வெள்ளி, ஜூன் 10, 2011

தமிழக அரசு பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளவேண்டும்.

தமிழக அரசு பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளவேண்டும். 

                                                                                      -மு.சிவகுருநாதன்





       சமச்சீர்கல்வித் திட்டத்தை  நடப்புக்கல்வியாண்டில்  ரத்து செய்யும் தமிழக அரசின் சட்டத் திருத்த மசோதாவுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின்   தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இடைக்காலத் தடை விதித்துள்ளது.பொது நல மனுக்கள் தாக்கல் செய்த பல்வேறு கல்வியாளர்கள் மற்றும் சமூக சிந்தையாளர்களுக்கு கிடைத்த வெற்றி இது.


         ஆளுங்கட்சியும் (அ.இ.அ.தி.மு.க.) எதிக்கட்சியும் (தே.மு.தி.க.) சமச்சீர்கல்வி குறித்து மெட்ரிக் பள்ளிகளுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்துள்ள நிலையிலும் தி.மு.க.கனிமொழி விடுதலையை மட்டும் நோக்கமாகக்கொண்டு செயல்பட்டுவரும் நிலையிலும் சமச்சீர்கல்விக்காக போராடிய இயக்கங்களுக்கும்  சமூக ஆர்வலர்களுக்கும் நன்றி சொல்லவேண்டும்.உச்ச நீதிமன்றத்திற்கு தமிழகஅரசு சென்றாலும் தொடர்ந்து சமூக நீதிக்காக பாடுபட வேண்டியுள்ளது.


        இருப்பினும் தீர்ப்பின் முழு விவரம் தெரியவில்லை.இத்தீர்ப்பு பற்றி இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.தமிழக அரசு  சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல் பல லட்சக்கணக்கான மாணவர்களின் நலன் கருதி பெருந்தன்மையுடன் நடக்கவேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

         சட்ட மேலவையை மீண்டும் கொண்டுவருவதில்லை என்றும் இலங்கை,கச்சத்தீவு குறித்த தீர்மானங்கள் உள்ளிட்ட பல நல்ல திட்டங்களை அறிவித்துள்ள இப்புதிய அரசு சமச்சீர்கல்வி விஷயத்திலும் முக்கியமான முடிவு எடுக்கவேண்டிய தேவை இருக்கிறது.


      பள்ளிகளை உடன் திறக்கவேண்டியிருப்பதாலும் மாணவர்கள்,பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளாகும் பெற்றோர் நலன் கருதியும் உரிய முடிவு எடுக்க வேண்டிய அவசியமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக