வணிகவியலும் அர்த்த சாஸ்திரமும்
(தொடரும் அபத்தங்களும்,
குளறுபடிகளும்…)
மு.சிவகுருநாதன்
12 ஆம் வகுப்பு வணிகவியல் அலகு 10, அத்தியாயம் 26 இல் ‘நிறுமச் சட்டம்,
2013 - ஓர் அறிமுகம்’ எனும் பாடம் உள்ளது. அதன் முடிவுரையாக கீழ்க்கண்ட பத்தி
காணப்படுகிறது. ஆங்கில வழியில் இப்பத்தி முன்னுரையாகச் சொல்லப்படுகிறது. இதற்கான
தனிப்பட்ட காரணம் எதுவும் நமக்கு விளங்கவில்லை.
இதை எங்காவது வைத்துவிட்டுப் போகட்டும்! ஒவ்வொரு
பாட முகப்பிலும் திருக்குறள் ஒன்றை பொருளுடன் அச்சிட்டுள்ளனர். பாராட்டுவோம்! உலகப்
பொதுமறையான திருக்குறளை மட்டுமே இவ்வாறு செய்யமுடியும்; ஏனெனில் இவற்றிலுள்ள
பொதுமை, சமத்துவக் கருத்துகள் என்றால் அது மிகையில்லை.
இதற்குப் பதிலாக அர்த்த சாஸ்திரம், பகவத்கீதை,
வேதங்கள், இதர சாஸ்திரங்கள், ஸ்மிருதிகள் போன்ற எவற்றின் கருத்துகளை பாடத்தில்
நுழைக்க இடமில்லை என்பதே உண்மை. ஏனெனில் இவற்றின் சார்புகள், நீதி என்கிற பெயரில்
அநீதியான கருத்துகள், சூழ்ச்சி, தந்திரம் போன்ற மனிதர்களை பிளவுபடுத்தும்
நச்சுவிதைகளை கொண்டவை.
எனவே நமது பாடமெழுதிகள் முன்னுரை, முடிவுரை என
எங்காவது கிடைக்குமிடங்களில் நுழைந்து இந்த போலி அறங்களை உதிர்ப்பது
வாடிக்கையாகிவிட்டது. இந்த வகையில் எண்ணத்தக்கவைதான் இந்த முடிவுரையும்
முன்னுரையும்.
தமிழ் வழியில் ‘முடிவுரை’யாக
சொல்லப்படுபவை:
“நிறுமம்” (அ) “கழகம்” என்பது வியாபாரத்திற்கு புதிது அல்ல. இது நான்காம் நூற்றாண்டில் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே “அர்த்தசாஸ்திரம்” என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. ஒரு வியாபார நிறுமத்தை உருவாக்கி தொடர்ந்து நல்ல முறையில் இயங்கச் செய்திட வேண்டும் என்ற நோக்கம் தோற்றுவிப்பாளர்களுக்கும், நபர்களுக்கும் எண்ணங்கள் மாற்றும் கருத்தீர்கள் உருவாக
வேண்டும். நிறுமம் உருவாக்க பல படிநிலைகளை உருவாக்கி பதிவு செய்து
கடன் மற்றும் முதல் தொடர்பான நடவடிக்கைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.
அமைப்பு முறைச் சாசனம் மற்றும் செயல்முறை விதிகள் என்பன நிறுமத்தின்
மிக முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. செயல்முறை விதிகளில் கூறப்பட்டுள்ள விதிகள்
மற்றும் கொள்கைகள்
மூலம் மேலாண்மையின் உள்ளார்ந்த
நடவடிக்கை வியாபாரத்தோடு தொடர்பு உடையவனவாக இருக்க வேண்டும். இந்த இரண்டு
ஆவணங்களும் பதிவு செய்து பதிவாளரால் கையொப்பமிடப்படுகிறது. இது போன்று தகவல் அறிக்கையில் நிறுமத்தின் வைப்புகள், பங்களிப்பு, உரிமைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறிப்பாக இடம் பெற வேண்டும். கடன் பத்திரங்கள் போன்ற பிற பத்திரங்கள் நிறும வளர்ச்சிக்கு உதவுவதாக உள்ளது. (பக்.270)
ஆங்கில வழியில் ‘முன்னுரை’யாக
சொல்லப்படுபவை:
The concept of ‘Company’ or ‘Corporation’ in business is not new,
but was dealt with, in 4th century BC itself during ‘Arthashastra’
days. Its shape got revamped over
a period of time according to the needs of business dynamics. Company
form of business has certain distinct advantages over other forms
of businesses like Sole Proprietorship, Partnership etc. It includes
features such as Limited Liability, Perpetual Succession etc. (Page: 258)
“இது நான்காம் நூற்றாண்டில் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு
முன்பே”, என்ற சொல்ல வேண்டிய தேவையென்ன? கி.மு.நான்காம் நூற்றாண்டு என்று மட்டும்
சொன்னால் போதுமானதுதானே! ‘நிறுமம் (அ)
கழகம்’ குறித்து அர்த்த சாஸ்திரத்தில் சாணக்கியர் (கௌடில்யர்/விஷ்ணுகுப்தர்) என்ன
சொல்லியிருக்கிறார் என கொஞ்சம் விண்டுரைத்திருக்கலாம்.
“இந்த
நூல் (அர்த்த சாஸ்திரம்) பதினைந்து பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியையும்
மூன்றாவது பகுதியையும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவை எனக்கருதலாம். அவை பலரது
கைவண்ணத்தில் உருவானதாகத் தோன்றுகிறது. கிறித்துவ சகாப்தத்தின் தொடக்கத்தில் இந்த
நூல் அதன் இறுதி வடிவத்தை எய்திற்று”, என்கிறார் வரலாற்று அறிஞர் ராம் சரண் சர்மா.
(பக். 30, பண்டைக்கால இந்தியா - ஆர்.எஸ்.சர்மா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு)
அர்த்த சாஸ்திரத்தில் சாணக்கியர்
சொல்லிய மிகப்பிரபலமான வாசகங்கள் பலரும் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று. ஏனோ முதல்
நான்கை மட்டும் (சாம, தான, பேத, தண்ட) சொல்லி இறுதி மூன்றைத் தவிர்த்து விடுவர்.
- சாம – அமைதி, உடன்பாடு
- தான – அன்பளிப்பு, கையூட்டு
- பேத – மக்களைப் பிளவுபடுத்தல், உடைத்தல் மற்றும் எதிர்ப்பை உண்டாக்குதல்
- தண்ட – தண்டனை, தாக்குதல்
- மாய - மாயத் தோற்றம், சூழ்ச்சி, தந்திரம்
- உபேட்ச - எதிரியைப் புறக்கணித்தல்
- இந்திரஜால - பொய்களை உருவாக்குதல்
இதைப் பற்றிய விளக்கங்கள்
தேவையில்லை என்று நினைக்கிறேன். பங்கு வணிகத்தில் நிறுவன மதிப்பை உயர்த்திக்
காட்டிய ‘சத்யம் கம்யூட்டர்ஸ்’ ராமலிங்க ராஜூ ‘இந்திரஜால’ வகைப்படி அதாவது சாணக்கியரின்
அர்த்த சாஸ்திரப்படி செயல்பட்டவர்தானே! பிறகேன் வழக்கு, தண்டணை எல்லாம்?
அர்த்த சாஸ்திரம் உரைக்கும் சில ‘சட்டங்கள்’
- அபராதம் மூலம் பணம் பெறுவது அரசனின் உரிமையாகும். நீதி நூல்களில்கூட இல்லாத அளவில் சுமார் 350 தண்டங்களை அர்த்த சாஸ்திரம் பட்டியலிடுகிறது.
- காட்டையும் அரசனின் உரிமையாக்குகிறார் சாணக்கியர். யானைகள் பிற விலங்குகள் உலவும் காடுகள் எனவும் பிரிக்கிறார். மரங்கள், தோல், எலும்புகள், கொம்புகள், உலோகங்கள், கரி போன்றவற்றை சேகரிப்பது அரசனது கடமையாக வலியுறுத்துகிறார்.
- அரசுக் கருவூலத்தை நிரப்ப மக்களிடமிருந்து பரிசுப்பொருள்களைப் பெறுவது (pranaya) முக்கியம் என்பார். அதிக செல்வ வணிகர்கள் பயணத்தின்போது எதிரிகள், கொள்ளையர்களால் கொலை செய்யப்படுவதைப் போன்று செய்து அவர்களது சொத்துகளை அபகரிப்பதையும் கூறுகிறார்.
- பிராமணர்களுக்கு வரிகள், அபராதங்கள் விலக்கு பெற்ற நிலங்களைத் தானமாக (பிரம்மதேயம்) வழங்கப் பரிந்துரைக்கிறார்.
“மஹரத்தினா நிறுமங்கள்,
அ) தேசிய அணல் சக்தி கழகம்., (NTPC)
ஆ) எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கழகம்., (ONGC)
இ) இந்திய இரும்பு அதிகார லிமிடெட்.,
(SAIL)
ஈ) பாரத ஹெவி மின்னணு லிமிடெட்.,
(BHEL)
உ) இந்திய எண்ணெய் கழகம் லிமிடெட்.,
(IOCL)
ஊ) இந்திய நிலக்கரி லிமிடெட்., (CIL) (பக்.271)
“Maharatnas Companies,
1. National Thermal Power
Corporation (NTPC)
2. Oil and Natural Gas
Corporation (ONGC)
3. Steel Authority of India Limited
(SAIL)
4. Bharat Heavy Electricals Limited
(BHEL)
5. Indian Oil Corporation Limited
(IOCL)
6. Coal India Limited (CIL)
7. Gas Authority of India Limited
(GAIL)
8. Bharat Petroleum Corporation
Limited (BPCL)”, (Page: 270)
மகாரத்னா நிறுவனங்கள் 8 ஐ தமிழில்
6 ஆக்கிவிட்டனர். ஆங்கில வழியில் எட்டும் உள்ளது. இந்திய எரிவாயு ஆணையம், பாரத்
பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிட். ஆகியவற்றை விட்டுவிட்டனர். விரைவில் விற்கப்போவதை
குறிப்பால் உணர்த்தவாக இருக்கலாம்!
அது என்ன ‘அணல்’? (அனல்) ‘Steel
Authority’ – ‘இரும்பு அதிகாரம்’ ஆகிறது? (ஆணையம்) ‘Heavy Electricals’ – ‘ஹெவி மின்னணு’?!
என்னே! அருமையான மொழியாக்கம்! (இது மின்னணு அல்ல; ‘மிகு மின்’ மட்டுமே.)
அடுத்து ‘நவர்த்னாஸ் நிறுமங்களின்’
பட்டியல்,
“1. பாரத் எலக்ட்ரானிக்ஸ்
லிமிடெட் (BEL)
2. கன்டெய்னர் கார்ப்பரேசன் ஆஃப்
இந்தியா (CON-COR)
3. பொறியாளர்கள் இந்தியா லிமிடெட்
(EIL)
4. இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ்
கார்ப்பரேசன் லிமிடெட் (HAL)
5. இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன்
லிமிடெட் (HPCL)
6. மகாநகர் தொலைபேசி நிஜம் லிமிடெட்
(MTNL)
7. தேசிய அலுமினியம் நிறுமம்
8. தேசிய கட்டிட கட்டுமான கழகம்
(NBCC)
9. தேசிய கனிம மேம்பாட்டு கழகம்
(NMDC)
10. நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன்
லிமிடெட் (NLCIL)
11. ஆயில் இந்தியா லிமிடெட் (OIL)
12. பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேசன்
13. பவர் கிரிட் கார்ப்பரேசன் ஆஃப்
இந்தியா லிமிடெட்
14. ராஷ்ட்ரிய இஸ்பாட் நிகாம்
லிமிடெட்
15. கிராம மின்சாரமயமாக்கல்
கார்ப்பரேசன்
16. கப்பல் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா
(SCI)”, பக்.272)
“Navratnas Companies,
1. Bharat Electronics Limited (BEL)
2. Container Corporation of
India (CONCOR)
3. Engineers India Limited (EIL)
4. Hindustan Aeronautics Limited (HAL)
5. Hindustan Petroleum Corporation
Limited (HPCL)
6. Mahanagar Telephone Nigam
Limited (MTNL)
7. National Aluminium Company
(NALCO)
8. National Buildings
Construction Corporation (NBCC)
9. National Mineral
Development Corporation (NMDC)
10. Neyveli Lignite Corporation
Limited (NLCIL)
11. Oil India Limited (OIL)
12. Power Finance Corporation
13. Power Grid Corporation of
India Limited
14. Rashtriya Ispat Nigam Limited
15. Rural Electrification
Corporation
16. Shipping Corporation of India
(SCI)” (Page: 270)
இவற்றை ஆங்கிலத்தில் கொடுத்துவிடலாம். பாதி மொழிபெயர்ப்பு; மீதி
ஒலிபெயர்ப்பு என ‘மொழி வன்முறை’யில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்வது நலம். மகாநகர்
தொலைபேசி நிகம் ‘நிஜம்’ ஆகியுள்ளது.
அரசின் அதிகாரப்பூர்வ இணைய தளங்களில் உள்ள
புள்ளி விவரங்களின் படி இன்று 10 மகாரத்னா
நிறுவனங்களும் 14 நவரத்னா நிறுவனங்களும் உள்ளன.
மேற்கண்ட பட்டயலில் 5 மற்றும் 13 இல் உள்ள,
5.Hindustan Petroleum Corporation Limited (HPCL)
13.Power Grid Corporation of India Limited (PGCIL)
ஆகிய இரு நவரத்னா
நிறுவனங்கள் மகாரத்னா தகுதியைப் பெற்றுள்ளன. எனவே நவரத்னாவின் எண்ணிக்கை 14 ஆக
குறைந்துள்ளது. மகாரத்னா 10 ஆனது.
“பெரிய தனியார் நிறுமங்களில் பணியாற்றும் இந்திய வம்சாவழி தீவுகளின் ஆண்டு வருமானம் 10 கோடியிலிருந்து 20 கோடி இரண்டு ஆண்டுகளில் உயர்ந்துள்ளது இவ்வாறான
சம்பள
உயர்வு அவர்களின் பணி நலன்களை தூண்டுவதாக மேலும் கட்டாயப்படுத்துவதாக அமைகிறது. 2015
16 நிதியாண்டில் உயர்மட்ட நிர்வாகத்தில் பணியாற்றும் CEO மற்றும்
மேலதிகாரிகளின் சராசரி ஊதியம் சுமார் 19 கோடி ஆகும் மேற்கண்ட ஊதியம் அவருக்கு சேர
வேண்டிய சம்பள கழிவு படிகள் மற்றும் சலுகைகள் மேலும் தொழிலாளர்களுக்கான
பங்கு விருப்ப திட்டம் தொடர்புடைய பயன்கள் அனைத்தும் சேர்ந்தது இந்தியாவில்
மிக உயர்ந்த ஊதியம் பெறும் CEO பெயர் மற்றும் விவரங்களை தெரிந்து கொள்வது
சுவாரஸ்யமா?”, (பக்.291)
“As the salary of an average Indian
CEO at top listed private companies is doubling from Rs. 10 crore to Rs. 20 crore in just two years, it’s bound to trigger interests as we hope for a legitimate raise in our paychecks this year. The analysis of CEOs salaries in top listed companies for FY 2015-16 shows that the average remuneration paid to the top executives was approximately Rs. 19 crore. The payment includes their salary, commissions, allowances, value of all prerequisites and ESOPs (Employee Stock Ownership Plans) exercised during the year and all other benefits.
Wouldn’t it be interesting to know
who are these highest paid CEOs in India?” (Page: 270)
“As the salary of an average Indian
CEO at top listed private companies is doubling from Rs. 10 crore to Rs. 20 crore in just two years”, என்ற வரிகள், “பெரிய
தனியார் நிறுமங்களில்
பணியாற்றும் இந்திய வம்சாவழி தீவுகளின் ஆண்டு வருமானம் 10 கோடியிலிருந்து 20 கோடி இரண்டு ஆண்டுகளில் உயர்ந்துள்ளது”, என்று தமிழாகிறது. அது என்ன ‘இந்திய வம்சாவழி தீவுகள்’?
மொழிபெயர்ப்புகளில் அனைத்து வகுப்புப்
பாடநூல்களிலும் இதே சங்கடங்களை உணர வேண்டியுள்ளது. இதைத் தடுப்பது, தவிர்ப்பது
எந்நாளோ?
நிறுவன செயல் அதிகாரிகளின் (CEO) ஊதிய உயர்வு, “அவர்களின் பணி நலன்களை தூண்டுவதாக
மேலும் கட்டாயப்படுத்துவதாக அமைகிற”போது தொழிலாளர்களின் ஊதியம், பணிநிலை,
பாதுகாப்பு ஆகியன பற்றி யார் கவலைப்படுவது? இவர்களுக்கு அளிக்கும் உற்பத்தி, உழைப்பு
ஆகியவற்றைத் தூண்டாதா?
(அபத்தங்கள் தொடரும்…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக