சமச்சீர்க்கல்வியை ஒத்திவைக்கும் தமிழக அரசின் முயற்சிக்கு
எதிராக கண்டனக்கூட்டம். 05.07.2011 அன்று செவ்வாய், மாலை 6 மணிக்கு சென்னை எழும்பூர் மியூசியம் அருகில் உள்ள ICSA அரங்கில் சமச்சீர்க்கல்வியை ஒத்திவைக்கும் தமிழக அரசின் முயற்சியைக் கண்டித்து கல்வியாளர் களின் தலைமையிலான அரங்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்
டாக்டர். வே. வசந்தி தேவி,
பேரா. அ. மார்க்ஸ்,
பேரா. ப. சிவக்குமார்,
எழுத்தாளர் பா. செயப்பிரகாசம்,
கவிஞர். இன்குலாப்,
திரு. வழக்குரைஞர் ரஜினி,
திரு.இனியன் சம்பத்,
முனைவர். அரணமுறுவல்,
புலவர். கி. த. பச்சையப்பன்,
பேரா. மு. திருமாவளவன்,
திரு. தமிழ்நேயன்,எழுத்தாளர் ராமாநுஜம்,
திரு. தடா ரஹீம்
உள்ளிட்ட கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். சமச்சீர்க் கல்விக்கான கல்வியாளர்கள் குழுவின் சார்பில் இந்த கண்டனக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் பேசிய அனைவரும் தமிழக அரசு சமச்சீர் கல்வியை நிறுத்தி வைத்து தனியார் பள்ளி முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் போக்கை கண்டித்துப் பேசினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக