இரா எட்வின் நூல்கள்
(புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 020)
மு.சிவகுருநாதன்
கல்விச் சிந்தனைகளை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்குமான எளிய மொழி நடையில் எழுதுபவர்கள் என இப்போதைக்கு இருவரைச் சுட்டமுடியும். ஒருவர்: பேரா. ச.மாடசாமி, இன்னொருவர்: கவிஞர் இரா.எட்வின். இவர்கள் தங்களுடைய அனுபவங்கள் வாயிலாக சிக்கல் மிகுந்த கல்விப் பிரச்சினைகளை மிக எளிமையாகவும் நேர்மையாகவும் அணுகி கல்விச் சிந்தனைகளை அகலிக்கச் செய்கின்றனர்.
கல்வித்துறையில் பணி செய்பவர்கள் பெரும்பாலும் கல்வியாளர்களாக இருப்பதில்லை. விதிவிலக்கு இரா.எட்வின். கவிஞர், ஆசிரியர், தொழிற்சங்கவாதி, கல்வியாளர், சொற்பொழிவாளர் என பல பணிகளை ஒருங்கே செய்பவர். கல்வி குறித்த கருத்துகளை கவிதைபோல் நுட்பமாகவும் சிக்கனமாகவும் வெளியிடுபவர்.
கல்விப்புலத்திற்கு வெளியிலிருந்து கல்வி பற்றிப் பேசுவது கல்விப்புலத்திலிருந்து பேசுவதும் ஒன்றாக இருக்க இயலாது. எனவே இவை முதன்மை வாய்ந்தாகின்றது. தமது நீண்ட கல்வி மற்றும் சமூக அனுபவங்களின் வாயிலாக கல்வி குறித்த ஆக்கச் சிந்தனைகளையும் தீர்வுகளையும் எட்வின் முன்வைக்கிறார்.
தமிழ்நாட்டுப் பாடநூல் உருவாக்கத்தில் எட்வின் பங்கு மிக அதிகம். முந்தைய சமச்சீர் பாடநூல் உருவாக்கத்திலும் தற்போதைய புதிய பாடநூலிலும் அவை குழந்தைகள் மையமாக அமைய கடின உழைப்பைத் தந்தவர்.
இவரது கல்விச் சிந்தனைகள் பல நூலாக்கம் பெறவில்லை. எழுதிய ஒருசில நூல்கள் விற்பனை இருக்கிறதா, இல்லை என்பதையும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து இயங்கி வருகிறார். ‘காக்கைச் சிறகினிலே…’ மாத இதழ் ஆசிரியர் குழுவில் அங்கம் வகிக்கிறார்.
இவரது நூல்கள் சிறியவை. சில நூல்கள் மட்டும் அச்சில் இருக்கின்றன. ஏற்கனவே நற்றிணை பதிப்பகம் வெளியிட்டிருந்த எது கல்வி? நூலை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது. மேலும் சில நூல்கள் அச்சில் கிடைக்கின்றன. அவைகளில் சிலவற்றின் பட்டியல்:
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு:
1. எது கல்வி? ₹180
2. பத்துக் கிலோ ஞானம் ₹85
3. என் கல்வி என் உரிமை - குறுநூல் ₹20
வெளியீடு:
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்,
41, பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்,
சென்னை – 600098.
பேச: 044-26258410, 26251968, 48601884
மின்னஞ்சல்: info@ncbh.in
இணையம்: www.ncbhpublisher.in
சந்தியா பதிப்பகம் வெளியீடு:
1. இவனுக்கு அப்போது மனு என்று பேர் ₹70
2. எப்படியும் சொல்லலாம் ₹65
வெளியீடு:
சந்தியா பதிப்பகம்,
77, 53 வது தெரு, 9 வது அவென்யூ,
அசோக்நகர்,
சென்னை – 600083.
பேச: 044 24896979
இணையம்: www.sandhyapublications.com
மின்னஞ்சல்: sandhyapathippagam@gmail.com sandhyapathippagam@yahoo.com
வானம் பதிப்பகம் வெளியீடு:
1. 7 B னா சும்மாவா? ₹40
வெளியீடு:
வானம்,
M 22, 6 வது அவென்யூ,
ராமாபுரம்,
சென்னை – 600089.
அலைபேசி: 9176549991
மின்னஞ்சல்: noolvanam@gmail.com
மேலும் சில நூல்கள்:
2. நான் ஏன் உங்களுக்கு வாக்களிக்கப் போவதில்லை?
3. அந்தக் கேள்விக்கு வயது 98 (சாளரம் வெளியீடு)
4. இவ்வளவுதான் – கவிதைகள் ₹100
சில நூல் அறிமுகக் கட்டுரைகளின் இணைப்புகள்:
தோழர் எட்வின் இணையப் பக்கம்:
கல்வி உரிமையும் களவு போன கல்வியும்
கல்வியை அறிதல்
https://musivagurunathan.blogspot.com/2020/04/blog-post_29.html
(எழுத்தாள ஆளுமைகள் – நூல்களின்பட்டியல் – தொடரும்…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக