சனி, ஏப்ரல் 04, 2020

இந்தியாவை நிரந்தர இருளில் மூழ்கடிக்கும் மோடி!

இந்தியாவை  நிரந்தர  இருளில் மூழ்கடிக்கும் மோடி!


   மு.சிவகுருநாதன்



(இது குறித்த எனது இரு பதிவுகளை இங்கு சேர்த்துப் பதிவிடுகிறேன்.)



மோடியால் நாட்டின்  மின் விநியோகம் குலையும் அபாயம்.



       மோடியின்  "லைட்டை ஆப் பண்ணு, விளக்கை ஏத்து", திட்டத்தால் மின் விநியோகத்தில் பிரச்சினை ஏற்படுமென்று  சொல்லப்படுகிறது.

         ஒரேடியாக   மின்சாரத்தை  நிறுத்தி,  மீண்டும் போடும்போது  Due to sudden drop of huge load in the grid lead to power collapse,  ஏற்பட வாய்ப்பு உண்டு.

      இதனால் மருத்துவமனை ICU  க்களில் இருக்கும் நோயாளிகள் பாதிக்கப்படுவர்.

    மின் கட்டமைப்பில் ஏற்படும் பழுதைச் சரிசெய்ய பல மணி நேரம் ஆகும் என்றும் சொல்லப்படுகிறது.


     இம்மாதிரியான கூத்துகளால் நல்லமுறையில் இருக்கும் ஊரடங்கு பாதிப்பதோடு மக்களும் தேவையற்ற இன்னல்களுக்கு உள்ளாகின்றனர்.

    இந்த முட்டாள்தனமான  நடவடிக்கைகளை நிறுத்த உச்சநீதிமன்றத்தை யாரேனும் அணுகில் தேவலாம். அங்கும் நீதி கிடைக்குமென்ற உத்தரவாதமில்லை.


    கொரோனாவைத் தடுக்க கைத்தட்டுவது, மணியடிப்பது, விளக்கணைப்பது, ஏற்றுவது போன்ற கூத்துகளெல்லாம் தீர்வுகள் அல்ல என்பதை மோடிக்கு யார்தான் புரியவைப்பது?


   என்று தணியும் இந்த வெறி?



இவ்வளவு இன்னல்களுக்கு மத்தியிலும் நாம் வெல்வோம்!


       மின் விநியோகத்தில் பிரச்சினை  ஏற்படப்போவது  ஒருபுறம்...

    ஆல்கஹால் கலந்த சானிட்டைஷரைப் பயன்படுத்திய பிறகு விளக்கேற்றும்போது தீ பற்ற வாய்ப்புள்ளது  மறுபுறம்...

இதற்காக,

லைட்டை மட்டும் அணைங்க.. பேன், டி.வி., ஏசி, ப்ரிட்ஜ் போன்ற மின் சாதனங்களை அணைக்க வேண்டாம்...

சானிட்டைஷர் கைகளை கழுவிவிட்டு கொளுத்துங்கள்...

என்று   கொரொனாவை அதிகமான விழிப்புணர்வுப் பரப்புரை...


தனி ஒருவரின் மூடத்தனம், அதிகார மமதையால் கொரொனாத் தடுப்பில் எவ்வளவு இடைஞ்சல்கள்...

இதனையும் தாண்டி வெல்வோம்...

மருத்துவர்கள்

செவிலியர்கள்

சுகாதாரப் பணியாளர்கள்

காவல்துறையினர்

தன்னார்வலர்கள்

அயராது உழைக்கும் அதிகாரிகள்

மக்கள் தலைவர்கள்

மக்கள் பிரதிநிதிகள்

இன்னும்...

எண்ணற்றோரின் உழைப்பு என்றும் வீண் போகாது...

இந்த இந்தியா ஆறாண்டில் கட்டப்பட்டத்தல்ல...

60 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக கட்டமைக்கப்பட்ட

இந்தியா வென்றே தீரும்...

நம்பிக்கையுடன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக