மகாநகர் தொலைபேசி நிறுவனம் 'மகன் அகர்' தொலைபேசி நிறுவனமான
கதை!
(தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)
மு.சிவகுருநாதன்
(2019 - 2020 ஆம்
கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 55)
7,
8 வகுப்புகளின் மூன்றாம் பருவப்
பாடநூல்கள் ஒரு பார்வை:
ஒன்று:
மகாநகர் தொலைபேசி நிறுவனம்
(MTNL) ‘மகன் அகர் தொலைபேசி நிறுவன’மான கதை!
எட்டாம் வகுப்பு மூன்றாம் பருவ சமூக
அறிவியல் பொருளியல் பகுதியில் ‘பொது மற்றும் தனியார் துறைகள்’ என்றொரு பாடம்
உள்ளது. அப்பாடத்தில் மகாரத்னா, நவரத்னா, மினிரத்னா பொதுத்துறை நிறுவனங்கள்
பட்டியலிடப்படுகின்றன.
Maharatna industries.
• National Thermal Power Corporation
(NTPC)
• Oil and Natural Gas Commission
(ONGC)
• Steel Authority of India Limited
(SAIL)
• Bharat Heavy Electricals Limited
(BHEL)
• Indian Oil Corporation Limited
(IOCL)
• Coal India Limited (CIL)
• Gas Authority of India Limited
(GAIL)
• Bharat Petroleum Corporation
Limited (BPCL)
Navratna Industries
• Bharat Heavy Electronics Limited
(BHEL)
• Container Corporation of India
(CONCOR)
• Engineers India Limited (EIL)
• Hindustan India Limited (HAL)
• Hindustan Petroleum Corporation
Ltd. (HPCL)
• Mahan agar Telephone Nigam Ltd
(MTNL)
• National Aluminum company (NALCO)
• Neyveli Lignite Corporation India
Ltd. (NLCIL)
• Oil India Ltd. (OIL)
• Shipping corporation of India
(SCI) (Page: 203)
BSNL இன் துணை நிறுவனமான MTNL ‘Mahanagar Telephone Nigam Ltd’ மகாநகர்
தொலைபேசி நிறுவனம் ஆகும். இதை மெகாநகர் அல்லது பெருநகர் என்றாவது சொல்லட்டும்;
எப்படி ‘மகன் அகர்’ ஆனது?
மேற்கண்ட பட்டியலில் ‘Mahanagar Telephone Nigam Ltd (MTNL)’ என்பது Mahan agar Telephone Nigam Ltd (MTNL) என்று பிரித்து எழுதப்படுகிறது. அதை ‘மகன் அகர் தொலைப்பேசி நிறுவனம் (MTNL)’ என்று ஒலிபெயர்க்கும் அவலம் நிகழ்கிறது. மத்திய அரசால் புறந்தள்ளப்பட்ட இந்நிறுவனத்திற்கு இப்படியும் ஒரு நிலை!
மேற்கண்ட பட்டியலில் ‘Mahanagar Telephone Nigam Ltd (MTNL)’ என்பது Mahan agar Telephone Nigam Ltd (MTNL) என்று பிரித்து எழுதப்படுகிறது. அதை ‘மகன் அகர் தொலைப்பேசி நிறுவனம் (MTNL)’ என்று ஒலிபெயர்க்கும் அவலம் நிகழ்கிறது. மத்திய அரசால் புறந்தள்ளப்பட்ட இந்நிறுவனத்திற்கு இப்படியும் ஒரு நிலை!
தில்லி, நவிமும்பை போன்ற பெரு
நகரங்களுக்குத் தொலைத் தொடர்பு சேவையை வழங்கும் நிறுவனமாகும். இதன் துணை நிறுவனமான
MTML மொரீசியஸ் நாட்டுக்குச் சேவை வழங்குகிறது. BSNL, ஏர் இந்தியா போன்று MTNL –ம் சிதைக்கப்படும் பொதுத்துறை
நிறுவனங்களின் பட்டியலில் சேர்ந்துள்ளது.
இரண்டு:
BHEL –ம் BEL -ம் ஒன்றான வரலாறு!
ஆங்கில வழிப் பாடநூலில் இந்தப் பட்டியலில்
Bharat Heavy Electricals Limited
(BHEL)
Bharat Heavy Electronics Limited
(BHEL)
என்று இடம்பெறுகிறது. ஆனால்
தமிழ்வழியில் பின்வருமாறு இடம்பெறுகிறது.
பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியல்
மகாரத்னா தொழில்கள் (Maharatna
Industries)
• தேசிய அனல்மின் கழகம் (NTPC)
• எண்ணெய் மறறும் இயற்கை எரிவாயு ஆணையம் (ONGC)
• இந்திய இரும்பு ஆலை ஆணையம் (SAIL)
• பாரத மிகு மின் நிறுவனம் (BHEL)
• இந்திய எண்ணெய் நிறுவனம் (IOCL)
• இந்திய நிலக்கரி நிறுவனம் (CIL)
• ஆயில் (இந்தியா) நிறுவனம் (GAIL)
• பாரத பெட்ரோலிய நிறுவனம் (BPCL)
நவரத்னா தொழில்கள் (Navratna
Industries)
- பாரத மிகு மின் நிறுவனம் (BHEL)
- இந்திய கொள்கலன் நிறுவனம் (CONCOR)
- இந்திய பொறியாளர்கள் நிறுவனம் (EIL)
- இந்துஸ்தான் இந்தியா நிறுவனம் (HlL)
- இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் (HPCL)
- மகன் அகர் தொலைப்பேசி நிறுவனம் (MTNL)
- தேசிய அலுமினியம் கம்பெனி (NALCO)
- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLCIL)
- இந்திய ஆயில் எண்ணெய் நிறுவனம் (OIL)
- இந்திய கப்பல் நிறுவனம் (SCI) (பக். 243&244)
.
‘Bharat Heavy Electricals Limited (BHEL)’ என்பதே
‘பாரத மிகு மின் நிறுவனம் (BHEL)’ ஆகும். Bharat Electronics Limited
(BHEL) என்பது ‘பாரத மின்னணுவியல் நிறுவனம் (BEL)’ என்பதாகும்.
நவரத்னாவில் இடம் பெற வேண்டியது பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்
(Bharat Electronics Limited - BEL) ஆகும். இதை BEL என்று சொல்கிறோம்.
தமிழ் வழியில் மகாரத்னா, நவரத்னா
என இரண்டிலும் ‘பாரத மிகு மின் நிறுவனம் (BHEL)’ இடம்பெறுகிறது. (பக்.243&244)
இதிலும் இரட்டை வேடம் போலும்! Electronics
என்பது தவறு; இது மின்னணுவியலைக் குறிக்கும். Electricals – மின்னியல் என்றே இருக்க வேண்டும்.
மின்னியல் – மின்னணுவியல் குழப்பம் நமது பாடமெழுதிகளுக்கு என்று தீராது போலும்
Bharat Heavy Electricals Limited (BHEL) நிறுவனம் போபால், ஹரித்வார், ஜான்சி,
ஹைதராபாத், திருச்சிராப்பள்ளி, ராணிப்பேட்டை, திருமயம் ஆகிய இடங்களில் உள்ளது.
இவையனைத்தும் பாரத மிகு மின் நிறுவனம் என்ற ஒரே பெயரில் இயங்கும் கிளை
நிறுவனங்களாகும்.
பொருத்துக வினாவில் BHEL ஒரு நவரத்னா நிறுவனம் என்று விடை அளிக்கப்பட்டுள்ளது. இது
தவறு. BHEL மகாரத்னா; BEL நவரத்னா. பாடநூலில் இந்தக் குழப்பங்களுக்குத் தீர்வே கிடையாது
என்பது கல்வியின் பேரவலம்.
“III. Match the following.
1. Think Tank - Primary Sector
2. Agriculture - Gross Domestic Product
3. Industries - NITI Aayog
4. GDP - Navaratna Industry
5. BHEL - Secondary Sector”, (Page: 207)
III. பின்வருவனவற்றை பொருத்துக.
1. மதியுரையகக் குழு - முதன்மை துறை
2. வேளாண்மை - மொத்த உள்நாட்டு உற்பத்தி
3. தொழில்கள் - நிதி ஆயோக்
4. GDP - நவரத்னா தொழில்
5. BHEL - இரண்டாம் துறை (பக்.247)
2019 இல் எழுதப்படும் பாடநூல் 2017 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களைக்
கொண்டிருப்பதேன்? விக்கி பீடியாவை மட்டும் ஆதாரமாகக் கொள்ளாமல் அரசின்
அதிகாரப்பூர்வ இணைய தளங்களை நாடுவதில் என்ன தவறு?
Hindustan
Petroleum Corporation Limited (HPCL)
Power
Grid Corporation of India Limited(PGCIL)
ஆகிய இரு
நவரத்னா நிறுவனங்கள் மகாரத்னா தகுதியைப் பெற்றுள்ளன. எனவே நவரத்னாவின் எண்ணிக்கை
14 ஆக குறைந்துள்ளது.
மூன்று:
பால் வளர்ப்பது எப்படி?
“The most dominant sector of India, i.e., agriculture and other allied activities like dairying, animal husbandry, poultry etc. is totally under the control of the private sector”. (Page: 205)
“இந்தியாவின் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் துறையான
வேளாண்மை மற்றும் பால் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்ற பிற தொடர்புடைய
நடவடிக்கைகள் முற்றிலும் தனியார் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன”. (பக்.245)
‘Dairying’ என்பது ‘பால் வளர்ப்பு’ என்று மொழியாக்கப்பட்டுள்ளதை
கவனிக்கவும். ‘Eco-Friendly’ என்ன பாடுபடுகிறது
என்பதனை கீழ்க்கண்ட பத்திகளில் (கல்வியறிவு – Literacy) அறியலாம்.
“Educational
skill plays a vital role in the Socio Economic Development. Sarva
Siksha Abhiyan(SSA) is government of India’s flagship programme. It is implemented for making free and Compulsory Education to the children of 6-14 years with life skills. The Government also introduced RMSA, Smart class, e-learning, free computer skill classes and eco-friendly studying environment, Digital India for increasing the level of quality in education”. (Page: 201)
“சமூக பொருளாதார வளர்ச்சிக்கு கல்வி திறன் முக்கிய பங்கு வகிக்கிறது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) இந்திய அரசின் முதன்மை திட்டத்தின் அங்கமாகும்.
6-14 வயதுடைய குழந்தைகளுக்கு வாழ்க்கைத் திறன்களுடன் கூடிய இலவச மற்றும் கட்டாயக்
கல்வியை வழங்குவதற்காக செயல்படுத்தப்பட்டது. கல்வியில் தரத்தின் அளவை அதிகரிப்பதற்காக அனைவருக்கும் இடைநிலை
கல்வித்திட்டம் (RMSA), திறன் வகுப்பு (Smart Class) மின்னணு- கற்றல்
(E-Learning), இலவச கணினி திறன் வகுப்புகள் மற்றும் சூழல் - நட்பு (Eco-Friendly) கற்பதற்கான இயற்கையான சூழல் வழங்குதல் போன்ற திட்டங்களும் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது”.
(பக்.241)
நான்கு:
நிதி ஆயோக் பெருமிதம்!
“NITI Aayog (National Institution
for Transforming India)
• NITI Aayog replaced 65 years old planning commission.
Planning commission has power
to allocate funds to ministries and states, this function will be now at finance ministry.
• NITI Aayog is a policy think tank
and a truly advisory body formed on January 1, 2015”. (Page: 199)
நிதி ஆயோக்
• நிதி ஆயோக் என்பது 65 ஆண்டுகள் பழமையான திட்டக் குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட குழுவாகும்.
அமைச்சகங்களுக்கும்,
மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்க திட்டக் குழுவிற்கு அதிகாரம் உள்ளது. ஆனால் இந்த அதிகாரம் தற்போது நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ளது.
• நிதி ஆயோக் அடிப்படையில் ஒரு மதியுரையகக் குழுவாகவும் உண்மையான ஆலோசனைக் குழுவாகவும் 2015 ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து செயல்பட
துவங்கியுள்ளது”. (பெட்டிச்செய்தி)
“புதிய “மதியுரையகக் குழு” (Think Tank) எனப்படும் நிதி ஆயோக் (NITI Aayog) என்ற அமைப்பினால் மத்திய,
மாநில மற்றும்
உள்ளாட்சி அமைப்புகளின் சமூக துறை முயற்சிகளை ஒருங்கிணைப்பதில் பொருத்தமான தளத்தை உருவாக்க முடியும்”. (பக்.239)
65 ஆண்டு திட்டக்குழுவிற்கு மாற்றாக நிதி ஆயோக்கிற்கு என்ன அதிகாரம்
வழங்கப்பட்டுள்ளது? மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கும் அதிகாரம் உள்ளது என்று சொல்லி
ஆனால் இல்லை என்பதைக் கவனிக்கவும். மத்திய ஆளும் வர்க்கம் பேசுவதைப்போல பாடநூல்
பேசுவது மிக மோசமான நிலை.
திட்டக்குழு 65 ஆண்டுகளாகச் செயல்படவில்லை என்றால் இந்தியா எப்படி
இயங்கியது? நிதி ஆயோக் ‘உண்மையான ஆலோசனைக் குழு’, என்றால் திட்டக்குழு பொய்யான
ஆலோசனைக் குழுவா? இம்மாதிரியான அரசியல், சமூக காழ்ப்புணர்வுகளுக்கு பாடநூலில்
இடமில்லை. இதை நமது பாடமெழுதிகள் உணர்வதெப்போது?
ஐந்து:
தனியார்மயப் பெருமைகளுக்கு அளவில்லையா?
“In India, being a mixed economy, has assigned
a great importance on the private sector
of the country for attaining rapid economic
development. The Government has fixed a specific role to the private
sector in the field of industries, trade and services sector. The most dominant sector of India, i.e., agriculture and other allied activities like dairying, animal husbandry, poultry etc. is totally under the control of the private sector. Thus private sector is
playing an important role in managing the entire
agricultural sector and thereby providing the
entire food supply to the millions. Moreover,
the major portion of the industrial sector engaged in the non-strategic and light areas, producing various consumer goods both durables and non-durables, electronics and electrical goods, automobiles, textiles, chemicals, food products, light engineering goods etc., is also under the control of the private sector. The social and economic challenges before the country are great. To meet the targets in structural transformation and economic growth public sector and private sector must join together”. (Page: 205 &206)
“இந்தியா ஒரு கலப்பு பொருளாதார நாடாக இருப்பதால், விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு நாட்டில் உள்ள தனியார்
துறைக்கு பெரும் முக்கியத்துவம் அளித்துள்ளது. தொழில்கள், வர்த்தக மற்றும் சேவைத் துறையில் தனியார் துறைக்கு அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட பங்கை நிர்ணயித்துள்ளது”.
(பக்.245)
1991 உலகமயம், பங்குகள் விற்பனை ஆகியவற்றுக்குப் பிறகு கலப்புப்
பொருளாதாரம் என்று சொல்வதில் பொருளில்லை. நாடு விடுதலையடைந்தபோது நாட்டை
முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல நேரு தலைமையிலான அரசு வகுத்த திட்டம் இது. இப்போது பாதை
மாறியாகிவிட்டது.
இந்தியா கலப்புப் பொருளாதார நாடாக இருப்பதால் தனியார் துறைக்கு
முக்கியத்துவம் அளிக்கிறார்களாம்! இது அபத்தமாக இல்லையா? கலப்பு என்றால் பொது
மற்றும் தனியார் துறை இரண்டிற்கும் சமமான வாய்ப்புகள்தானே அளிக்கப்பட வேண்டும்.
தனியார் மயத்தைப் போற்ற, தனியாரைத் துதிபாட ஏன் கலப்புப் பொருளாதாரம்
துணைக்கழைக்கப்படுகிறது?
அரசின் கொள்கை விளக்கக் குறிப்பாக பாடமெழுதுவது ஏன்? சமூக அறிவியல் பாடநூல்
மோடியின் பரப்புரை வாகனமா என்ன?
(அபத்தங்கள் தொடரும்…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக