சு.தமிழ்ச்செல்வி நூல்கள்
(புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 026)
மு.சிவகுருநாதன்
திருவாரூர் மாவட்டத்தின் தென்கோடியில் அலையாத்திக் காடுகளை ஒட்டிய புதிய முத்துப்பேட்டை வட்டத்தைச் சேர்ந்த கற்பகநாதர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி. அரசுப்பள்ளி ஆசிரியரான இவர் ‘களம் புதிது’ கவிஞர் கரிகாலனின் இணையர். தற்போது கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வசிக்கிறார்.
இவர் தமது 30 வயதிற்கு மேல் எழுத்துலகில் நுழைந்தார். தொடர்ந்த பல நாவல்களையும் சில சிறுகதைகளையும் எழுதி பலரது கவனிப்பைப் பெற்றார். இவரது எழுத்துகளில் பெண்களின் தீரமிக்க வாழ்வு பதிவாகிறது. கடலோரக் கிராமங்களிலுள்ள பெண்களின் வாழ்வியல், உப்பளத் தொழிலாளர்கள், கழிமுகப் பகுதி மீனவர்கள், கடலோடிகள், கீதாரிகள் போன்றோரது வாழ்க்கைப்பாடுகளை தனது எழுத்தில் வடித்துள்ளார்.
அளம், மாணிக்கம், கற்றாழை, கீதாரி, கண்ணகி, சிலாவம், பொன்னாச்சரம், தொப்புள்கொடி போன்றவை இவரது நாவலாகும். சாமுண்டி, சு.தமிழ்ச்செல்வி சிறுகதைகள் (உயிர் எழுத்து) என்ற பெயரில் இரு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாயின. சாமுண்டி தற்போது அச்சில் இல்லை.
சு.தமிழ்ச்செல்வி நூல்கள் பட்டியல்:
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடுகள்:
நாவல்கள்:
1. அளம் ₹220
2. மாணிக்கம் ₹315
3. ஆறுகாட்டுத் துறை ₹240
4. கீதாரி ₹170
5. கற்றாழை ₹335
6. கண்ணகி ₹230
7. சிலாவம் ₹325
8. பொன்னாச்சரம் ₹240
வெளியீடு:
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்,
41, பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்,
சென்னை – 600098.
பேச: 044-26258410, 26251968, 48601884
மின்னஞ்சல்: info@ncbh.in
இணையம்: www.ncbhpublisher.in
டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு:
1. தொப்புள்கொடி ₹250
Discovery Book Palace (P) Ltd,
No.6, Mahaveer Complex, Munusamy Salai, West K.K. Nagar,
(Near Pondicherry Guest House), Chennai - 600078.
மின்னஞ்சல்: discoverybookpalace@gmail.com
இணையம்: https://discoverybookpalace.com/
அலைபேசி: 87545 07070 , 99404 46650
சிறுகதைத் தொகுப்புகள்:
1. சாமுண்டி (2006)
2. சு.தமிழ்ச்செல்வி சிறுகதைகள் (2010) (உயிர் எழுத்து வெளியீடு)
(எழுத்தாள ஆளுமைகள் – நூல்களின்பட்டியல் – தொடரும்…)
1 கருத்து:
புதிய நூலாசிரியர்களை அறிமுகம் செய்தல் மற்றும் ஏற்கனவே பிரபலமான நூலாசிரியர்கள் குறித்த புதிய செய்திகளை வழங்குதல் என அருமையான பணியை மேற்கொண்டுள்ளீர்கள்.... பாராட்டுகள்,,,
கருத்துரையிடுக