வியாழன், பிப்ரவரி 03, 2011

2 ஜி அலைக்கற்றை ஊழலில் ஆ.ராசா கைது:-அப்ருவராக மாறுவாரா? -மு.சிவகுருநாதன்

2ஜிஅலைக்கற்றைஊழலில்ஆ.ராசாகைது:-
அப்ரூவராக மாறுவாரா?      -மு.சிவகுருநாதன்   
       
           

            2 ஜி அலைக்கற்றை ஊழலில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்தியஅமைச்சர்ஆ.ராசாசி.பி.அய்போலீசாரால்கைதுசெய்யப்பட்டுள்ளார்.அவருடன் பணியாற்றிய தொலைத்தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெஹுரா, ராசாவின் தனிச் செயலர் ஆர்.கே. சந்தோலியா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள்  மீது அரசுக்கு ரூ 22000 கோடிஇழப்பு ஏற்படுத்தியது,2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்தது போன்ற குற்றங்களுக்காக  120(B),13(2),13(1D) ஆகிய  பிரிவுகளின் கீழ்சி.பி.அய்வழக்குபதிவுசெய்துள்ளது.தி.மு.க.தலைவரும்தமிழகமுதல்வருமானமு.கருணாநிதியிடம்அனுமதிபெற்ற  பிறகே இந்த கைது நடந்திருக்கவாய்ப்புள்ளது. 

         ஆ.ராசா மீது சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த குற்றவியல் வழக்கு வரும் பெப்ரவரி 05 அன்று  (05.02.2011) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அந்த விசாரணையில் நீதிபதிகளின் எதிர்க்கணைகளிருந்து  தப்பிக்க மத்திய அரசு முன்னெச்சரிக்கையாக செயல்பட்டிருக்குமோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.                                                                                   

         இவ்வளவு  பெரிய ஒரு ஊழலை தனி மனிதர் செய்திருக்க வாய்ப்பில்லை என மு.கருணாநிதியே ஒத்துக்கொண்டுள்ளார். இந்த ஊழலில் பல அரசியல் புள்ளிகள், நிறுவனங்கள், தரகர்கள் ஆகியோர் பங்கு பெற்றிருக்கக்கூடிய வாய்ப்பிருந்தும் அரசின் ஆணைப்படி சி.பி.அய். பாரபட்சமாகச் செயல்படுவது வெளிப்படையாகவே தெரிகிறது.
         
          இந்தியாவில் அரசியல் சட்டத்திற்குட்பட்ட  எந்த உயர் அமைப்பையும் சுயேட்சையாகச் செயல்பட நமது அரசியல்வாதிகள், தலைவர்கள்,அனுமதிப்பதே இல்லை. தேர்தல் ஆணையம்,ஊழல் ஒழுங்குமுறை ஆணையம், சி.பி.அய். போன்றவைகூட இதற்கு விதிவிலக்கல்ல. 1986 -இல் வெளிப்பட்ட போபார்ஸ்  பீரங்கி பேர ஊழல் இன்னும் முடிவின்றி நீண்டுகொண்டிருக்கிறது . இதற்குக் காரணம் அரசியல் தலையிடென்பதைச்   சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

            ஆ.ராசாவின் வீடு,அலுவலகம்  மற்றும் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் சோதனையும் விசாரணையும்  நடத்தப்பட்டது. கனிமொழியின் நெருக்கமான நண்பரும்  தமிழ் மைய இயக்குருமான  பாதிரியார் ஜெகத் கஸ்பர் அலுவலகமும் சோதனைக்குள்ளது. ஆனால் சி.பி.அய். கனிமொழி மீது சுண்டு விரலைக் கூட நீட்ட வில்லை. இந்த ஆண்டு சங்கமம் நிகழ்ச்சியில் 'தமிழ் மையம் ' பெயரைப் பயன்படுத்தக்கூடாது என சென்னை உயர்நீதி மன்றம் உத்திரவிட்டும் கூட அதைச் செயல்படுத்தக்கூட தமிழக அரசும் கனிமொழியும் தயாராக இல்லை. 
       
           TRAI முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால், முன்னாள் செயலாளர் மாத்தூர், தரகர் நீரா ராடியா மீது விசாரணையும் சோதனைகளும் நடத்தப்பட்டுவிட்டது . எனவே இவர்கள் கூட வரும் நாட்களில் கைது செய்யப்படலாம். ஆனால் மு.கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி, மகள் கனிமொழி, மாநில அமைச்சர் பூங்கோதை ஆலடிஅருணா  போன்றோர் மீது எவ்வித விசாரணையும் நடத்தி எவ்வித  நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதற்கெல்லாம் கொடுக்கப்பட்ட விலைதான் காங்கிரஸ் -உடன் கூட்டணி தொடரும் என்ற அறிவிப்பு.
   
          பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியாகாந்தி, முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் தயாநிதிமாறன், தொழிலதிபர் ரத்தன் டாட்டா, பத்திரிக்கையாளர்கள் பர்கா தத், வீர்சங்வி ,பா.ஜ.க. வைச் சேர்ந்த தலைவர்கள் முன்னாள் அமைச்சர் அருண் ஷோரி  பிரமோத் மகாஜன் (இவர் இறந்துபோனாலும் ஊழலின் தொடக்கம் இவருடைய காலத்தில்தான்) போன்ற பலரது தலைகள் இந்த ஊழலில் உருள வாய்ப்பிருக்கிறது.அதனால்தான் எதிர்கட்சிகளும்,இடதுசாரிகளும் நாடாளுமன்ற கூட்டுக்குழு  (JPC) விசாரணையைக் கோருகிறார்கள்.
JPC அமைக்கப்பட்டால் பிரதமரை கூப்பிட்டு விசாரிப்பார்கள் என்று  காங்கிரஸ் அதற்கு ஒத்துக்கொள்ள மறுக்கிறது.பிரதமர் என்ன கடவுளா அல்லது கறைபடியாதவரா என்றெல்லாம் யாரும் பேசுவதில்லை.

          நீதிமன்ற உத்தரவுகளையும் CAG அறிக்கைகளையும் கேலிக்குள்ளாக்கி தினமும் பேசுவதையே வழக்கமாகக் கொண்டுள்ள தற்போதைய தொலை தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபலின் செய்கைகளை அமைச்சரவையின் தலைவர் என்கிற முறையில் பிரதமர் அனுமதிக்கிறார் என்றுதான் பொருள்.இந்த நீதிமன்ற அவமதிப்பை உச்ச நீதிமன்றமும் கண்டுகொள்ள மறுக்கிறது.

          தி.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருக்கும் ஆ.ராசா தி.மு.க.தலைமை மு.கருணாநிதியால் பாதுகாக்கப்பட்டு வருகிறார்.ஒருவர் கைது செய்யப்பட்டுவிட்டதால் மட்டும் குற்றவாளியாகிவிடமட்டார் என்றும் குற்றம் நிருபிக்கப்பட்டால் மட்டுமே கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும் இன்று (03.02.2011)  கூடிய பொதுக்குழு தீர்மானித்துள்ளது.ஆ.ராசாவுக்கு இந்தப் பாதுகாப்பு எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்பதை உறுதியாக சொல்வதற்கில்லை.

             எப்படியும் ஒருநாள் தி.மு.க.விலிருந்து ஆ.ராசா நீக்கப்படுவதுஉறுதி.அப்போது தி.மு.க.தலைமை  ஊழலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுப்பதே எங்களது கொள்கை என வீரவசனம் பேசுவதைக் கேட்கும் நல்வாய்ப்பு நமக்கெல்லாம் கிட்டும்.எனவே இந்த வழக்கில் அவர் அப்ரூவராக மாறினால் மட்டுமே தி.மு.க.குடும்பத்தொடர்புகள் வெளியே வர வாய்ப்புள்ளது.அப்போது அவர் ஊழலில் தனக்குள்ள தொடர்பையும் ஒத்துக்கொண்டேயாகவேண்டும். சி.பி.அய்.இன் அரசியல் தலையீடுகள் இல்லாத பாரபட்சமற்ற செயல்பாடுகள்தான் இவ்வழக்கின் தலைவிதியை நிர்ணயிக்கும்.அதற்கு வாய்ப்பிருக்குமென்று நம்பமுடியவில்லை.இதைக் காரணம் காட்டி 
காங்கிரஸ் வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களைக் கேட்டுப் பெற துருப்புச்சீட்டாக பயன்படுத்த வாய்ப்புண்டு.மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிமாற்றத்திற்கு   நாம் காத்திருக்கவேண்டும்.

கொசுறு:-
              ஆ.ராசா கைதிலும் ஊடக அயோக்கியத்தனங்கள் அம்பலமாகியுள்ளன.சன் டி.வி.குழுமமும்  கலைஞர் டி.வி.குழுமமும் ஆ.ராசா கைதை செய்தியாக காட்ட மறுத்து முடிந்த வரையில் காலம் கடத்தின.ஊடகங்கள் மற்றும் திரைத்துறையை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ள மு.கருணாநிதியின் குடும்பங்களின் பல்வேறு அடாவடித்தனங்களில்  இதுவும் ஒன்று.இதைப்போலவே ஜெயா டி.வி.யும் 2006  சட்டமன்றத் தேர்தலில் தனது தோல்விகளை ஒப்புக்கொள்ள மறுத்து பொய்ச்செய்திகளை மட்டும் ஒளிபரப்பியது.                    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக