வெள்ளி, மார்ச் 31, 2023

சீனிவாச ராமாநுஜம் நூல்கள்

 

சீனிவாச ராமாநுஜம்  நூல்கள்

(புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 018)

மு.சிவகுருநாதன்


 

            தோழர் ராமாநுஜம் தமிழிலக்கிய உலகில் மிகவும் அறிமுகமான எழுத்தாளர்; மொழி பெயர்ப்பாளர், நாடகவியலாளர். ஆடுகளம்நவீன நாடகக்குழுவில் இயங்கியவர். ஆறாவது வார்டு, மழை, காட்டு நகரம், நாங்கள் நியாயவாதிகள், நிரபராதிகளின் காலம் போன்ற நாடகங்களை இயக்கி நடித்தவர்.

        காந்தியின் உடலரசியல், தற்கொலைகளைக் கொண்டாடுவோம், சந்நியாசமும் தீண்டாமையும், இந்துமதம்: ஒரு விசாரணை ஆகிய நூல்களின் ஆசிரியர். மண்ட்டோ படைப்புகள், அங்கிள் சாமுக்கு (மண்ட்டோ கடிதங்கள்), மௌனவதம் (ஆர்துரோ வான் வாகனோ), தீப்பற்றிய பாதங்கள் (டி.ஆர்.நாகராஜ்), இரண்டு தந்தையர் (சுந்தர் சருக்கையின் மூன்று நாடகங்கள்), விரிசல் கண்ணாடி (கோபால் குரு, சந்தர் சருக்கை ஆகியோரின் 8 கட்டுரைகள்) ஆகிய நூல்களை மொழிபெயர்த்தவர். சந்நியாசமும் தீண்டாமையும் நூலுக்குப் பிறகு சீனிவாச ராமாநுஜம் என அறியப்படுகிறார்.

       சந்நியாசமும் தீண்டாமையும்நூலின் விரிவு  ‘Renunciation and Untouchablity: The Notional and the Empirical in the Caste Order’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் (சர்வதேசப் பதிப்பு) வெளியானது. (விலை: ₹10,587, வெளியீடு: Routledge India) தற்போதைய வெளியீடு (March 31, 2021) ₹995க்கு கிடைக்கிறது.

       இவர் அதிகம் எழுதுவதில்லை என்றாலும் மிகுந்த உழைப்பு எடுத்துக்கொண்டு, நுட்பமாகவும் செறிவுடனும் எழுதக்கூடியவர். கடின உழைப்பு, திருத்தம், செம்மையாக்கத்திற்கு பின்னே இவரது படைப்புகள் பொதுவெளிக்கு வருகிறது. தற்போது இவது நூல்கள் சிறப்பாக வகையில் ‘எதிர் வெளியீட்டில்’  கிடைக்கிறது. 

 

எதிர் வெளியீடுகள்:

 

1.       சீனிவாச ராமாநுஜம் கட்டுரைகள்  ஒரு தோற்றப்பாட்டியல் வாசிப்பு  700

2.       விரிசல் கண்ணாடி   450

3.       இந்து மதம்: ஒரு விசாரணை  ஆர்எஸ்எஸ் - பார்ப்பனர் சாதிகள்   160

4.       மண்ட்டோ படைப்புகள் – (மொ)  (எதிர் வெளியீடு)   900

5.       தீப்பற்றிய பாதங்கள் (முழுமையாகத் திருத்தப்பட்ட பதிப்பு)  தலித் இயக்கம் | பண்பாட்டு நினைவு | அரசியல் வன்முறை   550

6.       சிறுவர்களுக்கான தத்துவம்  - சிந்தித்தல், படித்தல், எழுதுதல் சுந்தர் சருக்கை (மொ) த. ராஜன், சீனிவாச ராமாநுஜம் ₹300

வெளியீடு:

எதிர் வெளியீடு,

96, நீயூ ஸ்கீம் ரோடு,

பொள்ளாச்சி – 642002.

பேச: +91 4259 226012

Mobile: 98948 75084 / 99425 11302

மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com

இணையம்:  https://ethirveliyeedu.com/

 

பரிசல் வெளியீடுகள்:

1.       சந்நியாசமும் தீண்டாமையும்  சமூக வகைபாடுகள்,சமூகக் குழுமங்கள் பற்றி சில குறிப்புகள்   200

2.       இரண்டு தந்தையர்  நாடகங்கள் சருக்கை (மொ)   200 

வெளியீடு:

பரிசல் புத்தக நிலையம்,

216 முதல் தளம்,  திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,

திருவல்லிக்கேணி, சென்னை – 600005.

தொடர்புக்கு:  9382853646

மின்னஞ்சல்: parisalbooks@gmail.com

பாரதி புத்தகாலய  வெளியீடு:

1.       அவமானம்  - மண்ட்டோ படைப்புகளின்  சிறு தொகுப்பு  90

 

சில நூல் அறிமுகக் கட்டுரைகளின் இணைப்புகள்:

 

பார்ப்பனர்களைப்  பாதிக்கப்பட்டோராக மாற்றும் தத்துவார்த்தச் சொல்லாடல்கள்

https://panmai.in/2021/06/14/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/

 

(எழுத்தாள ஆளுமைகள் நூல்களின்பட்டியல் தொடரும்…)

வியாழன், மார்ச் 30, 2023

சிவகுமார் முத்தய்யா  நூல்கள்

சிவகுமார் முத்தய்யா  நூல்கள்

(புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 017)

மு.சிவகுருநாதன்


 

      தோழர் சிவகுமார் முத்தய்யா திருவாரூர் தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர். ஒடுக்கப்பட்ட சமூகப் பின்புலத்திலிருந்து வந்த இவர் இன்று வளர்ந்துவரும் எழுத்தாளர். தமது எழுத்துகளில் அடித்தட்டு, விளிம்புநிலை மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்து வருகிறார்.

         சிவகுமார் முத்தய்யா காட்சி, அச்சு ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். இவர் தற்போது நாளிதழ் ஒன்றின் செய்தியாளராகப் பணிபுரிகிறார். கதை, கவிதை தவிர அரசியல், சமூகம், கலை, இலக்கியம், பண்பாடு, கல்வி குறித்த பல்வேறு கட்டுரைகளையும் எழுதியுள்ளார். ஞாபக குறிப்புகள்’ இவரது கட்டுரைத் தொகுப்பாகும். “காவிரிப் படுகையே எனது கதைக்களம், விவசாயிகள் வேதனையில் வாடும் இன்றைய நிலையில் நான் வேறெதை எழுத முடியும்என்று சொல்வதன் வழி சிவகுமார் முத்தய்யா சமகால அரசியலை பேசுபொருளாக்குகிறார்.

         இவரது முதல் தொகுப்பான  கிளி வரும் போது…’ ஐ முற்றம் டிசம்பர் 2008 இல் வெளியிட்டுள்ளது. (விற்பனை உரிமை: நிவேதிதா புத்தகப்பூங்கா). செறவிகளின் வருகைஎன்ற இரண்டாவது தொகுப்பை ஜனவரி 2014 இல் சோழன் படைப்பகம் வெளியிட்டிருக்கிறது. (விற்பனை உரிமை: தோழமை வெளியீடு).

     இவரது முதல் நாவலான ‘குரவை’ விளிம்புநிலை நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வை ஆவணப்படுத்துகிறது.  இந்நூலையும் அவரது சிறுகதை மற்றும் குறுநாவல் தொகுப்புகளையும் ‘யாவரும் பப்ளிஷர்ஸ்’ வெளியிட்டுள்ளது.

 

சிவகுமார் முத்தய்யா  படைப்புகள்:

1.       கிளி வரும்போதுசிறுகதைத் தொகுப்பு  (முற்றம் வெளியீடு)

2.       ஆற்றோர கிராமம்குறுநாவல்கள் 

3.       செறவிகளின் வருகைசிறுகதைத் தொகுப்பு  (சோழன் படைப்பகம்)

4.       செங்குருதியில் உறங்கும் இசைசிறுகதைத் தொகுப்பு (சாந்தி பப்ளிகேஷன்ஸ்)

5.       ஞாபக குறிப்புகள்கட்டுரைகள்

 

யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடுகள்:

 

1.       இளையராஜாவின் காதலிகள் சிறுகதைத் தொகுப்பு ₹160

2.       தூண்டில் முள் வளைவுகுறுநாவல் தொகுப்பு  ₹290

3.       குரவைநாவல்  ₹290

வெளியீடு:    

யாவரும் பப்ளிஷர்ஸ், 

24, கடை எண்: B,   S.G.P. காம்ப்ளக்ஸ்,

 தண்டேஸ்வரம் பேருந்து நிறுத்தம்,

பாரதியார் பூங்கா எதிரில்,

வேளச்சேரி முதன்மைச்சாலை,

வேளச்சேரி,  

சென்னை – 610042.

 

அலைபேசி: 9042461472  / 9841643380

மின்னஞ்சல்:   editor@yaavarum.com   இணையம்:   www.yaavarum.com

 

சில நூல் அறிமுகக் கட்டுரைகளின் இணைப்புகள்:

ஜெயகாந்தன் விருது பெறும் சிவகுமார் முத்தய்யா 

 https://musivagurunathan.blogspot.com/2015/06/blog-post_23.html

 இருண்மை வெளியில் அல்லாடும் கலையும் கலைஞர்களும்

  https://panmai.in/2023/03/12/%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/

     

(எழுத்தாள ஆளுமைகள் நூல்களின்பட்டியல் தொடரும்…)

சி.எம்.முத்து நூல்கள்

 

சி.எம்.முத்து  நூல்கள்

(புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 016)

மு.சிவகுருநாதன்

 


          தஞ்சாவூர் அருகிலுள்ள இடையிருப்பில்  சந்திரஹாசன்கமலாம்பாள் தம்பதிக்குப் பிறந்த மாரிமுத்து தனது பெயரை சி.எம்.முத்து என சுருக்கி வைத்துக் கொண்டார். வெள்ளாந்தியான இந்த கிராமத்து மனிதர் நாட்டுப்பாடல்களை அழகாகப் பாடக்கூடியவர். 

        மேலதஞ்சைப் பகுதியில் வாழ்வியலை அவர்களது வட்டாரத் தன்மையுடன் படைப்பில் கொண்டு வருபவர். பிற வட்டார வழக்கிற்கு உள்ள ஏற்புடைமை தஞ்சைப் பகுதிக்கு இல்லை. கீழத்தஞ்சையில் சோலை சுந்தரபெருமாளுக்கு நிகழ்ந்ததுதான் மேலத்தஞ்சையில் சி.எம்.முத்துவிற்கு ஏற்பட்டது. இவர்களது எழுத்தில் காணப்படும் இனவரைவியல் தன்மையையும் புறக்கணிக்க இயலாது.

       “ தி.ஜா. தஞ்சை மண் வாசனையுடன் கதைகளைப் படைத்தவர்”, என்று 9 ஆம் வகுப்பு தமிழ்ப்பாடநூல் இன்றும் சொல்லித் தருகிறது. சி.எம்.முத்து, சோலை சுந்தரபெருமாள் போன்றோர் எழுத்துகளில் வெளிப்படுவது எந்த மண்ணின் வாசனை என்ற கேள்வி நியாயமானது.

         கதா விருது, இலக்கியச் சிந்தனை விருது ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார். ஆனால் மைய நீரோட்ட இலக்கிய உலகில் புறக்கணிக்கப்படும் மனிதராக இருக்கிறார். அவருடைய எழுத்திற்கான பெரிய அங்கீகாரம் ஏதுமில்லை. அதைப்பற்றிய கவலையில்லாமல் தமது எழுத்துப்பணியை மேற்கொண்டு வருகிறார்.  இவரது படைப்புகளில் சில கீழே தரப்படுகிறது.

நாவல்கள்:

1.       நெஞ்சின் நடுவே (1982)

2.       கறிச்சோறு  (1989)

3.       அப்பா என்றொரு மனிதர் (2000)

4.       பொறுப்பு  (2001)

5.       வேரடி மண்  (2003)

6.       ஐந்து பெண்மக்களும் அக்ரஹாரத்து வீடும் (2010)

7.       மிராசு (2018)

சிறுகதைகள்:

1.       ஏழுமுனிக்கும் இளைய முனி

2.       மழை

3.       அந்திமம்

4.       இவர்களும் ஜட்கா வண்டியும் (2004)

5.       சி.எம்.முத்து சிறுகதைகள்

         2020 இல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தராக  கோ.பாலசுப்பிரமணியன் அவர்கள் இருந்த காலகட்டத்தில் கவிஞர் ரவிசுப்பிரமணியன், எழுத்தாளர்கள் பாமா, சி.எம்.முத்து, கீரனூர் ஜாகீர் ராஜா, ஸ்ரீதர கணேசன் ஆகிய ஐந்து பேரும் வருகை தரு இலக்கிய ஆளுமையாகப் பணிநியமனம் செய்யப்பட்டனர்


 

         இவரது சில நூல்கள் மட்டுமே தற்போது கிடைக்கின்றன. எஞ்சிய நூல்கள் குறிப்பாக அறிவுப் பதிப்பகம் வெளியீடுகள் அச்சில் இல்லை.  கிடைக்கும் சில நூல்களின் பட்டியல்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு:

1.       சி.எம்.முத்துவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ₹565

அனன்யா வெளியீடுகள்:

1.       அப்பா என்றொரு மனிதர்  400

2.       கறிச்சோறு  155

3.       மிராசு  ₹780

 

அறிவுப் பதிப்பகம் வெளியீடு:

1.       மழை சிறுகதைகள்  50

 

 

(எழுத்தாள ஆளுமைகள் நூல்களின்பட்டியல் தொடரும்…)