எதையும் கேட்போம்!
எப்படியும் கேட்போம்!!
மு.சிவகுருநாதன்
10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பொதுத்தேர்வில் இவ்வாண்டு (2019-2020)
முதல் "எதையும் கேட்போம்! எப்படியும் கேட்போம்!!", என்ற கொள்கை முடிவு
எடுக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே!
அதற்கு முன்னோட்டமாக
திருப்புதல் தேர்வுகளில் படத்தில் இருக்கும் தமிழ்நாடு நிலவரைபடம்
வழங்கப்பட்டுள்ளது. இதில் அரபிக்கடல், சோழமண்டலக் கடற்கரை போன்றவற்றைக்
குறிக்க வேண்டும்.
அந்தக்காலத்திலிருந்தே "இந்தியப் படத்தில்
குறிக்கவும்", என்ற வினாவில் இலங்கையைக் (ஸ்ரீலங்கா) குறிக்கச்
சொல்லிக் கேட்பதுண்டு. என்னே! அகண்ட பாரதக் கனவு!!
அதைப்போலவே
இங்கும் தமிழ்நாடு படத்திலும் கூட ஸ்ரீலங்கா, அந்தமான் நிகோபர் தீவுகள்,
லட்சத் தீவுகள், மாலத்தீவுகள், மினிக்காய் தீவு, மலபார் கடற்கரை
போன்றவற்றையும் குறிக்கச் சொல்லிக் கேட்கலாம் என்று பரிந்துரைக்கிறேன்.
"எதையும் கேட்போம்! எப்படியும் கேட்போம்!!", என்ற கொள்கை முடிவுக்கு இது மேலும் வலுவூட்டும் என்பதையும் நினைவுபடுத்துகிறேன். இம்மாதிரியான எளிய நிலவரைபட வினாவை மிக எளிதாகக் கையாண்டு, அனைவரும்
தேர்ச்சியடைந்து தொலைத்துவிடுவதால் வடிகட்ட (Screening) இயலாமற்போவது
கல்வித்துறைக்கே பேரழிவாக இருப்பதனால், இனி வருங்காலத்தில் நிலவரைபடத்தைத்
தாங்களே வரைந்து இம்மாதிரி 'குண்டக்க... மண்டக்க...' என்று கேட்கப்படும்
இடங்களைக் குறிக்க வழிவகுத்து, அதற்குரிய கொள்கை முடிவுகளை உடனே எடுக்க
வேண்டுமாய் வேண்டுகிறோம்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக