செவ்வாய், அக்டோபர் 04, 2016

போர் வெறியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி!

போர் வெறியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி!

- மு.சிவகுருநாதன்

மதவெறியோடிணைந்த தேசவெறி இப்போது இங்கு போர்வெறியாகக் கட்டமைக்கப்படுகிறது.

போரினால் அப்பாவி பொதுமக்கள் பலியாவதைப் போல போர்வெறிக்கு நடுத்தர வர்க்கம் எளிதில் பலியாகிறது.

இவர்களது போர்வெறிக் கூச்சல்களை சமூக வலைத்தளங்களில் காணமுடிகிறது.

இவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது.

Surgical strikes காரணமாக நாட்டின் நிதிநிலைமையில் எவ்வித பாதிப்பும் இல்லை என நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஒருபுறம் திருவாய் மலர்ந்துள்ளார்.

மறுபுறத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இம்மாதத்தில் (அக். 2016) அளிக்கப்படவிருந்த ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அடுத்த மாதந்தான் அமலாகும் என்று நிதியமைச்சகம் சொல்லிவிட்டது.

அருண் ஜேட்லி சொன்னது வேறு நாட்டுக்கு என்று நினைத்துக்கொள்ளுங்கள்!
இனி இதற்கென்று தனியே வரி கூட விதிக்கப்படலாம்.

பட்ஜெட் நிதி முழுக்க ராணுவத்திற்கும் போர்த்தளவாடங்களுக்கும் திருப்பி விடப்படலாம்.

இருந்தாலென்ன?

உங்களுக்கு கொண்டாட்டந்தானே!

ஆனால் போர் வந்தால் சாகப்போவது மோடியும் நவாஸ் ஷெரீஃப் பும் அல்ல.

நீங்களும் நானுமே!

சாவைக் கொண்டாடத் தயாராவோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக