நுகர்வோரை உற்பத்தி செய்யும் பாடநூல்!
(தொடரும் அபத்தங்களும்,
குளறுபடிகளும்…)
மு.சிவகுருநாதன்
(2019 - 2020 ஆம்
கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 63)
7, 8 வகுப்புகளின் மூன்றாம் பருவப்
பாடநூல்கள் ஒரு பார்வை:
புதிய பாடநூல்களில் பக்கத்திற்கு
பக்கம் மொழியாக்கம், தகவல் பிழைகள் உள்ளிட்ட பல்வேறு அபத்தங்களைத் தொடர்ந்து
அம்பலப்படுத்தி வருகிறோம். பத்தாம் வகுப்பு சமூக அறிவியலில் 'Indian Ordnance
Factory' ஐ 'ஒழுங்குமுறை தொழிற்சாலை', என்ற மொழியாக்கிச் சாதனை படைத்ததை முன்பு
கண்டோம். (தொடர் எண்: 49)
ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் மூன்றாம்
பருவத்தில் பொருளியல் பகுதியில் 'சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு' என்றொரு
பாடம் இடம்பெறுகிறது. அப்பாடத்தில்,
“III.
பின்வருவனவற்றைப் பொருத்தவும்:
1. நுகர்வோர் உற்பத்தி சட்டம் 1955
2. சட்ட பூர்வமான அளவீட்டு சட்டம் 1986
3. இந்திய தர நிர்ணய பணியகம் 2009
4. அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1986” (பக்.240)
‘பொருத்துக’ நுகர்வோர் உற்பத்தி சட்டம்’ என்று உள்ளது.
பாடநூல்கள் இப்போது நுகர்வோரையும் உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டன! ‘The Consumer
Protection Act’
என்பதுதான்
‘நுகர்வோர் உற்பத்தி சட்டம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ‘Protection’ ஐ ‘Production’ ஆக மாற்றும்
மொழிபெயர்ப்புப் புலமையை நீங்களும் பாராட்டலாமே!
“III.
Match the following:
1. The Consumer Protection Act 1955
2. The Legal Metrology Act 1986
3. The Bureau of Indian Standards Act 2009
4. The Essential Commodities Act 1986” (Page: 197)
பாதுகாப்புச் சட்டம், அளவீட்டுச் சட்டம், பாதுகாப்புத் துறை என எந்த இடங்களிலும் வல்லினம் மிகுவதேயில்லை.
ஆனால் ‘இயற்க்கை’ (பக்.240) என்று எழுதுவதில் மட்டும் குறைவில்லை.
சில நுகர்வோர் தொடர்புடைய சட்டங்கள்
தரப்பட்டுள்ளன.
“முக்கியமான சட்டங்கள்
✓ நுகர்வோர்
பாதுகாப்பு சட்டம், 1986
✓ சட்ட அளவீட்டு
சட்டம், 2009
✓ இந்திய தர
நிர்ணய பணியகம், 1986
✓ அத்தியாவசிய
பொருட்கள் சட்டம், 1955
✓
கறுப்பு சந்தைப்படுத்துதல் தடுப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பராமரிப்பு பொருட்களின் சட்டம், 1980”, (பக்.239)
“Important Acts
- The Consumer Protection Act, 1986
- The Legal Metrology Act, 2009
- The Bureau of Indian Standards Act, 1986
- The Essential Commodities Act, 1955
- The prevention of Black Marketing and maintenance of supplies of essential Commodities Act, 1980”, (Page: 195)
‘The Bureau of Indian Standards Act, 1986’ ‘இந்திய தர
நிர்ணய பணியகம், 1986’ என்று மாற்றப்பட்டு, ‘சட்டம்’ காணாமற்போகிறது.
‘The Legal Metrology Act, 2009’ ‘சட்ட அளவீட்டு சட்டம், 2009’ ஆக மாறுகிறது. ‘அளவியல்
(Metrology) வெறும்
அளவீடு
(measurement) என மாறுகிறது. ‘சட்ட அளவியல் சட்டம்’ என்பதே பொருத்தமாக இருக்கும்.
“The prevention of Black Marketing and maintenance of supplies of
essential Commodities Act, 1980”, என்ற சட்டத்தை, “கறுப்பு சந்தைப்படுத்துதல் தடுப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பராமரிப்பு பொருட்களின் சட்டம், 1980”, என்று
குழப்பது ஏன்? “கள்ளச் சந்தைத் தடுப்பு மற்றும் இன்றியமையாமைப் பொருள்கள்
பராமரிப்புச் சட்டம் – 1980” என்பதை ஏன் தலைகீழாகச் சுற்றியடிக்க வேண்டும்?
இப்பாடத்தைப் படிப்போர் ஏழாம் வகுப்பு மாணவர்கள் என்பதை உணர மறுப்பது ஏன்? ‘Black
Market’ ஐ ‘கள்ளச்சந்தை’ என்பதே சரி.
“National Consumer Disputes
Redressal
Commission (NCDRC)
State Consumer Disputes Redressal Commission (SCDRC)
District Consumer Disputes Redressal
Forum
(DCDRF)”,
(Page: 195)
ஆகியவற்றை பின்வருமாறு மொழி பெயர்க்கிறார்கள்.
“தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் (NCDRC)
மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் (SCDRC)
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் (DCDRC)”, (பக்.238)
மாவட்டங்களில்
இருப்பது, ‘மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்’ (District Consumer Disputes Redressal
Forum
(DCDRF). இது ஆணையம் (Commission) அல்ல; மன்றம் (Forum).
“சரியான விடையை தேர்வு செய்க”, பகுதியில்,
1. எந்தவொரு சந்தர்ப்பத்தில் ஒரு
நுகர்வோர் குறைபாடுள்ள தயாரிப்புக்காக உற்பத்தியாளருக்கு எதிராக புகார் செய்ய
முடியாது?
அ) காலாவதியாகும் தரவு
குறிப்பிடப்படாதது
ஆ) பொருட்களின் விலை
இ) பொருட்களின் தொகுதி எண்
ஈ) உற்பத்தியாளரின் முகவரி
(…)
3. நுகர்வோருக்கு ஒரு பொருட்கள்
தயாரிப்பு
பற்றிய போதுமான தகவல்கள் வழங்கப்பட வேண்டும்
அ) உற்பத்தியின் முதலீடு
ஆ) பொருட்கள் விற்பனையில் முடிவு
இ) கடனில் பொருட்கள் வாங்குதல்
ஈ) பொருட்கள் வாங்குவதில் முடிவு”
(பக்.240)
ஆங்கில வழியில்,
“Choose the correct answer:
1. In which case a consumer cannot complain against the manufacturer for a defective product?
a) Date of expiry unspecified
b) Price of the commodity
c) Batch number of the commodity
d) Address of the manufacturer
(...)
3. Consumers must be provided with
adequate
information about a product to make
a) Investment in production
b) Decision in sale of goods
c) Credit purchase of goods
d) Decision in purchase of goods”,
(Page: 196)
இதில் முதல் வினாவிற்கு கொடுக்கப்பட்டிருக்கும்
விடைக்குறிப்புகளில் எதைத் தேர்வு செய்வது? இந்த நான்கும் பொருள்களின் மீது இடம்பெற்றிருக்க வேண்டுமல்லவா!
பாடப்பகுதி கீழ்க்கண்ட விளக்கத்தை அளிக்கின்றது.
“நியாயமற்ற வர்த்தக நடைமுறை” என்பது ஒரு வர்த்தக நடைமுறை அல்லது எந்த ஒரு பொருள் அல்லது சேவைகளின் விற்பனை, பயன்பாடு அல்லது
விநியோகத்தை
ஊக்குவிக்கும் நோக்கத்திற்காக, நியாயமற்ற துறையை அல்லது நியாயமற்ற அல்லது ஏமாற்றும் நடைமுறை பின்பற்றப்படுவது.
இந்த நடைமுறைகளில் சில பின்வருமாறு:
• தவறான பிரதிநிதித்துவம்
• பொருள்கள் மற்றும் சேவைகள்
குறிப்பிட்ட
தரநிலை, தரம் அல்லது தரத்தில் இல்லாத போது;
• உபயோகித்தப் பொருள்,
புதுப்பிக்கப்பட்ட
பொருள்கள் புதியது போல விற்கப்படுவது.
• பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு
உரிமை
அல்லது நன்மை இல்லாதபோது;
• தயாரிப்புகள் / சேவைகளுக்கு உரிமை கோரப்பட்ட உத்திரவாதம் /
பொறுப்புறுதி
இல்லாதபோது.
• தயாரிப்பு அல்லது சேவையின் விலை
தவறாக குறிக்கப்படும் போது.
• பேரம் பேசும் விலையில் விற்பனை செய்வதற்கான
தவறான விளம்பரம்.
• பரிசுகளை, பரிசு போன்றவற்றை
வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான எந்த நோக்கமும் இல்லாமல் அவற்றை வழங்குவதற்காக.
• தகுதிவாய்ந்த அதிகாரத்தால்
அமைக்கப்பட்ட
பாதுகாப்புத் தரங்களுக்குள் வராத பொருட்களை விற்பனை செய்தல்.
• அதிக விலைகளை ஏற்றும் வகையில் அதிக
எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்படும் அல்லது ஒரே மாதிரியான பொருட்களின் விலையை உயர்த்தும் நோக்கத்துடன் பதுக்கல் அல்லது பொருட்களை அழித்தல்.
• மோசமான பொருட்களை உற்பத்தி செய்தல் அல்லது வழங்குதல் அல்லது சேவைகளை வழங்குவதில் ஏமாற்றும் நடைமுறைகளை
பின்பற்றுவது”, (பக்.235)
3 வது வினாவின் விடைக்குறிப்புகளும் குழப்பத்தை
உண்டாக்குகிறது.
உற்பத்தியின் முதலீடு
(Investment in production) என்று சொல்வது சரியாகுமா? தயாரிப்புப் பொருள்கள்
(ingredients in
product) அல்லது தயாரிப்புக் கலவை (composition in product) என்பதே சரியாக இருக்க முடியுமென்றுத் தோன்றுகிறது.
‘முற்றுரிமை’ (Monopoly) என்று மொழியாக்கம் செய்த பிறகு அடுத்த
பத்தியில் ‘monopolistic Competition’ ஐ ‘ஏகபோக போட்டி’ என்பது ஏன்? முற்றுரிமை – முற்றுரிமைப் போட்டி
அல்லது ஏகபோகம்
- ஏகபோக போட்டி என்று ஒரே மாதிரியாகக் குறிப்பதில் என்ன தவறு?
‘ஒலிகோபோலி’ விளக்கத்தை படித்து ரசியுங்கள். இதன்மூலம் மாணவர்களும் ஆசிரியர்களும்
எதை அறிந்து கொள்வர்? இங்கு மொழியாராய்ச்சித் தேவையில்லை. இதைப்பற்றிய தெளிவான
விளக்கமே தேவை. எல்லாம் ‘விக்கிபீடியா’வைக் காப்பியடிப்பதால் இவ்வாறு நிகழ்கிறது
என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!
இவர்களது
மொழியாராய்ச்சியும் நகைப்பிற்கிடமாக உள்ளது. மேலும் பாடப்பகுதி பற்றியத் தெளிவான
விளக்கத்தைத் தராமல் வெறும் சொற்சிலம்பமாடுவது வெறுப்பூட்டுகிறது.
“ஒலிகோபோலி
என்ற
சொல் இரண்டு கிரேக்க சொற்களிலிருந்து பெறப்பட்டது. ஒலிகோய் என்றால் சில மற்றும் பாலி என்றால் கட்டுப்பாடு. எனவே ஒலிகோபோலி என்பது ஒரு சந்தை வடிவத்தைக் குறிக்கிறது. இதில் ஒரே மாதிரியான அல்லது வேறுபட்ட தயாரிப்புகளில் சில விற்பனையாளர்கள் உள்ளதைக் குறிக்கிறது”. (பக்.234)
‘Oligopoly’, ஆங்கில வழியில்,
“The term oligopoly has been derived from two Greek words, Oligoi means few and poly means control. Therefore, oligopoly refers to a market form in which there are few sellers dealing either in homogenous or differentiated products”. (Page: 192)
இப்பகுதிகள்,
என்ற இணையப்பக்கத்திலிருந்து வெட்டி (cut paste) ஒட்டப்பட்டுள்ளன.
Oligopoly Market System என்பது
ஒரு அல்லது சில நிறுவனங்களே ஒரு குறிப்பிட்ட துறையில் ஆதிக்கம் செலுத்துவதைக்
குறிக்கும். ஓர் அங்காடியில் சில விற்பனையாளர்களும் பல வாங்குபவர்களும் இருக்கும்
நிலை. கொஞ்ச காலத்திற்குப் பிறகு இது வணிகப் போட்டியைத் தவிர்த்து ஒற்றையாதிக்கத்திற்கு வழிவகுக்கும். இதை சிறு குழு
முற்றுரிமை, சில நிறுவன முற்றுரிமை, சில நிறுவனப் போட்டி என்றுகூட சொல்லலாம்.
எ.கா. ஜியோ (Jio)
இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் இயங்கிய பல நிறுவனங்கள் இன்று காணமற்போயுள்ளன. இன்று ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel),
வோடபோன்-ஐடியா (Vodofone-Idea) ஆகிய மூன்று நிறுவனங்கள் உள்ளன. இருப்பினும் ஜியோ (Jio) 4G
சேவையை மட்டும் தரும் தனித்த நிறுவனமாகவும் விரைவில் இந்தச் சந்தையில் தனியாதிக்கத்திற்குள் வர
வாய்ப்புண்டு.
இந்திய அரசின் பொதுத்துறை 'மினிரத்னா' நிறுவனமான பாரத்
சஞ்சார் நிகம் லிட். (BSNL) இந்தப் போட்டியிலேயே இல்லை என்பது
குறிப்பிடத்தக்கது. 4G உரிமம் வழங்காமல் மத்திய அரசு இந்நிறுவனத்தை
முடக்கியுள்ளது.
இல்லையில்லை; BSNL க்கு 4G உரிமம் வழங்கப்பட்டுள்ளது என
யாரும் சண்டைக்கு வரவேண்டாம். இந்த மூன்று நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில்
இந்தியா முழுமைக்குமான உரிமம் வழங்கப்படவில்லை. இதைத் தனியாருக்குத் தாரை
வார்ப்பது அல்லது முற்றாக சாகடிப்பது என்பதே மத்திய அரசின் புதிய பொருளாதாரக்
கொள்கை.
உலக மின்னணு வணிகச் சந்தையில் உள்ள அமேசான், உலகக் குளிர்பான
சந்தையிலுள்ள கோக், பெப்சி, சிக்கன் சந்தையிலுள்ள KFC ஆகியனவும் Oligopoly க்கு உதாரணமாகச் சொல்ல வேண்டியன.
ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு மிக எளிமையாச் சொல்ல
வேண்டியவற்றை ஆசிரியர்களுக்கே
புரியாமலும், தடித்த மொழியிலும், தான்தோன்றித்தனமாகவும் பாடநூல்கள் எழுதும் ஆசிரிய மற்றும் பேராசிரியப் பெருந்தகைகள்
இதைக் கொஞ்சம் கவனிப்பார்களாக!
(அபத்தங்கள் தொடரும்…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக