புதன், நவம்பர் 09, 2016

மக்களை ஏமாற்றும் மத்திய அரசு.

மக்களை ஏமாற்றும் மத்திய அரசு.


- மு.சிவகுருநாதன்


       500, 1,000 ரூபாய் இன்று  (08.11.2016)  நள்ளிரவு முதல் திரும்பப் பெறப்படுவதாக திடீரென்று அறிவிக்கப்பட்டுள்ளது.


     வீட்டை விட்டு வெளியே சென்ற சாமான்ய மக்கள் வீடு திரும்புவது கேள்விக்குறியாகியுள்ளது.

      இதில் கருப்புப் பணத்தை ஒழிப்பது என்பதெல்லாம் ஏமாற்று வேலை.

      இதை உண்மை என்று வைத்துக் கொண்டாலும் வெளிநாட்டில் பதுக்கப்பட்ட பணம்?

   கருப்புப் பணம் கரன்சியாகத்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயமா என்ன?

     இது திசை திருப்பும் உத்தி. மாநிலத் தேர்தல்கள் மற்றும் இழந்து போன செல்வாக்கு ஆகியவை இதன் பின்னணியில் உள்ளன.

      இதனால் இந்தியா முடங்குமே தவிர, கருப்புப்பண முதலைகள், அரசியல்வாதிகள் பாதிக்கப்படப் போவதில்லை.

    500 க்கு 100 ரூபாய் தருகிறேன் என்று ஏழைகளிடம் சிலர் பணம் பறிக்கலாம்.

    நாளை இம்முடிவு திரும்பப் பெறப்படக்கூடிய முடிவுகள் கூட எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

      இது குறித்து வழக்கு வரும்போது உச்சநீதிமன்றம் என்ன செய்கிறது என்று பார்க்கலாம்.

   மத்திய அரசின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது என்று கருத இடமுண்டு.

     தெருவில், கையில் பணத்தை வைத்துகொண்டு பிச்சைக்காரர்கள் போல் இருக்கும் இன்றைய இந்தியர்கள் நிலையை விட மோடி இங்கு முக்கியமில்லை.

     கருப்புப் பணத்தை வைத்துக் கொண்டிருப்பவன் இன்று தெருவில் நிற்கவில்லை என்பதை உணராதவரை நமக்கு விடிவுகாலம் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக