள்  போன்ற நூல்கள் ஆழமான கல்விச்சிந்தனைகளை எளிய மொழியில் தருபவை.  

     என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா   ஆங்கிலத்திலும் (My Red Ballpoint Pen) வெளியாகியுள்ளது. துப்பாக்கிக் குண்டுகளிலிருந்து பிறக்கும் அதிகாரத்தைப் போல சிவப்பு மையிலிருந்து பிறக்கும் அதிகாரத்தை தலைப்புக் கட்டுரையான என் சிவப்பு பால்பாயிண்ட பேனாமிக அழகாகக் கட்டுடைக்கிறது. ஆசிரியரின் அதிகாரத்தையும் இன்றைய கல்விமுறையையும் ஒருசேரக் கேள்விக்குள்ளாக்கும் நூலிது.  

    அறிவொளி இயக்கத்தில் பணியாற்றியவர். அந்த அனுபவ வீச்சுகளை பல நூல்களில் கல்விச்சிந்தனைகளாக உருமாற்றியிருக்கிறார்.  அவரது சில நூல்களின் பட்டியல்; இவற்றில் சில அச்சில் இல்லை.

பாரதி புத்தகாலயம் வெளியீடு

1.       அன்பென்பது ஒரு தந்திரம் அல்ல   ₹70

2.       எனக்குரிய இடம் எங்கே?  ₹120

3.       என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா   ₹80

4.       My Red Ballpoint Pen  ₹90

5.       குழந்தைகளின் நூறு மொழிகள்   ₹90

6.       பாம்பாட்டிச் சித்தர்  ₹50

7.       தமிழர் திருமணம்  - அன்று முதல் இன்று வரை  20

8.       ஏமாளியும் திருடனும் (8 கதைகளின் தொகுப்பு)  ₹15

9.       பள்ளிக் கல்வி புத்தகம் பேசுது நேர்காணல்கள் (தொ)   ₹90

10.   கடலும் கிழவனும்  - எர்னெஸ்ட் ஹெமிங்வே  (மொ) ₹45

11.   பூமரப் பெண் - கதைகள், விவாதங்கள், சம்பவங்கள் ₹35

12.   போயிட்டு வாங்க சார்!  (Good Bye, Mr. Chips)  ₹40

13.   வெளிச்சம் உறுதி (தொ) ₹45

14.   மனச்சாட்சியின் குரல்கள்முகநூல் பதிவுகளும் பின்னூட்டங்கலும் ₹150

15.    மிருதுவாய் ஒரு நெருப்பு ரோஸா பார்க்ஸ்மா.லைலாதேவி (மொ) ₹50

வெளியீடு:

புக்ஸ் ஃபார் சில்ரன்,

பாரதி புத்தகாலயம்,

7, இளங்கோ சாலை,

பாரதி புத்தகாலயம்,

தேனாம்பேட்டை,

சென்னை -600018.

அலைபேசி: 8778073949

தொலைபேசி: 044-24332424, 24332924, 24356935

மின்னஞ்சல்: bharathiputhakalayam@gmail.com

இணையம்: www.thamizhbooks.com

 

எதிர் வெளியீடு

1.       சொலவடைகளும் சொன்னவர்களும்  ₹320

வெளியீடு:

எதிர் வெளியீடு,

96, நீயூ ஸ்கீம் ரோடு,

பொள்ளாச்சி – 642002.

பேச: +91 4259 226012

Mobile: 98948 75084 / 99425 11302

மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com

இணையம்:  https://ethirveliyeedu.com/

அருவி மாலை வெளியீடு:

1.       ஆளுக்கொரு கிணறு  ₹80

புதிய தலைமுறை வெளியீடு:

1.       தெரு விளக்கும் மரத்தடியும்  ₹80

சில நூல் அறிமுகக் கட்டுரைகளின் இணைப்புகள்:

மயிலிறகால் வருடும் வாசிப்பனுபவம்

https://musivagurunathan.blogspot.com/2016/11/51.html

மென்மை பொதிந்த தீவிரக் கல்விச் சிந்தனைகள்

https://musivagurunathan.blogspot.com/2016/02/35.html

சிவப்பு மையிலிருந்து பிறக்கும் அதிகாரம்

https://musivagurunathan.blogspot.com/2015/12/27.html

 

(எழுத்தாள ஆளுமைகள் நூல்களின்பட்டியல் தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக