வெள்ளி, ஆகஸ்ட் 03, 2018

ஆசிரியர்கள் வாசிப்பு – 002

ஆசிரியர்கள் வாசிப்பு – 002


(நல்ல நூல்களைத் தேடி…)



மு.சிவகுருநாதன்





06.வால்காவிலிருந்து கங்கை வரை… ராகுல சாங்கிருத்தியாயன்

(மொ) கண. முத்தையா 


இருபத்து இரண்டாம் பதிப்பு, மார்ச் 1999, பக்கம்: 368, விலை: ரூ. 75
புதிய பதிப்பின் விலை: ரூ. 350
பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ‘வால்காவிலிருந்து கங்கை வரை.. முத்து மீனாட்சி மொழிபெயர்ப்பு. விலை. ரூ. 250
   
    கதைகள் வரலாறுகள் ஆவதற்கும் வரலாறுகள் கதைகளாகச் சொல்லப்படுபடுவதற்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. ஊர் சுற்றுவதை அறிவுத்தேடலுக்கு முன் நிபந்தனையாக்கி, தத்துவஞானியாகவும் மார்க்சிய அறிஞராகவும் அறியப்பட்ட ராகுல்ஜி என்கிற ராகுல் சாங்கிருத்தியாயன் வரலாறுகளை கதைகளாக வடித்த முன்னோடி என்று சொல்லலாம். இவரது ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்னும் நூலில் இந்தியத் தொல்குடிச் சமூகத்திலிருந்து நவீன காலம் வரை வரலாற்று நிகழ்வுகளை 20 கதைகள் வழியே எழுதியிருக்கிறார். தாய்வழி வேட்டை சமூகத்திலிருந்து கதைகள் தொடங்கும்.  காலம் கி.மு. 6000 லிருந்து (நிஷா) கி.பி. 1942 வரை (சுமேர்) கதைகள் நீள்கிறது. 



     இந்நூல் கண. முத்தையாவின் அழகான மொழிபெயர்ப்பில் பல பதிப்புக்களைக் கடந்து விற்பனையில்  சாதனை படைத்தது. மனித சமுதாயம், ஊர் சுற்றிப் புராணம் ஆகிய இவரது பிற நூற்கள்.
“மனிதர்கள் இன்று எங்கெங்கு பரவியிருக்கிறார்களோ, அங்கெல்லாம் ஆரம்பத்தில் தோன்றினார்கள் என்று கூறமுடியாது. இவ்வளவு மிகுதியாக  அவர்கள் பரவும் நிலையை  அடைவதற்கு மனித சமுதாயம், மகத்தான போராட்டங்களை கடக்க வேண்டியிருந்தது. மனித சமுதாயத்தின் வளர்ச்சியை சித்தாந்த ரூபமாக எனது ‘மனித சமுதாயம்’ என்னும் நூலிலே விவரித்திருக்கிறேன். அந்த விஷயங்களை எல்லோரும் புரிந்துகொள்ளும்படி சரளமான நடையில் எளிய முறையில் கொடுக்கவேண்டுமென்ற ஆசையால் தூண்டப்பட்டே, இந்தக் கதைகளை எழுதினேன்”, என்று ராகுல்ஜி நூல் முன்னுரையில் குறிப்பிடுவார். 

வெளியீடு: 

தமிழ்ப் புத்தகாலயம்,
15, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார்,தி.நகர், சென்னை – 600017.
மின்னஞ்சல்:  tamilputhakalayam@yahoo.com
தொலைபேசி: 04424345904

பாரதி புத்தகாலயம், 

7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600018.

தொலைபேசி: 044 24332424, 24332924, 24356935
மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com
இணையம்: www.thamizhbooks.com


07.ரிக் வேதகால ஆரியர்கள்   ராகுல சாங்கிருத்தியாயன்

(மொ) ஏ.ஜி. எத்திராஜூலு 

மூன்றாம் பதிப்பு, ஆக. 2011, பக்கம்: 218, விலை: ரூ. 110 (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
இரண்டாம் பதிப்பு, 2011, பக்கம்: 200, விலை: ரூ. 120 (அலைகள்)

    ஆரியர்களின் இந்திய வருகை குறித்து புதிய கற்பனைகள் உலா வருகின்றன. அவர்கள் இந்தியாவின் பூர்வ குடிகள் என்றும் சிந்துவெளி நாகரீகம் அவர்களுடையது என்றும் கணினி வரைகலை மூலம் காளையைக் குதிரையாக்கும் குயுக்தி தந்திரங்களை எதுவும் பலிக்காத நிலையில் வேறுவேறு புனைவுகள் தொடர்ந்து அவிழ்த்துவிடும் வேலையை ஒரு கூட்டம் செய்து வருகிறது.  

   ராகுல்ஜியின் ‘ரிக் வேதகால ஆரியர்கள்’ என்னும் இந்த நூல் வேதங்களை ஆதாரமாகக்கொண்டு எழுதப்பட்டது. ஆரியர்களின் வரலாற்றை உணரவும் புனைவுகளைத் தகர்க்கவும் இந்நூல் பெரிதும் பயன்படும். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அலைகள் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இந்நூலை வெளியிட்டுள்ளன. 


08.மனித சமுதாயம்   ராகுல சாங்கிருத்தியாயன்

(மொ) ஏ.ஜி. எத்திராஜூலு 

மூன்றாம் பதிப்பு, ஜன. 2013, பக்கம்: 544, விலை: ரூ. 200

      விலங்குகளுடன் விலங்காக வாழ்ந்த காட்டு மனிதன் நாகரிக மனிதனாக, சமத்துவ மனிதனாக வளர்ந்த மானுட வளர்ச்சி நிலைகளை இந்நூலில் ராகுல சாங்கிருத்தியாயன் எளிமையாக விளக்குகிறார். ஏ.ஜி. எத்திராஜூலுவின் மொழியாக்கக் கொடைகளுள் இதுவும் ஒன்று.
 
09.ஊர்சுற்றிப் புராணம்   ராகுல சாங்கிருத்தியாயன்

(மொ) ஏ.ஜி. எத்திராஜூலு 

ஐந்தாம் பதிப்பு, டிச. 2009, பக்கம்: 236, விலை: ரூ. 75

       ஊர்சுற்றி’ என்பது வசைச் சொல்லாக மாறிவிட்ட ஒரு சமூகத்தில் ஊர் சுற்றுவதன் சிறப்பைப் பேசும் நூல். கிணற்றுத்தவளை மனப்பான்மை அகல ஊர்சுற்றவேண்டும். மகாவீரர், புத்தர் போன்ற அறிஞர்கள் ஊர்சுற்றிகளே. இதர கல்வியைவிட இதன் அனுபவங்கள் எல்லையற்றது. 

     வீட்டைவிட்டு வெளியேறாவிட்டால் நம்மால் முழு மனிதனாக மாற இயலாது. இந்த உலகம் தன் இரு கரங்களால் உங்களைத் தழுவிக்கொள்ளும். நூலாசிரியர் ஒரு ஊர்சுற்றி. அவரது அனுபவங்கள் வழியே ஊர்சுற்றுவதன் பெருமைகள் எடுத்துரைக்கப்படுகின்றனர். 

    எழுத்தாளர்கள் கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோர் ஊர்சுற்றுவதைப் பற்றி எழுதி உள்ளனர். இவர்களும் ஊர்சுற்றிகளே. 

   பெண் ஊர்சுற்றிகளும் உண்டு. அவர்களும் தடைகளைத் தாண்டி ஊர் சுற்றுகின்றனர். ஊர்சுற்றுவது தொல்பழங்கால வழக்கம். இந்நூலைப் படித்தால் நமக்கும் ஊர்சுற்றும் ஆவல் பிறக்கும். 


10.தொல்பழங்காலம்      முனைவர் தி.சுப்பிரமணியன்

முதல் பதிப்பு, ஜூலை 2016, பக்கம்: 294, விலை: ரூ. 225

    தொல்பழங்காலப் பண்பாட்டை மிக எளிமையாக அறிமுகம் செய்கிறது இந்நூல். நமது பாடநூல்களின் மொழிநடையில் அதிர்ச்சியில் உறைந்துபோகும் நமக்கு இது போன்ற நூல்கள் சற்று இளைப்பாறுதல் தருகின்றன. புவி இயல், கற்காலம், ஈமச்சின்னங்களும் வாழ்விடங்களும், குடியும் குடியமைப்பும், தாய் தெய்வ வழிபாடும் குலக்குறி வழிபாடும், கட்டடக்கலையின் தோற்றமும் வளர்ச்சியும், பாறை ஓவியங்கள் உள்ளிட்ட 13 தலைப்புகளில் இந்நூல் விரிகிறது. 

    தொல்பழங்காலம் குறித்த நூல்கள் குறைவு என்ற குறையை போக்குகிறது இந்நூல்.  


   கடைசி நான்கு நூல்களையும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (NCBH) வெளியிட்டுள்ளது. 

வெளியீடு: 

 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்,
41, பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்,
சென்னை – 600014.

044-26258410, 26251968, 26359906
மின்னஞ்சல்: ncbhbooks@yahoo.co.in


(பட்டியல் நீளும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக