புதன், ஜூலை 06, 2011

சமச்சீர் கல்வி குழு அறிக்கையை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யவேண்டும் - ராமதாஸ்

சமச்சீர் கல்வி குழு அறிக்கையை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யவேண்டும் - ராமதாஸ்


        பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் " தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து பரிந்துரை செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட 9 பேர் கொண்ட குழு, சமச்சீர் கல்வியை நடப்பாண்டில் நடைமுறைப்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. இதிலுள்ள உறுப்பினர்களை தேர்வு செய்தது தமிழக அரசுதான். எனவே தமிழக அரசு நினைத்ததை இக்குழு செய்து முடித்திருக்கிறது.

         பத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகளையும், அறிக்கைகளையும் ஆராய்ந்துதான் இந்த முடிவுக்கு வந்ததாக வல்லுநர் குழு அதன் அறிக்கையில் கூறியுள்ளது,ஆனால் அதன் பட்டியலில் சமச்சீர் கல்வி தொடர்பான முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தாக்கல் செய்த அறிக்கை இடம் பெறவில்லை,எனவே அவற்றை சென்னை உயர்நீதிமன்றம் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.


நன்றி:-அந்திமழை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக