ஞாயிறு, ஜூலை 17, 2011

திருவாரூரில் சமச்சீர்கல்வி கருத்தரங்கம் - மு.சிவகுருநாதன்

திருவாரூரில் சமச்சீர்கல்வி கருத்தரங்கம்     - மு.சிவகுருநாதன்

   


     அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம் (தமிழ்நாடு) 16.07.2011 சனி மாலை 6 மணிக்கு திருவாரூர்  நேதாஜி சாலை காமராஜர் திருமண மண்டபத்தில் சமச்சீர்கல்வி-ஒரு பார்வை என்றொரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.இவ்வரங்கில் பேரா.அ.மார்க்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
        ஜி 8 போன்ற வளர்ந்த,மற்றும் ஏனைய வளரும் நாடுகளில் பொதுப்பள்ளி முறை அமலில் உள்ளதை சுட்டிக்காட்டிப் பேசிய அ.மார்க்ஸ், சமச்சீர்கல்வி என்பது வெறும் பாடநூற்களை பொறுத்து அமைவதில்லை என்பதை தகுந்த உதாரணங்களுடன் விளக்கிப்பேசினார்.
          கல்வி உரிமைச் சட்டம் குறித்துப் பேசியதுடன் இதில் அரசுகளின்  அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்தினார்.சமச்சீர்கல்வி பாடநூற்களில் குறைகள் இருப்பது குறித்துப் பேசிய அவர் குறைகள் இல்லாத ஒரு பாடத்திட்டத்தை எந்த ஒரு அரசும் தயாரித்துவிட வாய்ப்பில்லை என்பதை தெளிவுபடுத்தினர்.
         வெகு சொற்பமான உதாரணங்களைத்தவிர ஆசிரியர் இயக்கங்கள், ஆசிரியர்கள் சமச்சீர்கல்வி குறித்து சிந்திப்பதில்லை என்று சொன்ன அ.மார்க்ஸ் சமூக அக்கறை கொண்ட அனைவரும் பொதுப்பள்ளி முறையின் அவசியத்தை வலியுறுத்தவேண்டும் என்றும் கூறினார்.

இந்நிகழ்வின் சில காட்சிகளை கீழே காணலாம்.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக