வியாழன், ஏப்ரல் 09, 2020

தொடர்ந்துத் தவறிழைக்கும் துணிவு எங்கிருந்து வருகிறது?

தொடர்ந்துத் தவறிழைக்கும் துணிவு எங்கிருந்து வருகிறது?


 (தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)


மு.சிவகுருநாதன்

   (2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 75) 


  
7, 8 வகுப்புகளின் மூன்றாம் பருவப் பாடநூல்கள் ஒரு பார்வை:
   எட்டாம் வகுப்பு மூன்றம் பருவ அறிவியல் பாடநூலின் ‘தாவரங்கள் மற்றும் விலங்குகள்’ பாடத்தில், ‘Red Data Book of India’ என்ற் இரு பத்திகளையும் தமிழ் மற்றும் ஆங்கிலம் வழி வடிவங்களையும் அடுத்ததாக ‘google translate’ வடிவத்தையும் காணலாம்.

   “உலகின் நிலப்பரப்பில் 2.4% மட்டுமே உள்ள மிகவும் மாறுபட்ட நாடான இந்தியா,  45,000 க்கும் மேற்பட்ட தாவரங்கள் மற்றும்  91,000 வகையான விலங்குகள் உள்ளது.  நாட்டின் மாறுபட்ட அம்சங்கள் மற்றும்  காலநிலை காடுகள், ஈரநிலங்கள்,  புல்வெளிகள், பாலைவனங்கள், கடலோர  மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகள் போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளை உள்ளடக்கியது. அவை அதிக பல்லுயிர் பெருக்கத்தை வளர்த்து பராமரிக்கின்றன  மற்றும் மனித நல்வாழ்வுக்கும்  பங்களிக்கின்றன. உலகளவில் அடையாளம்  காணப்பட்ட 34 பல்லுயிர் வெப்பப்பகுதிகளில்  நான்கான, இமயமலை, மேற்குத் தொடர்ச்சி  மலைகள், வடகிழக்கு மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றை இந்தியாவில்  காணலாம்.

   சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்று அமைச்சகம் (MoEFCC) மூலம் 1969 ஆம்  ஆண்டில் இந்தியா ஐ.யூ.சி.என் மாநில  உறுப்பினரானது. ஐ.யூ.சி.என் இந்தியா நாட்டு  அலுவலகம் 2007 இல் புதுதில்லியில்  நிறுவப்பட்டது. இந்திய துணைக் கண்டத்தில்  காணப்படும் விலங்குகள் மற்றும் தாவரங்களின் பாதுகாப்பு நிலையை இந்திய சிவப்பு தரவு  புத்தகம் கொண்டுள்ளது.சுற்றுச்சூழல், வன  மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பெயரில் இந்திய விலங்கியல்  ஆய்வு மற்றும் இந்திய தாவரவியல்  கணக்கெடுப்பு நடத்திய ஆய்வுகள் இந்த  புத்தகத்திற்கான தரவை வழங்குகின்றன”. (பக்.118)


    “India, a mega-diverse country with only  2.4% of the world’s land area, accounts for  7-8% of all recorded species, including over  45,000 species of plants and 91,000 species  of animals. The country’s diverse physical  features and climatic conditions have resulted  in a variety of ecosystems such as forests,  wetlands, grasslands, deserts, coastal and  marine ecosystems which harbour and sustain  high biodiversity and contribute to human  well being. Four out of 34 globally identified  biodiversity hotspots, the Himalayas, the  Western Ghats, the North-East, and the  Nicobar Islands, can be found in India. 

    India became a State Member of IUCN in  1969, through the Ministry of environment,  Forest and Climate Change (MoEFCC). The  IUCN India Country Office was established  in 2007 in New Delhi. Red Data Book of India  contains the conservation status of animals  and plants which are found in the Indian  subcontinent. Surveys conducted by the  Zoological Survey of India and the Botanical  Survey of India under the guidance of the  Ministry of Environment, Forest and Climate  Change provide the data for this book”. (Page: 102)

   இந்த இரு பத்திகளும் ‘google translate’ இல் பின்வருமாறு  பெயர்கிறது. இதைத்தான் பாடநூல் எழுதுபவர்களும் மொழிபெயர்ப்பவர்களும் இந்த ‘காப்பியடிக்கும்’ உத்தியை மிகத்திறமையாகக் கையாண்டுள்ளனர்.

     உலகின் நிலப்பரப்பில் 2.4% மட்டுமே உள்ள மெகா-மாறுபட்ட நாடான இந்தியா, 45,000 க்கும் மேற்பட்ட தாவரங்கள் மற்றும் 91,000 வகையான விலங்குகள் உட்பட பதிவு செய்யப்பட்ட அனைத்து உயிரினங்களிலும் 7-8% ஆகும். நாட்டின் மாறுபட்ட உடல் அம்சங்கள் மற்றும் காலநிலை நிலைமைகள் காடுகள், ஈரநிலங்கள், புல்வெளிகள், பாலைவனங்கள், கடலோர மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகள் போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளை ஏற்படுத்தியுள்ளன, அவை அதிக பல்லுயிர் பெருக்கத்தைக் கொண்டுள்ளன மற்றும் பராமரிக்கின்றன மற்றும் மனித நல்வாழ்வுக்கு பங்களிக்கின்றன. உலகளவில் அடையாளம் காணப்பட்ட 34 பல்லுயிர் வெப்பப்பகுதிகளில் நான்கு, இமயமலை, மேற்குத் தொடர்ச்சி மலைகள், வடகிழக்கு மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றை இந்தியாவில் காணலாம்.

    சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) மூலம் இந்தியா 1969 இல் ஐ.யூ.சி.என் மாநில உறுப்பினரானார். ஐ.யூ.சி.என் இந்தியா நாட்டு அலுவலகம் 2007 இல் புதுதில்லியில் நிறுவப்பட்டது. இந்திய துணைக் கண்டத்தில் காணப்படும் விலங்குகள் மற்றும் தாவரங்களின் பாதுகாப்பு நிலையை இந்திய ரெட் டேட்டா புக் கொண்டுள்ளது. சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் இந்திய விலங்கியல் ஆய்வு மற்றும் இந்திய தாவரவியல் கணக்கெடுப்பு நடத்திய ஆய்வுகள் இந்த புத்தகத்திற்கான தரவை வழங்குகின்றன”. (நன்றி: google translate)

    இதில் சொல்வதற்கு என்ன இருக்கிறது? இதுவரை அடையாளம் காணப்பட்ட உலகப் பல்லுயிர்ப் பகுதிகள் 36 ஆகும். பாடப்பகுதி 34 என்கிறது. பாடங்களை ஆங்கிலத்தில் எழுதும்போது நிறைய பிழைகள்; அவற்றை google translate இல் மொழியாக்கி அதை அப்படியே திருத்தம் கூட செய்யாமல் copy – paste செய்வதால் இன்னும் கூடும் பிழைகள் என மிக மலினமானப் பாடநூல்கள் நமது குழந்தைகளின் கைகளில் இருக்கிறது. (எ.கா.) hotspots – வெப்பப்பகுதிகள், the  Zoological Survey of India and the Botanical  Survey of India - இந்திய விலங்கியல்  ஆய்வு மற்றும் இந்திய தாவரவியல்  கணக்கெடுப்பு நடத்திய ஆய்வுகள். நாம் என்ன செய்யப் போகிறோம்?


   உலக நிலப்பகுதியின் மொத்தப்பரப்பு 14,89,40,000 ச.கி.மீ.; இந்திய நிலப்பரப்பு 32,87,263 ச.கி.மீ.; இந்திய நிலப்பரப்பு உலகில் 2.2% தானே வரும்? எப்படி 2.4% ஆனது?

   “இந்தியாவின் நிலப்பரப்பு 32,87,263 ச.கி.மீ  ஆகும். இது புவியில் மொத்த பரப்பளவில் 2.4  சதவீதமாகும்”. (பக்.92, 10 சமூக அறிவியல தொகுதி 01) என்று எழுதுகிறார்கள். இது என்ன கணக்கு என்று தெரியவில்லை?

   இம்மாதிரியான திருட்டு, ஏமாற்று செயல்பாடுகளுக்கு கண்ணியமான மனிதர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். ஆனால் இங்கு நடப்பதென்ன? இதுவெல்லாம் தவறுகளே அல்ல, என்று ஆணவத்துடன் உரிய ஆதாரங்கள் காட்டுங்கள் என்று செயல்படுவதைப் பார்க்க முடிகிறது. எவ்வளவோ தரவுகளையும் கொடுத்தாயிற்று. பேரா. ச.மாடசாமி அவர்கள் கருத்துப்படி ‘நிரம்பி வழிபவர்களாக’ இருப்பதே இந்த அபத்தங்களுக்கு பெருங்காரணமாக அமைகிறது. இந்த ‘நிரம்பி வழிதல்’ கல்விக்கும் அறிவுக்கும் பேரிடர்.  


   தமிழக மாநில விலங்கான வரையாடு (Nilgiri Tahr)  நீலகிரி தர் (பக்.113) என்றும் நீலகிரி தரர் (பக்.114) சொல்லப்பட்டதை முன்பே பார்த்தோம். மாநில மலருக்கும் அதே கதிதான்!

சிங்கம் வால் குரங்கு பனிச்சிறுத்தை ஆசிய சிங்கம் நீலகிரி தர் (பக்.113)

“Lion tailed macaque Snow lepard Asiatic Lion Nilgiri Tahr”, (Page: 98)


“குடை மரம் பனிச்சிறுத்தை மலபார் லில்லி ஆசிய சிங்கம் ராஃப்லீசியா மலர் சிங்கம் வால் குரங்கு இந்திய மல்லோ இந்திய காண்டாமிருகம் முஸ்லி தாவரம் நீலகிரி தரர்” (பக்.114)

“Umbrella tree Snow Leopard Malabar lily Asiatic Lion Rafflesia flower Lion tailed macaque Indian mallo Indian Rhinoceros Musli plant Nilgiri Tahr”, (Page: 99)

  மேலே உள்ள பட்டியலில் மலபார் லில்லி (Malabar lily / Malabar glory
Lily / glory lily) எனப்படுவது எது தெரியுமா? மாநில மலரான செங்காந்தள் மலர் (Gloriosa superb) எனப்படும் காந்தள் மலர். இந்தக் கார்த்திகைப்பூச்செடியில் கிடைக்கும் கிழங்குகள் கார்த்திகைக்கிழங்கு, கலப்பைக்கிழங்கு, வெண்தோன்றிக் கிழங்கு, கண்வலிக்கிழங்கு என்று பல பெயர்களில் வழங்கப்படும். இது படர்கொடி வகையைச் சேர்ந்த தாவரம். மலர்களின் வண்ணத்தைப் பொறுத்து செங்காந்தள், வெண்காந்தள் என்றும் அழைப்பதுண்டு. இந்த மாநில மலரைத்தான்  மலபார் லில்லி என்று பாடநூல் சொல்கிறது. இது தமிழக மலர் மட்டுமல்ல; ஜிம்பாப்வே நாட்டின் தேசிய மலரும் கூட. 


  “பாலூட்டிகள்: புலிகள், சிங்கங்கள், கலைமான் மற்றும் பிளாக்பக் போன்ற மான், சிரு  (திபெத்திய ஆடு), கஸ்தூரி மான்,  காண்டாமிருகம், யானைகள், நீல திமிங்கலம்,  பறக்கும் அணில், காட்டுப் பூனைகள்”. (பக்.114)

  “Mammals: Wild cats such as tigers, lions,  deer such as chinkara and blackbuck, chiru  (Tibetan goat), musk deer, rhino, elephants,  blue whale, flying squirrel”. (Page: 99)

    மேலே கண்டவற்றுள் “கலைமான் மற்றும் பிளாக்பக் போன்ற மான், சிரு  (திபெத்திய ஆடு), கஸ்தூரி மான் (deer such as chinkara and blackbuck, chiru  (Tibetan goat), musk deer) ஆகியன அனைத்தும் மானினங்களே. chiru  (Tibetan goat) - சிரு  (திபெத்திய ஆடு) என பரிணாமடைந்திருப்பது வியப்பைத் தருகிறது.

    ‘சிரு’ (Chiru) என்றழைக்கப்படும்  மான் ‘Tibetan antelope’ என்ற வகையைச் சார்ந்தது. பாடநூல் குறிப்பிடுவது போல இது ஆடு அல்ல; மான். இது மறி மான் எனத் தமிழில் வழங்கப்படுகிறது. கவைக்கொம்பு மறிமான் என்றும் சொல்லப்படுகிறது. 

   ‘Black buck’ எனப்படும் புல்வாய் என்ற பெயருடன் திருகுமான், முருகுமான், வெளிமான் போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஒலிபெயர்ப்பதைவிட தமிழிப்பெயர்களை எழுதி ஆங்கிலப் பெயரை அடைப்புக்குறிக்குள் வழங்கலாம்.

   இந்த ‘Black buck’ மானை கருப்பு மான் என்றும் சொல்கின்றனர். ஆந்திரா, பஞ்சாப், அரியானா மாநிலங்களை இதை மாநில விலங்காக ஏற்றுள்ளன. மானை மாநில விலங்காக உடைய இந்திய மாநிலங்கள் அதிகம். அவைகள்:

  • உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் – பாரசிங்கா (Swamp deer) எனும் சதுப்பு நில மான்
  • ஒடிசா – மிளா மான் (sambhar) அல்லது கடமான்
  • ராஜஸ்தான் – சிங்கார மான் (Indian gazelle) அல்லது சிறுமான்
  • உத்தர்காண்ட் – கஸ்தூரி மான்  (Moschus moschiferus) எனும் கவரி மான் (தமிழிலக்கியத்தில் பேசப்படும் மான்)

   “ஏமன் பட்டாம்பூச்சி தமிழகத்தின் மாநில பட்டாம் பூச்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இனம் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படுபவை. மேற்கு தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படும் 32 பட்டாம்பூச்சி இணங்களில் இதுவும் ஒன்றாகும்”, (பக்.115)

   “Yeoman Butterfly has been  declared state butterfly of  Tamil Nadu. This species is  endemic to Western  Ghats. It is among  32  butterfly species  found in Western  Ghats”. (Page: 99)

  ‘Yeoman’ யோமன் ஏன் ஏமன் (Yemen) ஆகிறது? Yemen ஒரு நாட்டைக் குறிக்குமல்லவா? இப்பட்டாம்பூச்சிக்கும் ஏமனுக்கும் தொடர்புண்டா? Tamil Yeoman எனப்படும் இப்பட்டாம்பூச்சிக்கு மலைச்சிறகன், தமிழ் மறவன் பட்டாம்பூச்சி  என்றெல்லாம் சொல்லப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் Cirrochroa thais என்பதாகும்.

   உயர் சிந்தனை வினாக்களையும் (HOT) கண்டிப்பாக அறிந்து தெளிவது அவசியம்.

“1. Is it possible to fi nd Dinosaurs today?  Why?
2. Animals are affected by Deforestation. How?
3. Why did the numbers of Tiger and Black  buck decrease?”  (Page: 108)

“1. இன்று டைனோசர்களை கண்டுபிடிக்க முடியுமா? ஏன்?
2. காடழிப்பால் விலங்குகள் பாதிக்கப்படுகின்றவா? எப்படி?
3. புலி மற்றும் கருப்பு பக் எண்ணிக்கை ஏன் குறைகிறது?”, (பக்.126)

   கருப்பு பக் (Black buck) என்றால் என்ன? என்று விளங்கிக் கொள்ளாமல் எண்ணிக்கைக் குறைவது பற்றிச் சிந்திப்பது எப்படி?  காடழிக்கப்பட்டால் விலங்குகள் பாதிக்கப்படுமா என்ன? தாத்தா, அப்பா காலங்களில் இருந்த தாவரங்கள் இன்று இல்லை? இப்ப டைனோசரை கண்டுபிடிக்கணுமா?

     “காடழிப்பின் முக்கியத்துவத்தை எழுதுங்கள்”, (பக்.125) என்று வினா கேட்டாயிற்று. இதன் மூலம் இப்பாடத்தில் நோக்கத்தையும் எழுதியவர்களின் தாக்கத்தையும் ஒருசேர உணர முடிகிறது. 


 (அபத்தங்கள் தொடரும்…)

1 கருத்து:

Kasthuri Rengan சொன்னது…

நல்ல விழிப்புணர்வு பதிவு

கருத்துரையிடுக