திங்கள், ஆகஸ்ட் 27, 2018

அடித்தட்டு மக்களின் வழக்கறிஞர்

 அடித்தட்டு மக்களின் வழக்கறிஞர்


மு.சிவகுருநாதன்


 

     மூத்த வழக்கறிஞர் தோழர் பொ.இரத்தினம் அவர்கள் அடித்தட்டு மக்களுக்காக தன் வாழ்வை அப்பணித்தவர். சென்னகரம்பட்டி, மேலவளவு, விருத்தாசலம் கண்ணகி முருகேசன் வழக்கு ஆகியவற்றில் இன்னும் சட்டப்போர் நடத்தி வருபவர். 

     தனது வழக்கறிஞர் பணியையும் வாழ்வையும் தலித் மக்களுக்காக ஒப்படைத்துவிட்டவர். திருமணம், குடும்பம் என சுய நலச்சூழலில் சிக்காத பண்பாளர். 70 வயதிலும் ஒரு இளைஞரைப் போல வழக்குகள், மனித உரிமை மற்றும் சமூகப் பணிகளுக்காக ஓயாது போராடி வருபவர். பவுத்தம், அம்பேத்கரியம் ஆகியவற்றைச் சரியாகப் புரிந்துகொள்வது, இயக்கமாக முன்னெடுப்பது போன்றவற்றில் ஈடுபாடு உடையவர். குஜராத்தில் பழங்குடி மக்களுக்காக பணியாற்றியவரும் கூட. 


        சேலம் - சென்னை எட்டுவழிச் சாலைகளை எதிர்த்துத் தற்போது வழக்காடி வருகிறார். எட்டுவழிச் சாலை எப்படி பசுமைத்திட்டமாக இருக்கும் என்று கேள்வி எழுப்பும் இவர் இதற்கு மாற்றாக வரலாற்று அறிஞர் ராமசந்திர குஹா குறிப்பிட்ட கருத்தை ஒட்டி தொடர்வண்டிப்பாதையை முன்மொழிகிறார். வெறும் எதிர்ப்பை மட்டும் முன்வைக்காது சூழலைப் பாதிக்காத மாற்று முன்வரைவையும் இவர் முன்வைப்பது குறிப்பிடத்தக்கது. 


       அவர் வரும் செப்டம்பர் 01, 2018 சனி அன்று நாமக்கலில் நடத்தும் நிகழ்வு குறித்த விவரங்கள் கீழே தரப்படுகின்றன. 


நிகழ்வு:


உழவர் பங்களிப்பை உணர்வோடு உயர்த்திப் பிடிப்போம்!

அரசியல் சந்தர்ப்பவாதம் அனைத்தையும் சீரழிக்கிறது.

மணற்கொள்ளை, ஆறுவழி, எட்டுவழிச் சாலைகள் போன்ற கொடூரங்கள்.

நதிநீரைப் பயன்படுத்த வக்கற்ற அரசியல், நிர்வாக முகமூடிகள்.

கூடிப்பேசுவோம்!

ஆக்கப்பூர்வமாகத் திட்டமிடுவோம்!!

நாள்: 

01.09.2018, சனிக்கிழமை

காலை 10.30 முதல் 1.30 வரை.

இடம்:

சானு, ஓட்டல் இண்டர்நேஷனல்
சேலம் சாலை, நாமக்கல்.

தவறாமல் வாங்க!
நண்பர்களுடன் வாங்க!!

ஒருங்கிணைப்புக் குழுவிற்காக....

பொ.இரத்தினம்,
வழக்கறிஞர்.
கைபேசி:
9443458118

சிவப்பிரகாசம்,
ஊழல் எதிர்ப்பு இயக்கம்,
கைபேசி:
9442436123

என்.காந்தி,
உழவுப் பணியாளர்,
கைபேசி:
9960885498

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக