13. கருத்துச் சித்திரங்களுடன் இன்றைய கல்வி குறித்த
விமர்சனம்
(இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்)
மு.சிவகுருநாதன்
(பாரதி புத்தகாலயம் இந்திய மாணவர் சங்கத்துடன்
(SFI) இணைந்து வெளியிட்டுள்ள அப்பணசாமி மொழிபெயர்ப்பில்
‘டேஞ்சர்: ஸ்கூல்! சமகால கல்வி குறித்த உரையாடல்’ என்ற நூல் குறித்த பதிவு.)
சமகாலக் கல்வி குறித்த உரையாடல் கருத்துச்
சித்திரங்கள் மற்றும் குறிப்புகளுடன் நிகழ்கிறது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்
என அனைத்துத் தரப்பையும் சென்றடையும் வண்ணம் இருக்கிறது. கருத்துச் சித்திரங்களாக இருப்பது
மாணவர்களுக்கு எளிதாகவும் இதன் விடுபடல்களை தொகுப்பதற்கு வசதியாகவும் அமையும்.
இந்நூல்
வெளிப்படுத்தும் சில முதன்மைக் கருத்துகளைத் தொகுத்துக்கொள்வோம்.
- ஆசிரியர்கள், பெற்றோர்கள் பள்ளி, படிப்பு, பாடங்கள் குறித்து பயமுறுத்துகின்றனர். பள்ளிச்சூழலும் உவப்பானதாக இல்லை.
- பள்ளி தோல்விகளை உருவாக்கித் தரும் அமைப்பாக சுருங்கிவிட்டது.
- பெரும்பாலான மாணவர்கள் கவலையில் உள்ளனர். அவர்கள் பள்ளியை விட்டு வெளியேறக் காத்திருக்கின்றனர்.
- புதிய கல்விமுறைகளை ஆசிரியர்கள் விரும்புவதில்லை. மாறாக பழமை விரும்பிகளாக உள்ளனர்.
- கல்வி பள்ளி மற்றும் பாடங்களில் மட்டும் இல்லை. அதற்கு வெளியேயும் உள்ளது. காடுகள், மலைகள், வயல்கள், தாவர-விலங்குகள், மூத்தோர்கள் ஆகியவையும் கல்விப் பரப்பாக நீள்கிறது.
- இந்தியாவில் பாரம்பரியக் கல்வி, மெக்காலே கல்வி குறித்த ஒப்பாய்வுகள் தேவை. தரம்பால் ஆய்வு முடிகள் தரப்படுள்ளன. இதை மேலும் விவாதிக்க வேண்டும்.
- பணக்கார்கள், ஏழைகள் என இருதரப்புக்கும் தனித்தனி கல்விமுறை இயங்குகிறது.
- அனைவருக்கும் இலவசமாகவும் கட்டாயமாகவும் வழங்கப்படவேண்டும். கல்வி விடுதலைக்கான கருவியாகவும் வசதியற்றவர்கள் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கான அமைப்பாகவும் பள்ளி இருக்கவேண்டும். கல்வி ஜனநாயகப் படுத்தப்படவேண்டும்.
- அமைதி, கவனம், ஒழுக்கம், அடக்கம், பணிவு முதலானவை மட்டுமே சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுக்க இங்கு அளவுகோல்களாக இருக்கின்றன.
- இங்கு ஆசிரியரே பேசுகிறா, அறிகிறார், கட்டளை இடுகிறார், முடிவு செய்கிறார், தீர்ப்பளிக்கிறார், கவனிக்கிறார், தண்டனை அளிக்கிறார். மாணவர்களின் பங்கு இதையே அப்படியே ஏற்பதுதான்.
- குழந்தைகள் ஒரு செயற்கையான மொழியை பயன்படுத்த கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அவர்களது அன்றாட பேச்சு வழக்கு கொச்சை வழக்கு என இழிவு செய்யப்படுவதுடன் திருத்தம் பரிந்துரைக்கப்படுகிறது.
- பள்ளிகளில் ஆசிரியர்கள் கொடுக்கும் பயிற்சிகள், கேட்கும் கேள்விகள் பெரும்பாலும் செயற்கையானவை.
- தேர்வுகள், தோல்விகள், தண்டனைகள் மோசமானவை. இதன் விளைவுகள் பாரதூரமானவை.
- மாணவர்களுக்கு பொருளற்ற, என்னவென்று தெரியாத பாடங்கள், யதார்த்தச் சூழலிருந்து முற்றிலும் விலகிய கல்விமுறை, சமகால வரலாற்றை அணுகாத தன்மை ஆகியவற்றால் கல்வியின் அடித்தளம் இயங்குகிறது.
- மாணவர்களின் விருப்பத்திற்கும் அவர்கள் விரும்பும் பாடங்களும் இங்கு முதன்மையாவதில்லை.
- மாணவர்கள் தங்களுக்குத் தொடர்பில்லாத, தங்களைப் புரிந்துகொள்ளாத பெரியவர்களால் ஆளப்படுகிறார்கள்.
- பள்ளிகள் சமூக, கலாச்சார வேறுபாடுகளைக் கணக்கில் கொள்வதில்லை.
- தனிநபர் வாதமும் போட்டியும் கற்பிக்கப்படுகிறது. ஒருதரப்பிற்கு தாழ்வு மனப்பான்மை உண்டாகிறது.
- கல்வி அடக்குமுறையை பிரயோகிக்கிறது. இருக்கும் அமைப்பை தக்கவைக்க பெருமுயற்சி செய்கிறது.
- என்ன விதமான பழக்கவழக்கங்கள், மதிப்பீடுகள் பின்பற்ற வேண்டும் என்பதை பள்ளிகளே நிர்ணயிக்கின்றன.
- அதிகார வர்க்கம் திட்டமிட்டே சிலரை தேர்ச்சி பெறவைத்தும் பலரை உழைப்பு சக்தியாக வெளியேற்றும் வடிகட்டும் பணியை கல்வி மூலமே செய்கிறது.
- இவற்றையெல்லாம் மாற்றுவதற்கு பாவ்லோ பிரைய்ரே போன்ற மாற்றுச் சிந்தனைகள் நமக்குத் தேவைப்படுகின்றன.
மொழிபெயர்ப்பாக இருப்பதாலோ என்னவோ இங்குள்ள சிக்கல்கள்
இல்லாமற் பொய்விட்டனர். உள்தலைப்புகள் சார்ந்து
கருத்துகள் பிரித்து வைக்கப்பட்டிருப்பின் நன்றாக இருக்கும். இவற்றின் கருத்துகளை அடிப்படையாகக்
கொண்டு நமது கல்வி முறையை அணுகவும், விமர்சிக்கவும், மாற்றவும் முனைந்தால் நல்லது.
டேஞ்சர்: ஸ்கூல்! சமகால கல்வி குறித்த உரையாடல்
தமிழில்: அப்பணசாமி
வெளியீடு:
இந்திய மாணவர் சங்கத்துடன் (SFI) இணைந்து
பாரதி புத்தகாலயம்
முதல்பதிப்பு: நவ. 2007
இரண்டாம் பதிப்பு: 2012
பக்கம்: 104
விலை: ரூ. 90
தொடர்பு முகவரி:
பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600018.
தொலைபேசி: 044 24332424, 24332924,
24356935
இணையம்: www.thamizhbooks.com
1 கருத்து:
அருமை
கருத்துரையிடுக