திங்கள், ஜூன் 13, 2011

கல்விக்கொள்ளைக்கு துணை போவதை கண்டித்தும், சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரியும் நாளை தமிழகம் முழுவதும் ம.க.இ.க ஆர்ப்பாட்டம் !


கல்விக்கொள்ளைக்கு துணை போவதை கண்டித்தும், சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரியும் நாளை தமிழகம் முழுவதும் ம.க.இ.க ஆர்ப்பாட்டம் !

    

       இவர் பழைய ஜெயா அல்ல, இப்போது திருந்திவிட்டார் என்று பலர் 
 நற்சான்றிதழ் அளித்திருக்கும் இந்த ’திருந்திவிட்ட’ அம்மையார் ஏன் இவ்வளவு மெனக்கெட்டு ’உச்சிக்குடுமி மன்றம்’ வரை சென்று சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்க முயற்சிக்க வேண்டும் ?

      இவரை எதிர்க்கத்துணிவற்ற தி.மு.க கோழைகளோ சமச்சீர் கல்வியை தி.மு.க அரசு கொண்டு வந்ததால் தான் ஜெயலலிதா எதிர்க்கிறார் என்று புலம்புகிறார்கள். இது உண்மையா ? இல்லை தி.மு.க கூறுவது உண்மையல்ல, இது தி.மு.க கொண்டு வந்த திட்டம் என்பதற்காக ஜெயலலிதா இதை எதிர்க்கவில்லை, நிறுத்தி வைக்கவில்லை மாறாக இது தனியார் பள்ளிகளின் கல்விக்கொள்ளைக்கு தடையாக இருக்கும் என்பதற்காகத் தான் பாசிச ஜெயா இதை மூர்க்கமாக எதிர்க்கிறார்.

    தனியார் பள்ளி முதலாளிகள் கொள்ளையடிப்பதற்காகத்தான் பாசிச ஜெயா அரசு சமச்சீர் கல்வியை அவசர அவசரமாக நிறுத்தி வைத்துள்ளது, புதிய பாட நூல்களை அச்சடிக்கவும், ஏற்கெனவே கோடிக்கணக்கில் செலவு செய்து அச்சடித்த புத்தகங்களை குப்பையில் வீசவும் தயாராக உள்ளது.

     மக்கள் வெற்றி பெற வைத்ததால் ஜெயலலிதாவும் திருந்தவில்லை, மக்கள் மண்ணைக் கவ்வ வைத்ததால் கருணாநிதியும் திருந்தவில்லை, எப்போதும் கோமாளியாகவே இருக்கிறோமே என்று சொரணை வந்து போலிக்ககம்யூனிஸ்டுகளும் திருந்தப்போவதில்லை.

 
    கல்விக்கொள்ளையர்களுக்கு ஆதரவாக சமச்சீர் கல்வியை நிறுத்தி வைத்திருந்த பார்ப்பன பாசிச ஜெயாவை முதலில் சென்னை உயர் நீதி மன்றத்தில் வெற்றி கொண்டோம், அடுத்ததாக அவர் ’உச்சிக்குடுமி மன்றத்தை’ நாடியுள்ளார், அவரை பின் தொடர்ந்து நாங்களும் டெல்லியில் காலடி வைத்திருக்கிறோம். இது நீதிமன்ற போராட்டம், இதில் வெற்றி பெறலாம் தோல்வியும் அடையலாம்! ஆனால், பலருக்கும் தெரியாத மக்கள் மன்றம் என்று ஒன்று இருக்கிறது, நாங்கள் அங்கேயும் போராடுகிறோம், மக்கள் மன்றத்தில் புரட்சியாளர்களுக்கு தோல்வி என்பதே கிடையாது, அங்கே வெற்றி மட்டும் தான்.


    சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி நாளை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னையில் காலை 10.30 மணிக்கு பள்ளிக்கல்வித்துறையின் முன்பு (எழும்பூர் DPI) ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது. பாசிச ஜெயாவின் இந்த மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்க்கக்கூடிய அனைவரும் ஒன்று சேருங்கள், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுங்கள்.

தொடர்பு எண் - 94448 34519

நன்றி:-  superlinks

1 கருத்து:

A.R.ராஜகோபாலன் சொன்னது…

அக்னி வார்த்தைகளில்இன்றைய
அரசியல்
அநாகரீகங்களை
அனாயாசமாக சொல்லும்
அற்புத அலசல்
அருமை

கருத்துரையிடுக