ஐந்து அணுக்கொள்கைகள் ஐந்து தனிமங்களின் கொள்கையான கதை!
மு.சிவகுருநாதன்
(2019 - 2020
ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 34)
ஏழாம் வகுப்பு அறிவியல் பாடநூலில் அலகு 04
‘அணு அமைப்பு’ என்னும் பாடம் உள்ளது. இதில் அணுவின் அமைப்பு பற்றிய ஜான் டால்டன் (1803), ஜே.ஜே. தாம்சன் (1904),
ரூதர்போர்டு (1911), எர்வின் ஷிரோடிங்கர் (1926) ஆகியோரது 5 அணுக்கொள்கைகளும்
மாதிரிகளும் விளக்கப் படுகின்றன.
‘ஐந்து தனிமத்தின் அணு அமைப்புக் கோட்பாட்டின் பரிணாம வளர்ச்சி’ (பக்.57)
என்ற தலைப்பில் ஒரு விளக்கப்படம் உள்ளது. ஆங்கில வழியில் ‘Evolution of atomic
structure from the 5 elements’ (page:50) என்றும் உள்ளது.
பாடம் எழுதியவர்களின் அறிவியல் மற்றும் ஆங்கில அறிவு குறித்த அய்யத்தை
ஏற்படுத்துகிறது. தனிம அணுக்களின் அமைப்பு பற்றிய 5 கோட்பாடுகள் எப்படி ‘5
தனிமத்தின் அணு அமைப்புக் கோட்பாடாக’
பரிணாமடைந்தது என்பதை விளக்கிச் சொன்னால் நல்லது.
‘5 கோட்பாடுகளை’, ‘5 தனிமங்களாக;
உருமாற்றுவது என்பது ரொம்பவும் அபத்தம். ஆங்கிலத்திலும் அப்படியே இருக்கிறது. அதை
அப்படியே மொழிபெயர்த்துள்ளனர். நேரடியாகத் தமிழில் பாடம் எழுதாத வரையில் இவை
தொடரவேச் செய்யும். இவர்களது தமிழ், ஆங்கிலம் மற்றும் அறிவியல் புலமை நம்மை புல்லரிக்க வைக்கிறது.
இந்தக் கோட்பாடுகளின் வளர்ச்சியை ‘பரிணாம
வளர்ச்சி’ என்று சொல்வது சரிதானா என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும். பரிணாம
வளர்ச்சி என்பதைவிட அணுக் கொள்கைகளின் படிநிலை வளர்ச்சி அல்லது அணுக் கொள்கைகளின்
வளர்ச்சி அல்லது அணுக் கொள்கைகளின் வரலாறு என்றுகூடச் சொல்லலாம் எனத் தோன்றுகிறது.
அணு அமைப்பு பற்றிய ஐந்து கோட்பாடுகளின் முன்னேற்றம் என்று சொல்வதுகூட
சரியாக இருக்கலாம். இக்கோட்பாட்டின் வளர்ச்சியை பரிணாம வளர்ச்சியோடு முடிச்சிட
வேண்டாமே! குறிப்பாக 5 தனிமங்களையாவது உடனே மாற்றுங்கள்.
‘Evolution of idea of an atom’ (page:48) என்று ஆங்கிலத்திலும் ‘அணுவினைப்
பற்றிய கொள்கையின் பரிணாம வளர்ச்சி’ (பக்.55) என்றும் தமிழில் எழுதுகிறார்கள். ‘Idea’ எப்படிக் ‘கொள்கை’யாகும் என்று தெரியவில்லை? ‘அணுக்கள் பற்றிய
கருத்துகளின் வளர்ச்சி’ எனலாமா?
மேற்கண்ட இணைய இணைப்பில் அணு அமைப்புக்
கோட்பாடுகளைப் பற்றிய ‘The History of
the Atom – Theories and Models’ அன்னும் தலைப்பிலான ஒரு கட்டுரை உள்ளது.
அதில் இடம் பெறும் விளக்கப்படம் ஒன்று இங்கு
வெளியிடப்படுகிறது.
(இன்னும் வரும்…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக