வெள்ளி, ஜூன் 10, 2011

கேள்விக்குறியாகும் கடலோர மக்களின் வாழ்வுரிமை.

கேள்விக்குறியாகும் கடலோர மக்களின் வாழ்வுரிமை. 

                                                                          -மு.சிவகுருநாதன் 

         சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தின் கொள்ளிடம் முதல் வேதாரண்யம் வரையிலான நீண்ட கடற்கரையோர கிராமங்களில் துறைமுகங்கள்,அனல் மின்நிலையங்கள் அமைக்கப்படுவதால் அப்பகுதி வாழ் மீனவர்கள்,தலித்கள்,விவசாயிகள் ஆகியோரின் வாழ்வுரிமைஇன்றுகேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
இபகுதிகளில்செட்டிநாடு அனல் மின்நிலையம் உள்ளிட்ட 11 அனல் மின் நிலையங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

         இவற்றை எதிர்த்து அனல் மின் நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம் சார்பில் இன்று (10 .06 .2011 )    தரங்கம்பாடியில் பட்டினிப்போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் அ.மார்க்ஸ், எஸ்.சுந்தர், அரங்க.குணசேகரன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிருந்து  வந்த மனித உரிமை ஆர்வலர்களும் இயக்கத்தோழர்களும் பங்கேற்றனர்.

        நாடெங்கும் கார்பரேட்களுக்கு ஆதரவாக அரசும் அரசு எந்திரமும் நிலம் கையகப்படுத்துவதற்காக செய்யும் அத்துமீறல்கள் குறித்தும்  இதனால் நசுக்கப்படும் 80 விழுக்காடு அடித்தட்டு பழங்குடி,தலித்,மிகவும் பிற்பட்ட,பிற்பட்ட மக்களின் உரிமைகள் பற்றியும்    பேசிய அ.மார்க்ஸ் இப்பிரச்சினை தொடர்பாக உண்மை அறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டு விரிவான அறிக்கை அளிக்கப்படும் என்றார். 

            இச்சமூகப்பிரச்சனை குறித்த கட்டுரையொன்று இப்பகுதியில் வெளியாகும்.இப்போராட்டத்தின் சில காட்சிகள் மட்டும் கீழே.

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக