உலகமயமாக்கல் பெருமையின் அபத்தங்கள்!
மு.சிவகுருநாதன்
(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்:
05)
“The primary objective of this model was to
make the economy of India the fastest developing economy in the globe with
capabilities that help it match up with the biggest economies the world. These
economic reforms had influenced the overall economic growth of the country in a
significant manner”. (page:220)
“Despite fluctuations in recent quarters
due to disruptions caused by two major structural reforms - demonetisation and
the Goods and Service Tax (GST). The world Bank projected a growth rate of 7.3%
in the year 2018 - 19 and 7.5% 2019-2020. India's average economic growth
between 1970 and 1980 has been 4.4% which rise by 1% point to 5.4% between the 1990 and
2000”. (page: 220&221)
“இந்த மாதிரியின் பிரதான குறிக்கோள், இந்திய
பொருளாதாரம் உலகில் மிகப்பெரிய பொருளாதாரங்களுடன் ஒப்பிடுவதற்கு உதவும் திறனுடன்
கூடிய உலகில் வேகமாக வளரும் பொருளாதாரத்தை உருவாக்குவது ஆகும். இந்த பொருளாதார
சீர்திருத்தங்கள், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை ஒரு குறிப்பிடத்தக்க
வகையில் முன்னேற்றமடையச்
செய்தது”. (பக். 238)
“சமீபத்திய காலாண்டுகளில் ஏற்ற இறக்கங்கள்
இருந்தபோதிலும், பண மதிப்பு குறைப்பு, பண்டங்கள் மற்றும் பணிகளின் வரி (GST) ஆகிய இரண்டு பிரதான
சீர்திருத்தங்களை கொண்டு வந்தது. 2018 - 19 ம் ஆண்டு 7.3% மற்றும் 2019 - 20ம்
ஆண்டு 7.5% வளர்ச்சி விகிதம் என உலக வங்கி திட்டமிட்டுள்ளது. 1970 மற்றும் 1980
ஆண்டிற்கு இடையில் இந்தியாவின் சராசரி பொருளாதார வளர்ச்சி 4.41% ஆக இருந்தது. இது
1999-2000 ஆண்டுகளுக்கு இடையே 1.0% உயர்ந்து 5.4% ஆக இருந்தது”. (பக். 238)
1990-2000
என்று இருக்க வேண்டும். (ஆங்கில வழியில் சரியாக உள்ளது.) உலக வங்கியின் கணிப்பு,
எதிர்பார்ப்பு கிடக்கட்டும். 2000 க்கு பிறகு பொருளாதார வளர்ச்சிப் புள்ளி
விவரங்கள் கிடைக்கவில்லையா? ஏன்
புள்ளிவிவரங்களை மறைக்க வேண்டும்? உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களுடன்
ஒப்பிட்டால் போதுமா? ராணுவ வலிமை, வல்லரசுக் கனவுபோலவே இதுவும். ‘வேகமாக
வளர்ந்துவரும் 5 வது நாடு’, (பக்.238) என்றால் பிற நான்கு நாடுகளைச் சொன்னால்தானே
ஒப்பிட ஏதுவாகும்? பெரிய பொருளாதாரத்தை மட்டுமே ஒப்பிடவேண்டும் என்கிற வீம்பு ஏன்?
GDP - real growth rate (%)
|
பாடநூல்களுக்கும் நல்ல மொழியாக்கத்திற்கும்
என்றுமே ஆகாது போலும்! தவறாக மொழிபெயர்ப்பார்கள், அல்லது வழக்கொழிந்த யாரும்
பயன்படுத்தாத ஒரு சொல்லை அறிமுகம் செய்வார்கள். ‘demonetisation’ க்கு ‘பண மதிப்பு
குறைப்பு’ என்பது சரியான சொல்லாக்கம் இல்லை. பணத்தின் மதிப்பு அவ்வப்போது மாறி
வருவது வேறுகதை. ‘பண மதிப்பிழப்பு அல்லது பணமதிப்பு நீக்கம்’ என்பதே சரியானது.
ரூ.500, ரூ.1000 பணமதிப்புகள் முற்றாக இழக்கப்பட்டன; குறைக்கப்படவில்லை. ரூ.1000
பணத்தாள் நிறுத்தப்பட்டது, பதிலாக ரூ. 2000 பணத்தாள் வெளியிடப்பட்டது; ரூ.250
பணத்தாள் வெளியாகவில்லை. பிறகெப்படி பண மதிப்பு குறைப்பாகும்? ‘Goods and Service
Tax’ (GST) என்பதற்கு ‘பண்டங்கள் மற்றும்
பணிகளின் வரி’ என்ற மொழிபெயர்ப்பும் யாரும் பயன்படுத்தாத ஒன்று. ‘சரக்கு மற்றும்
சேவை வரி’ என்பது அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் அதிகம் பயன்படுகிறது. ஆனால்
பாடநூல் வல்லுநர்கள் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ‘பிரதான’, ‘சமீபத்திய’ என்றெல்லாம்
பயன்படுத்துவதில் தயக்கமில்லை. ஓரிடத்தில் முதன்மைத் துறை எனும்போது . ‘பிரதானம்’ தேவையற்றதாகி விடுகிறது.
“Stable prices that cover the costs of
sustainable production. Market access that enable buyers to trade with
producers who would otherwise be excluded from market. Partnership (Producers
are involved in decisions their future). The Empowerment of farmers and workers”.
(page: 231)
“Top 10 Largest Multinational
Companies in India 2018”, (page:229) “2018
ல் இந்தியாவின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள்”, (பக்.247) என்னும் பட்டியலில்
பாரத ஸ்டேட் வங்கி, ஒ.என்.ஜி.சி. ஆகிய அரசு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களுடன்
இணைத்துப் பட்டியலிடப்படுகிறது. மேலும் இவை பல்வேறு நாடுகளில் கிளைகள் மற்றும்
முதலீட்டைக் கொண்டுள்ளன. ‘Anand Milk Union Limited”, (AMUL) என அறியப்படும் அமுல் “The Gujarat
Co-operative Milk Marketing Federation Ltd.” (GCMMF) நிர்வகிக்கப்படும்
கூட்டுறவு அமைப்பாகும். இவையனைத்தையும் ஒன்றாக இணைப்பது சரியா?
“Indian Multinational Companies”
(page:230) என்பதை “வெளிநாட்டிலுள்ள இந்தியாவின் பன்னாட்டு நிறுவனங்கள்” (பக்.248)
என்று மொழிபெயர்ப்பது சிக்கலாகாதா? இவற்றில் ஒன்றுகூட இந்திய நிறுவனம் இல்லையே!
‘இந்தியாவின்’ நிறுவனங்கள் மற்றும் ‘இந்தியாவிலுள்ள’ நிறுவனங்கள் என்ற
சொற்பயன்பாட்டின் வேறுபாட்டை உணர்க.
“நிலையான விலையில் நிலையான உற்பத்திச்
செலவுகளைக் கட்டுப்படுத்தலாம். சந்தை அணுகுதல் என்பது சந்தையிலிருந்து
வெளியேற்றப்பட்ட உற்பத்தியாளர்களிடம் வர்த்தகம் செய்ய வாங்குபவர்கள் உதவுதலாகும்.
பங்குதாரர் (உற்பத்தியாளர்கள் தங்கள் எதிர்கால முடிவுகளில் ஈடுபடுதல்) விவசாயிகள்
மற்றும் தொழிலாளர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது”. (பக்.249)
உணவுப்பயிர்களைத் தவிர்த்து பிற வணிகப்பயிர்களை
மட்டும் பயிரிடுதல், மீண்டும் பயன்படுத்த முடியாத மலட்டு விதைகள், அறிவுசார்
சொத்துரிமை (மஞ்சள், வேம்பு, பாசுமதி) போன்றவற்றை மறந்துவிட்டு விவசாயிகளுக்கு
வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் என்ன? அண்மையில் ‘பெப்ஸிகோ’ உருளைக்கிழங்கு
விவாசாயிகள் மீது வழக்குத் தொடர்ந்து, பின்னர் திரும்பப் பெற்றது நினைவிருக்கலாம்.
ஜி7 நாடுகள் கொடிகளுடன் பட்டியலிடப்
படுகின்றன. உலக வர்த்தக அமைப்பில் 164 நாடுகள் இடம்பெற்றுள்ள நிலையில் ஜி7 நாடுகளை
மட்டும் முதன்மைப் படுத்துவதன் நோக்கமென்ன?
தன்னுடன் இணைத்துக் கொண்டதால் ஜி8 நாடுகளிலிருந்து
ரஷ்யா விலக்கப்பட்டு ஜி7 நாடாகக் குறைந்துள்ளது. அமெரிக்கா ரஷ்யாவை மீண்டும்
சேர்க்க வலியுறுத்துகிறது.
இந்தியா, சீனா போன்ற 19 நாடுகளும் ஐரோப்பிய
ஒன்றியமும் இணைந்து செயல்படும் ஜி20 நாடுகளின் கூட்டமைப்பு பொருளியல்
நடவடிக்கைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இப்பாடத்தில் அதை அறிமுகம் செய்வதே
நல்லது.
“Globalization ((உலகமயமாக்கல்) the process
by which business or other organizations develop international influence on
start operating on an international scale” (page:234) என்கிற விளக்கம் தமிழ்
வழியில், “பண்டங்கள் மற்றும் பணிகள் சர்வதேச சந்தையில் எந்த தடையும் ஏற்படாமல் பல்வேறு
பொருளாதாரங்களை ஒருங்கிணைப்பதாகும்”, (பக்.252) என்று மாறுகிறது. “பண்டங்கள்
மற்றும் பணிகள்”, ஏன் இங்கு வந்தது?
உலக வர்த்தக அமைப்பின் அதிகாரப்பூர்வ
இணையத்தளத்தில் (www.wto.org) பணியாளர்கள் 625 என்று சொல்லும்
நிலையில் பாடநூல் 600 என்கிறது.
பொருளியல் முதல்பாடத்தில் (மொத்த உள்நாட்டு உற்பத்தி
மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்) பணிகள் துறையில் ‘தபால் மற்றும் தந்தி’
குறிப்பிடப்படுகிறது. இப்போது தந்தி எங்கிருக்கிறது? அஞ்சல்துறை கட்டண வங்கியாக
(payment bank) மாற்றப்பட்டுள்ளது. இவற்றைக் கண்டுகொள்வது பாடநூலின் பணியில்லையா?
மதிப்புக் கூட்டு முறைக்கு விளக்கப்படம் தேநீர்
என்கிறது. மிகவும் சரி. ஆனால் பாடம் ‘தேனீர்’ என்றே அடம் பிடிக்கிறது.
சர்க்கரைக்குப் பதிலாக தேன் சேர்க்கப்பட்டால் தேனீர் கிடைக்கும். தேயிலை ஏன் டீ
தூளாகிறது? (டீத்தூள் – ஆங்கிலத்தமிழ்?)
“இந்தியாவின் கடந்த இரு சகாப்தங்களாக GDP
யின் நிலையான அதிக வளர்ச்சியால் தனி நபர்
வருமானம் அதிகரித்தும், முழு வறுமை குறைந்தும் காணப்படுகிறது. 12 ஆண்டுகளில்
தனிநபர் வருமானம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இந்திய தனிநபர் வருமானத்தில் நடுத்தர
வருவாய் நாடுகளின் பிரிவில் இடம் பிடித்துள்ளது”, (பக். 236)
‘இரு சகாப்தங்கள்’ என்றால் என்ன? 10 ஐ தசம் என்றால்
10 ஆண்டுகள் ‘தசாப்தம்’. ‘சகாப்தம்’ (Era) வேறு; இதெல்லாம் தமிழல்ல என்பது இங்கு
கவனிக்கவேண்டியது. . இரு பத்தாண்டுகள் அல்லது இருபதாண்டுகள் என்று மொழிபெயர்க்க என்ன தடை? ஆங்கில வடிவத்தைப்
பார்ப்போம். ‘Two decades’ என்பதைத்தான்
‘இரு சகாப்தங்கள்’ என்று தமிழக்கம் செய்கின்றனர். இவர்களது மொழிப்புலமையைக்
கண்டு வியக்காமல் என்ன செய்வது?
“India
has sustained rapid growth of GDP for most of the last two decades leading to
rising per capita incomes and a reduction in absolute poverty. Per capita
income have doubled in 12 years. In Per capita income, placing India just
inside the Middle Income Country category”. (page:219)
மனித
வளக்குறியீட்டை அறிமுகம் செய்த, Mahbub ul Haq - மகபூப் உல் ஹக் அல்லது மகபூப் அல் ஹக் என்று சொல்லாமல் முகஹப் – உல்.
ஹிக் என்று பெயர் மற்றும் உச்சரிப்புக் கொலை செய்வதேன்? (பக். 236)
மொத்த தேசிய மகிழ்ச்சியில் (GNH) ஜிகமே
சிங்கயே வாங்ஹக் (பக்.237) Jigme Singye Wangchuck (page: 219) ஒன்பதாம் வகுப்பில்
எப்படிச் சொல்லப்பட்டது என்பதையும் பார்க்கவேண்டும். “வான்சுக், வாங்சுக் என்று தமிழில் மாற்றி
மாற்றி எழுதுவதைப் போலவே ஆங்கிலத்திலும் கீழ்க்கண்டவாறு எழுவதை மாற்றிக்கொண்டால்
நல்லது. ‘Jigme Khesar Nangyel Wanchuck’ (பக்.131, தமிழ்வழி 9 மூன்றாம் பருவம்),
Jigme Khesar Namgyel Wangchuck (page: 113, ஆங்கில வழி) – எனது முந்தைய பதிவு
ஒன்றிலிருந்து…) ‘சிக்மே சிங்கே வாங்சுக்’ என்று ஓரளவுக்கு எளிமையாக எழுதுவது
குழந்தைகளை மிரட்டாமலிருக்கும்!
தேசிய மகிழ்ச்சிக் குறியீட்டின் களங்கள்
(கூறுகள்) பட்டியலிடப்படுகின்றன. 9 ‘கலங்கள்’ (கொள்கலம், தானிய அளவையின்
கூறு) என்று குறிக்கின்றனர். இதையாவது
விட்டுவிடுவோம்.
“The nine domains of GNH are psychological
well - being, health, time use, education, cultural diversity and resilience,
good governance, community vitality, ecological diversity and resilience, and
living standards”. (page:219)
“உளவியல் நலன், உடல் நலம், நேரம் பயன்பாடு,
கல்வி, கலாச்சார பன்முகத் தன்மை மற்றும் பின்னடைவு, நல்ல ஆட்சி, சமூகத்தின்
உயர்வு, சுற்றுச்சூழல் பன்முகத்தன்மை மற்றும் பின்னடைவு மற்றும் வாழ்க்கைத் தரம்
ஆகியவை GNHpயன் 9 கலங்களாக கருதப்படுகிறது”. (பக்.237)
‘time use’ ஐ ‘நேரம் பயன்பாடு’ என்று
தனித்தனியே தமிழாக்குவது ஏன்? ‘நேரப் பயன்பாடு’ என்றால்தான் பொருத்தமாக இருக்கும்?
“Each domain is composed of subjective
(survey based) and objective indicators. The domains weigh equally but the
indicators within each domain differ by weight”. (page:219) இவ்வரிகள்
தமிழுக்குத் தேவையில்லை போலும்! எனவே வெட்டிவிட்டனர்.
Factors supporting Indian development
“A
fast - growing population of working age. There are 700 million Indians under
the age of 35 and demographic look good for Indian growth in the next twenty
years at least. India is experiencing demographic transition that has increased
the share of the working-age population from 58 percent to 64 percent over the
last two decades.
India has a strong legal system and many
English-language speakers. This has been a key to attracting inward investment
from companies such as those specialising in Information Technology.
Wage costs are low in India has made
strides in recent years in closing some of the productivity gap between her and
other countries at later stages of development.
India's economy has successful developed
highly advanced and attractive clusters of businesses in the technology space.
For example witness the rapid emergence of Bangalore as a hub for global
software businesses. External economies of scale have deepened their competitive
advantages in many related industries”. (page: 219 & 220)
இதன் தமிழ் வடிவம்,
இந்திய முன்னேற்றத்தை ஆதரிக்கும் காரணிகள்
“இந்தியாவில் 35 வயதிற்கு உட்பட்ட
உழைக்கும் வயதில் வேகமாக வளரும் மக்கள். தொகையில் 700 மில்லியன் பேர் உள்ளனர்.
அடுத்த இருபது ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிக்கான மக்கள் தொகை குறைவாக உள்ளது.
இந்தியாவில் மக்கள் தொகை மாற்றத்தில், கடந்த இரண்டு சகாப்த்தங்களாக உழைக்கும் வயது
மக்களின் பங்கு 58% லிருந்து 64% ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா கடுமையான சட்ட நடைமுறையையும்,
அதிகமான ஆங்கில மொழி பேசுபவர்களையும் கொண்டுள்ளது. மேலும், தகவல்
தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் நிறுவனங்களிடமிருந்து
உள்நோக்கி ஈர்க்கிறது.
இந்தியாவில் கூலிச்செலவு குறைவாக
இருப்பதால், சமீப ஆண்டுகளில் இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு இடையேயான உற்பத்தி
இடைவெளி சிலவற்றில் வளர்ச்சியடைந்த நாடுகளை விட இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் தொழில்நுட்ப
வளர்ச்சியில் மிகவும் முன்னேறிய மற்றும் கவர்ச்சிகரமான வெற்றியை உருவாக்கியுள்ளது.
எடுத்துக்காட்டாக, உலகளாவிய மென்பொருள் வணிகங்களுக்கான ஒரு மையமாக பெங்களூரின்
விரைவான தோற்றம் சாட்சியாக உள்ளது”. (பக்.236)
இங்கும்
‘சகாப்தம்’? (the last two decades) ஓரிடத்தில் ‘அடுத்த இருபது ஆண்டுகளில்’ (the
next twenty years) எனக் குழப்புவதும் குழம்புவதும் தொடர்கிறது. இந்தியாவில்
கூலிச்செலவு குறைவாக இருப்பது நமக்குப் பெருமையா? இந்திய மக்களுக்கு நியாயமான
கூலியைப் பெற்றுத் தருவது அரசுகளின் பணியில்லையா? இந்தியாவில் சூழலியல் தொடர்பான சட்டங்களைச்
சரியாக நடைமுறைப்படுத்துவதில்லை, குறைந்த கூலிக்கு ஆட்கள் கிடைப்பது போன்ற
காரணங்களால் இந்திய பன்னாட்டு நிறுவனங்களின் குப்பைக்காடாக மாறிவருகிறது. இதைச்
சரிசெய்யாத பொருளாதார வளர்ச்சி வெறும் வீக்கமே.
WTO
வின் குறிக்கோள்கள்கள் பின்வருமாறு பட்டியலிடப்படுகின்றன.
- அயல்நாட்டு வணிகத்திற்கான விதிகள் அமைத்தல் மற்றும் செயல்படுத்தல்.
- வர்த்தக தாராளமயமாக்கலுடனான பேச்சுவார்த்தை மற்றும் கண்காணிப்பதற்கான ஒரு மன்றத்தை வழங்குதல்.
- வர்த்தக தகராறுகளைக் கையாளுதல்.
- நிலையான முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் ஒன்றிணைந்து அறிமுகம் செய்தல்.
- உலக வர்த்தகத்தில் வளர்ந்துவரும் நாடுகளின் ஒரு சிறந்த வளர்ச்சிக்கு பாதுகாப்பாக இருத்தல்.
- முடிவெடுக்கும் செயல்களின் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல். முழு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தும் மற்றும் பயனுள்ள தேவைகளை அதிகரித்தல். (பக். 251)
- To resolve trade disputes.
- Introduction the sustainable development and environment can go together”. (page:232) ஆகிய இரு குறிக்கோள்கள் ஆங்கில வழியில் இரண்டு தடவைகள் அச்சாகியுள்ளது.
WTO வின்
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கீழ்க்கண்ட தலைப்பில் சொல்லப்பட்டவற்றை
விளக்கியுள்ளார்கள் போலும்!
- Non-discrimination
- More open
- Predictable and transparent
- More competitive
- More beneficial for less developed countries
- Protect the environment
WTO வின் இணையதளம் கீழ்க்கண்ட குறிக்கோள்களையும் பட்டியலிடுகிறது. “... encourage good governance” என்பது நமக்கு அதிர்ச்சியளிப்பது. இதிலிருந்து நமக்கு புலனாவது வணிகம் மட்டுமே இதன் நோக்கமல்ல. தேவைப்பட்டால் தங்களுக்குச் சாதகமான அரசுகளை உருவாக்குவார்கள். இது ஆப்கானிஸ்தானில் ரஷ்யா, அமெரிக்கா செய்தது போல், ஈராக்கில் அமெரிக்கா செய்ததுபோல் இருக்கும். இந்தியா போன்ற நாடுகளின் தேர்தல்களில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமான அரசுகள் அமைய பரப்புரை செய்கின்றன; கட்சிகளுக்கு நன்கொடையாக பணத்தை வாரி இறைக்கின்றன.
1 ... cut living costs and raise living standards
2 ... settle disputes and reduce trade tensions
3 ... stimulate economic growth and employment
4 ... cut the cost of doing business internationally
5 ... encourage good governance
6 ... help countries develop
7 ... give the weak a stronger voice
8 ... support the environment and health
9 ... contribute to peace and stability
10 ...be effective without hitting the headlines
“... support
the environment and health” என்பதெல்லாம்
வெற்று முழக்கமே! பாடம் “சுற்றுச்சூழல் குறித்த தரங்களும் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ள
நிலை”, கடும் சூழலியல் சீரழிவு ஏற்படுவது குறிப்பால் உணர்த்துகிறது. ஆனால் எதிர்கொள்ளும்
அபாயம் பெரியது. சமத்துவமின்மை, இயற்கை வளச்சுரண்டல், துரித உணவுப்பயன்பாட்டால் உடல்நலம்
கெடுதல் போன்றவையும் சொல்லப்படுகின்றன. ஆனால் உலகமய வளர்ச்சியின் பின்னணியில் சூழலியல்
கேடுகள் பெருமளவில் உண்டாகி மனித குலத்தின் அழிவை நோக்கி பயணிக்கிறது என்பதே உண்மை.
(இன்னும் வரும்…)